உங்கள் மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத நாட்டு வைத்தியம்!!

Written By:
Subscribe to Boldsky

மலச்சிக்கல் என்பது இன்றைய காலக்கட்டங்களில் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் போதிய உடற்பயிற்சி இல்லாததால்தான்.. குறிப்பாக குழந்தைகள் ஓடியாடி விளையாடாமல் ஒரே இடத்திலேயே இருப்பதால் உடல் பருமன், மலச்சிக்கலால் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். குடலுக்கு நெகிழ்வுத்தன்மை வேண்டுமெனில் குனிந்து நிமிர்ந்த உழைப்பு வேண்டும்.

Home remedies to get rid of constipation

அதோடு வயிற்றை அடைக்கும் பிரட், துரித உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதால் இது தீராத பிரச்சனையாகி பைல்ஸ், முதற்கொண்டு பல நோய்களை தருகிறது.

அவ்வாறு நீங்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்படுகிறீர்களென்றால் இங்கே சொல்லப்பட்டிருக்கிருக்கும் குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள். நிச்சயம் பலனளிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செம்பருத்தி இலை :

செம்பருத்தி இலை :

தினமும் இருவேளை செம்பருத்தி இலைகளை பொடி செய்து சாப்பிட்டு வாருங்கள். மலச்சிக்கல் குணமாகும்.

மோர் :

மோர் :

மோருடன் இஞ்சி, கல்உப்பு, பெருங்காயம் கலந்து ஒரு டம்ளர் குடியுங்கள். இந்த மோரை உணவுடன் அதிகம் சேர்த்துக் கொள்வதால் குடல் தன்மை பாதுகாக்கப்பட்டு மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது.

கொய்யா பழம் :

கொய்யா பழம் :

கொய்யாப் பழத்தினை விதையுடன் உண்டு வந்தால் குடல் இயக்கம் சீராவதோடு, மலச்சிக்கலையும் தீர்க்கும். தினமும் ஒன்றை சாப்பிட்டவுடன் நீர் அருந்துவதை பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம் :

வெங்காயம் :

சின்ன வெங்காயத்தை விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகி நச்சுக்களும் வெளியேறும்.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு அரை மூடி , ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் மலச்சிக்கல் தீரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies to get rid of constipation

Home remedies to get rid of constipation
Story first published: Wednesday, February 1, 2017, 9:04 [IST]
Subscribe Newsletter