சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் பார்வை இழக்கும் அபாயம் உண்டு!!!

Posted By:
Subscribe to Boldsky

விழித்திரை என்பது கேமராவினுள் இருக்கும் காணப்படும் ஃப்லிம் போன்றது. நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் நம் கண்ணின் முன்புறம் உள்ள கார்னியா (Cornea) எனப்படும் விழிவெண்படலத்தின் வழியே சென்று,லென்ஸில் ஊடுருவிச் சென்று கண்ணின் பின்புறம் - உட்புறச் சுவரான விழித்திரையில் பிம்பம் பதிவாகிறது. மேலும் விழித்திரையின் மையப்பகுதில் உள்ள மாக்குலா (Macula) என்னும் பகுதி நுட்பமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதியாகும்.

பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்குத் தான் பார்வைக் குறைபாடு ஏற்படும் என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால் சர்க்கரை நோய்க்கு அடுத்தபடியாக பார்வை பறிபோவதற்கான காரணம் என்ன தெரியுமா? ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 ஆம் தேதி உலக ரெட்டினா தினமாக கொண்டாடப்படும் இந்நாளில் அதனைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விழித்திரை அவசியம் :

விழித்திரை அவசியம் :

எந்த ஒரு பிம்பத்தையும் பார்ப்பதற்கு விழித்திரை அவசியம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிரிக்கும்போது, விழித்திரைக்கு செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படும். ரத்தக்குழாய்களில் கசிவு ஏற்படும்.

புதிது புதிதாக ரத்தக்குழாய்கள் வளைர ஆரம்பிக்கும். அதனால் பார்வை மங்கலாகத் தெரியும்.ஒரு கட்டத்தில், ரெட்டினா முழுவதையும் மறைக்கும் அளவுக்கு ரத்தக் கசிவு ஏற்படும். இதனால், பார்வையே பறிபோய்விடும் அபாயமும் இருக்கிறது.

 யாருக்கெல்லாம் ஏற்படும் :

யாருக்கெல்லாம் ஏற்படும் :

நீண்ட காலம் சர்க்கரை நோயுடன், உயர் இரத்த அழுத்தமும் அதிக கொலஸ்ட்ரால் அளவும் இருப்பவர்களும், கர்ப்பமாக இருப்பவர்களும் விழித்திரை நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகமுள்ளது.

விழித்திரை நோயின் ஆரம்ப நிலையில் அறிகுறிகள் எதுவும் தெரியாது. நோய் தீவிரமடையும்போது, பார்வை மங்குதல், காட்சியில் புள்ளிகள் போன்று தெரிதல் அல்லது நிறங்களைப் பார்த்தறியும் திறன் குறைதல் அல்லது முழு பார்வையிழப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

விழித்திரை ரத்த நாள அடைப்பு :

விழித்திரை ரத்த நாள அடைப்பு :

விழித்திரை இரத்த நாள அடைப்பு (RVO) என்பது விழித்திரையில் ஏற்படும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். விழித்திரையிலிருந்து இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் ஒரு இரத்த நாளத்தில் ஏற்படும் அடைப்பால் இந்த நோய் உண்டாகிறது. நீரிழிவுசார் விழித்திரை நோய்க்கு அடுத்தபடியாக, பார்வை இழப்புக்கான இரண்டாவது பெரிய காரணமாக இந்நோய் விளங்குகிறது.

காரணம் :

காரணம் :

கண்களில் உள்ள ரத்த நாளங்கள் கடினமாவதாலும், அதில் கட்டிகள் உருவாதலுமே விழித்திரையில் ரத்த நாள அடைப்பு ஏற்படுகிறது. இரத்தக் குழாய்கள் சுருங்கியிருப்பவர்கள் அல்லது சேதமடைந்திருப்பவர்கள் அல்லது அப்படிச் சேதமடைய, சுருங்கக் காரணமாக இருக்கக்கூடிய நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு இத்தகைய அடைப்புகள் அதிகம் ஏற்படும்.

க்ளூக்கோமா, சர்க்கரை நோய்,உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, முதுமை, புகைப்பழக்கம் போன்ற காரணத்தால் இப்பிரச்சனை தோன்றிடும்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

பார்வை மங்குதல், விசித்திரமான வடிவங்கள் மிதப்பது போலத் தோன்றும், ஆங்காங்கே கருப்பு புள்ளிகள் தோன்றும். ஆரம்ப கால அறிகுறியான இதனை தக்க சமயத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் பார்வையே பறிபோகும் அபாயம் உள்ளது.

கடுமையான பாதிப்பு உள்ளவர்களுக்கு, இரத்த நாளத்தில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக ஏற்படும் அழுத்தத்தால் கண்ணில் வலி ஏற்படலாம்.

சிகிச்சை முறை :

சிகிச்சை முறை :

விழித்திரை இரத்தநாள அடைப்புகளைச் சரிசெய்வதற்கு சிகிச்சை எதுவும் இல்லை. RVO உண்டாவதற்கான காரணமாக இருக்கும் பிற நோய்களை கண்டறிந்து அவற்றைக் குணப்படுத்துவதும் இந்தப் பிரச்சனையால் மேலும் சிக்கல்கள் வராமல் தடுப்பதுமே இதற்கான சிகிச்சையின் நோக்கமாக இருக்கும்.

RVO பிரச்சனை உள்ளவர்கள், மேலும் சிக்கல்கள் வராமல் தடுக்க வேண்டுமானால் ஆரம்பத்திலேயே, தவறாமல் முறையாக பரிசோதனைகளைச் செய்துகொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும்.

தடுக்கும் முறை :

தடுக்கும் முறை :

இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் காரணிகள் RVO அபாயத்தைக் குறைக்கவும் உதவக்கூடும். அதுபோன்ற சில காரணிகள் உயர் இரத்த அழுத்தத்திற்கான முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது,

இரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, அதிக கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது,உடல் எடையை ஆரோக்கியமான அளவுக்குள் வைத்திருப்பது, புகைப்பிடிப்பதை தவிர்ப்பது, உடற்பயிற்சி செய்வது என உடலை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The most common causes of vision loss worldwide

The most common causes of vision loss worldwide