உங்களுக்கு பைல்ஸ் உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில ஆரம்ப அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

சில உடல்நல பிரச்சனைகள் வாழும் வாழ்க்கையையே மிகவும் கஷ்டமாக்கும். அதில் ஒன்று தான் பைல்ஸ் என்னும் மூல நோய். சரி, மூல நோய் என்றால் என்ன? ஆசன வாயில் உள்ள நரம்புகள் வீக்கமடைவதால் ஏற்படுவதாகும்.

பொதுவாக கோடைக்காலத்தில் பைல்ஸ் பிரச்சனையால் நிறைய பேர் அவஸ்தைப்படுவார்கள். பைல்ஸ் பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை மேற்கொண்டால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். பலரும் தங்களுக்கு பைல்ஸ் உள்ளது என்றே தெரியாமல் உள்ளனர்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறி #1

அறிகுறி #1

ஒருவருக்கு பைல்ஸ் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளுள் ஒன்று மலம் கழிக்கும் போது இரத்தம் சேர்த்து வெளிவரும். இப்படி ஒரு அறிகுறியைக் கண்டால், சாதாரணமாக நினைக்காமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

அறிகுறி #2

அறிகுறி #2

ஆசன வாய் பகுதியை தொடும் போது, அவ்விடத்தில் ஏதேனும் வீக்கம் இருப்பதைக் கண்டால், பைல்ஸ் உள்ளது என்று அர்த்தம்.

அறிகுறி #3

அறிகுறி #3

மலம் கழித்த பின்னரும், நீங்கள் நிம்மதியாக உணரவில்லை என்றால், அதுவும் பைல்ஸ் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

அறிகுறி #4

அறிகுறி #4

முக்கியமாக ஆசன வாய் பகுதியைச் சுற்றி கடுமையான அரிப்பு ஏற்பட்டால், அது மூல நோய் உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

அறிகுறி #5

அறிகுறி #5

மலம் கழிக்கும் போது, சளியும் வெளியேறுவதைக் கண்டால், அதுவும் பைல்ஸ் இருப்பதற்கான அறிகுறியாகும்.

அறிகுறி #6

அறிகுறி #6

பல நாட்களாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்த பின், ஆசன வாய் பகுதியில் காயங்கள் மற்றும் சிவந்து இருப்பதோடு, உட்காரவே முடியாமல் தவித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

ஏன் பைல்ஸ் வருகிறது?

ஏன் பைல்ஸ் வருகிறது?

உங்களுக்கு பைல்ஸ் ஏன் வருகிறது என்று தெரியவில்லையா? இதோ பைல்ஸ் வருவதற்கான காரணங்கள்.

ஆயுர்வேத சிகிச்சை

ஆயுர்வேத சிகிச்சை

பைல்ஸ் பிரச்சனைக்கு ஆயுர்வேத முறைப்படி சிகிச்சை மேற்கொள்ள நினைக்கிறீர்களா? அப்படியெனில் இதோ பைல்ஸ் பிரச்சனைக்கான ஆயுர்வேத சிகிச்சை முறை...

மற்றொரு இயற்கை முறை

மற்றொரு இயற்கை முறை

மூன்றே வாரத்தில் பைல்ஸ் பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா? அப்படியெனில் இந்த முறையை முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Know If You Have Piles

How to know if you have piles? There are some initial signs and symptoms. Read on to know.
Subscribe Newsletter