சூரிய ஒளி நம் மேல் படுவதால் ஏற்படும் உடல் நல நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைக்கு எல்லாரும் ஏசி அறையில் இருப்பதைத் தான் விரும்புகிறார்கள். காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை மிக குறைந்த அளவிலான நேரத்திற்கு மட்டும் தான் ஏசியில்லாமல் இருக்க முடிகிறது.

வெயில். பலரும் வெறுக்கும் காலம். ஆனால் இது சத்தமின்றி நம் உடல்நலனுக்கு எவ்வளவு பயன்களை அளிக்கிறது தெரியுமா? அதிக நேரம் சூரிய ஒளியில் நின்றால் அது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் அது உடல்நலனுக்கு என்னென்ன நன்மைகள் செய்கிறது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனநலம் :

மனநலம் :

சூரிய ஒளி உங்களிடம் அதிகப்படியான செரொடோனின் சுரக்கச் செய்திடும். இது சுரப்பது குறைவதால் தான் நாம் உற்சாகமின்றி சோகமாக, அல்லது எந்த விஷயமும் செய்ய விருப்பமின்றி இருக்கிறோம். இது மன அழுத்தத்திற்கும் வழி வகுக்கும்.

சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழித்தால் இந்தப் பிரச்சனை ஏற்படாது.

எலும்பு ஆரோக்கியம் .

எலும்பு ஆரோக்கியம் .

சூரிய ஒளியிலிருந்து நமக்கு விட்டமின் டி கிடைக்கிறது. இது எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. உணவு மூலமாக மட்டுமே நமக்கு தேவையான விட்டமின் டி எடுத்துக் கொள்ள முடியாது. அதற்காக சூரிய ஒளி படும்படி சிறிது நேரம் நிற்கலாம்.

நம்முடைய நிறத்திற்கு சூரிய ஒளி மட்டுமே காரணமல்ல, சூரிய ஒளியில் அதிக நேரம் செலவழித்தால் மட்டுமே உங்களுக்கு சருமப்பிரச்சனைகள் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறைந்த ரத்த அழுத்தம் :

குறைந்த ரத்த அழுத்தம் :

குறைந்த ரத்த அழுத்த பாதிப்பிலிருந்து மீள்வதற்கு சூரிய ஒளி துணை புரியும். நம்முடைய சருமத்தின் மேல் தோல் நைட்ரிக் ஆக்ஸைடினை சேமித்து வைத்திருக்கும். இது சூரிய ஒளி படும் போது நைட்ரிக் ஆக்ஸைடு ரத்த நாளங்களுக்குச் சென்று ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்தும்.

இதனால் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

ஆர்த்ரைட்டீஸ் :

ஆர்த்ரைட்டீஸ் :

சருமத்தில் தோன்றிடும் சில பிரச்சனைகளை நீக்ககூடிய ஆற்றல் சூரிய ஒளிக்கு உண்டு. அதோடு நோய் தொற்றிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.

ஆர்த்ரைட்டீஸ், மஞ்சள்காமாலை போன்ற பாதிப்புகளிலிருந்து தப்பிக்க அடிக்கடி சூரிய ஒளியில் பட வேண்டும்.

புற்றுநோய் :

புற்றுநோய் :

சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறைவாகத்தான் இருக்கும். சருமத்தில் ஏற்படும் புற்றுநோய் மட்டுமல்ல உள்ளுறுப்புகளில் ஏற்படும் புற்றுநோயின் தாக்கத்தை குறைக்க கூடிய ஆற்றல் சூரிய ஒளிக்கு இருக்கிறது

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Problems can solve with sunlight

Problems can solve with sunlight
Story first published: Friday, September 15, 2017, 16:31 [IST]
Subscribe Newsletter