Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க
ஆரோக்கியம் மேம்பட நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றிய 7 உண்மைகள்!
ஆரோக்கியம் மேம்பட நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய உணவுகள் பற்றிய 7 உண்மைகள்!
கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என்பார்கள். நீங்கள் தினமும் ஏதேனும் விஷயத்தை கற்றுக் கொண்டே இருந்தால், உங்கள் உடலில் வயதாகும் செல்களில் தாக்கம் உண்டாகி நீங்கள் மற்றவருடன் ஒப்பிடுகையில் இளமையாக, சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள்.
நாம் தினமும் கற்றுக்க்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், நமது ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் உணவு பற்றிய விஷயங்கள் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் அல்லவா...!
இதோ! அன்றாடம் நீங்கள் கடந்து வரும் உணவுகள் பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய 7 உண்மைகள்!

சர்க்கரை, கொழுப்பு!
கொழுப்பற்ற (Fat Free), சர்க்கரை (Sugar Free) அற்ற என விற்கப்படும் எந்த ஒரு உணவு பொருளும் உங்களது ஆரோக்கியத்திற்கு சிறந்ததோ, உகந்ததோ அல்ல.

பூச்சி!
நீங்கள் உட்கொள்ளும் எந்த ஒரு பார் சாக்லேட்களிலும் குறைந்தபட்சம் பூச்சிகளின் எட்டு உடல் பாகமாவது இருக்கும். படிக்க அருவருப்பாக இருக்கலாம். ஆனால், இது தான் உண்மை.

கோலா பானம்!
உங்கள் சட்டையில் கிரீஸ் கறை ஏற்பட்டிருந்தால், கவலையை விடுங்கள். ஒரு பாட்டில் கோலா பானத்தை அதன் மீது ஊற்றி, டிடர்ஜன்ட் சேர்த்து, நீரில் முக்கி எப்போதும் போல துவைத்தல் கிரீஸ் கறை காணாமல் போய்விடும்.

உடல் பருமன்!
கடந்த முப்பது வருடத்தில், பதின் வயது நபர்கள் மத்தியிலான உடல் பருமன் சதவீதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. குழந்தைகள் மத்தியிலான உடல் பருமன் சதவீதம் இரட்டிப்பு மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களில் தான் நாம் வெள்ளை சர்க்கரை, வெள்ளை அரிசி, பாஸ்தா, பிட்சா, மைதா உணவுகள், துரித உணவுகள், சோடா பானங்கள் அதிகம் உட்கொள்ள ஆரம்பித்தோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.

கார்போஹைட்ரேட் உணவுகள்!
கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துக் கொள்வதால் உடல் எடை கூடுகிறது என சிலர் அதை தவிர்ப்பது உண்டு. ஆனால், கார்போஹைட்ரேட் இல்லது மனிதர்களோ, விலங்குகளோ உயிர்வாழ முடியாது. நமக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் கிடைக்கும் உணவுகள் சர்க்கரை, நார்ச்சத்து (ஃபைபர்) மற்றும் மாவுச்சத்து (ஸ்டார்ச்).

டோபமைன்!
உங்களுக்கு பிடித்த எந்த ஒரு விஷயம், பொருள் பற்றி எண்ணினாலும் டோபமைன் வெளிப்படும். உங்களை இன்பமாய் உணர வைக்கும் இந்த சுரப்பி
நீங்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது தான் அதிகம் வெளிப்படுகிறது.

சளி, மயக்கம்!
ஆரஞ்சில் இருக்கும் வைட்டமின் சி, உங்கள் உடலில் அதிகரிக்கும் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சளி மற்றும் மயக்கத்தை எதிர்த்து போராடும். எனவே, சளி, காய்ச்சல் காரணத்தால் உடல்நலம் குன்றும் போது ஆரஞ்சை எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications
