சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரிஞ்சா சாப்பிடாம இருப்பீங்களா?

Written By:
Subscribe to Boldsky

சிறுதானிய உணவுகள் நமது முன்னோர்களால் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டது. உணவே மருந்து என்பதற்கு உதாரணமாக திகழ்வது தான் இந்த சிறுதானிய உணவுகளாகும். ஆனால் இன்று நாம் தான் நாகரீகம் என்ற பெயரில் பிட்சா, பர்கர் என்று மேலை நாட்டு ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டோம்.

இந்த சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. இதன் மூலம் இருதய நோய் பாதிப்புகள் குறைகிறது. சரும பிரச்சனைகள், முடி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவை வருவதை தடுக்கவும் இந்த சிறுதானியங்கள் உதவுகின்றன. மொத்தத்தில் இந்த சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், அழகினை மேம்படுத்தவும் உதவியாக உள்ளது. இந்த பகுதியில் சிறுதானியங்களின் பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து பயன்பெருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுதானியங்கள்

சிறுதானியங்கள்

குதிரைவாலி, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, கம்பு, பனிவரகு, சோளம் போன்றவை சிறு தானிய உணவுகளாகும். இவை உங்களுக்கு அதிகமான ஆரோக்கியத்தை கொடுக்க கூடியது. இந்த சிறுதானிய உணவுகள் உங்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

1. ஊட்டச்சத்து

1. ஊட்டச்சத்து

உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் இந்த சிறுதானியங்களில் அதிகளவு நிறைந்துள்ளன. இது இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது. புற்றுநோய் வராமல் பாதுகாக்கிறது.

2. இரத்த சோகை

2. இரத்த சோகை

சிறுதானியங்களில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் இது இரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறது. இந்த சிறு தானியங்களில் கால்சியம் உள்ளதால் இது எலும்புகளை வலிமையாக்க உதவுகிறது.

3. கரோனரி இருதய நோய்

3. கரோனரி இருதய நோய்

சிறுதானியங்களை அதிக அளவு உட்க்கொள்வது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவினை குறைக்க உதவுகிறது. இவை இரத்த தட்டை அணுக்கள் தடிமனாவதை தடுக்கிறது. இதன் காரணமாக வாத நோய், கரோனரி தமனி பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் குறைகிறது.

4. விட்டமின் பி

4. விட்டமின் பி

சிறுதானியகளில் உள்ள விட்டமின் பி, கார்போஹைட்ரைடுகள் மற்றும் கொழுப்புகளை ஆற்றலாக மாற்றம் செய்ய உதவியாக உள்ளது. இது இரத்தத்தில் உள்ள ஹோமோசைஸ்டீன் அளவையும் குறைக்க உதவுகிறது. இதனால் கொழுப்பு கட்டிகள் வருவது குறைக்கப்படுகிறது.

5. இறைச்சியை விட சிறந்தது

5. இறைச்சியை விட சிறந்தது

சைவப்பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றால் அது இந்த சிறுதானிய உணவுகள் தான். ஏனெனில் அசைவத்திற்கு நிகரான புரதசத்து இந்த சிறுதானிய உணவுகளில் உள்ளது. ஆனால் அசைவ உணவுகளில் உள்ள நிறைவுற்ற கொழுப்பு, மற்றும் சில ஆரோக்கியமற்ற பொருட்கள் இந்த சிறுதானியங்களில் கிடையாது. மேலும் இவை செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

6. உடல் எடை குறைய

6. உடல் எடை குறைய

சிறுதானியங்களில் இருக்கும் டிரிப்டோபான் (Tryptophan) எனப்படும் அமினோ அமிலமானது, பசியின்மையை குறைத்து, உங்களது எடையை நிர்வாகிக்க பயன்படுகிறது. மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து உள்ள காரணத்தில் இது அடிக்கடி பசியாவதை தடுப்பதன் மூலமாக அதிகமாக சாப்பிடுவதையும் கட்டுப்பாட்டில் வைத்து நீங்கள் எடையை குறைக்க உதவியாக இருக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த சிறுதானிய உணவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

7. புற்றுநோய்

7. புற்றுநோய்

இந்த சிறுதானியங்கள் கோலன் புற்றுநோயிலிருந்து உங்களை பாதுகாக்க உதவி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக் மார்பக புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். சிறுதானிய உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 50% வரை குறைவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

8. உயர் இரத்த அழுத்தம்

8. உயர் இரத்த அழுத்தம்

சிறுதானிய உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும் இது ஆஸ்துமா, ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகளை உண்டாவதையும் தடுக்க பயன்படுத்தப்படுகின்றன.

9. தூக்கமின்மை

9. தூக்கமின்மை

சிறுதானியங்கள் தூக்கமின்மை குறைபாட்டினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஒரு மிகச்சிறந்த மருந்தாக இருக்கிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் ஒரு டம்ளர் அளவு சிறுதானியங்களை கொண்டு செய்யப்பட்ட கஞ்சிகளை குடிக்கலாம். அல்லது இரவில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக நிம்மதியான ஆழந்த தூக்கத்தை பெறலாம்.

10. தாய்ப்பாலை அதிகரிக்கிறது

10. தாய்ப்பாலை அதிகரிக்கிறது

கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்பாலூட்டும் பெண்கள் தங்களது உணவில் கேழ்வரகினை சேர்த்துக் கொள்வது என்பது மிகவும் சிறந்ததாகும். ஏனெனில் இது தாய்ப்பாலை அதிகரித்து, குழந்தைக்கு தேவையான அளவு தாய்ப்பாலை கொடுக்க உதவுகிறது.

11. மாதவிடாய் கால வலிகள்

11. மாதவிடாய் கால வலிகள்

சிறுதானியங்கள் மாதவிடாய் காலத்தில் உண்டாகும் முதுகு வலிகள் மற்றும் பிற வலிகளில் இருந்து பாதுகாக்க உதவியாக உள்ளது. எனவே பெண்கள் மாதவிடாய் காலத்திலாவது இந்த சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

12. சரும சுருக்கங்கள்

12. சரும சுருக்கங்கள்

சிறுதானியங்கள் சருமத்தின் நெகிழ்வுதன்மையை அதிகரிக்கிறது. இதனால் உங்களது சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவது குறைக்கப்படுகிறது.

13. முடி பிரச்சனைகளுக்கு

13. முடி பிரச்சனைகளுக்கு

சிறுதானியங்கள் முடி உதிர்வதை தடுக்க பயன்படுகிறது. முடியின் வேர்க்கால்களை வழுப்படுத்த உதவி செய்கிறது. இதனால் நீங்கள் நீண்ட நெடுங்கூந்தலை பெறலாம்.

14. இளநரை

14. இளநரை

சிலருக்கு இளமையிலேயே நரைமுடிகள் பிரச்சனைகள் வருகிறது. இந்த சிறுதானியங்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்டுகள் நரைமுடி பிரச்சனைகளுக்கு உதவுகிறது.

15.முகப்பருக்கள்

15.முகப்பருக்கள்

சிறுதானியங்கள் உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலமாக உங்களது சருமத்தில் முகப்பருக்களை வருவதை தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் வரும் சுருக்கங்களை சரி செய்யவும், தடுக்கவும் உதவியாக உள்ளது.

16. சரும நிறத்தை அதிகரிக்க

16. சரும நிறத்தை அதிகரிக்க

சிறுதானியங்களில் உள்ள விட்டமின் ஈ ஆனது சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது ஆகும். இந்த சிறுதானியங்களை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக உங்களது சருமத்தின் நிறத்தை மேம்படுத்தலாம். அதுமட்டுமின்றி வெளியில் செல்வதால், சூரியக்கதிர்கள் உங்கள் மீது பட்டு உண்டாகும் பாதிப்புகளில் இருந்து உங்களது சருமத்தை பாதுகாக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Grains

Health Benefits of Grains
Story first published: Tuesday, December 26, 2017, 11:30 [IST]