பித்தப்பை கற்களை விரைவாக கரைக்கவும், வராமல் தடுக்கவும் இதை சாப்பிடுங்க!

Written By:
Subscribe to Boldsky

நமது உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை.

சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது. இந்த பித்தப்பை கற்கள் எப்படி உண்டாகிறது.. அதனை தடுக்க என்ன சாப்பிட வேண்டும் என்னென்ன சாப்பிட கூடாது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 பித்தநீர்க் கற்கள்

பித்தநீர்க் கற்கள்

சாதாரணமாகத் திரவ நிலையில் உள்ள பித்தநீரில் சிலருக்கு மட்டும்தான் கற்கள் உருவாகின்றன. ஏன்? பித்தப்பையானது பித்தநீரின் அடர்த்தியை அதிகமாக்கும்போது, அதில் உள்ள பித்த உப்புகள் (Bile salts) அதன் அடியில் படியும். பித்த உப்புகள் என்பவை கொழுப்புத்தன்மை வாய்ந்தவை. அவை கொழுப்பால் ஆனவை. பார்ப்பதற்குப் படிகம் போலவே இருக்கும்.

இது சிறிது சிறிதாக வளர்ந்து, கடினமான ஒரு பொருளாக மாறி, கல்லாக உருமாறும். இந்தக் கற்கள் பார்ப்பதற்குச் சாதாரணக் கற்கள் போன்றுதான் தோற்றமளிக்கும். மென்மையாக இருக்கும். கல்லின் அளவும் எண்ணிக்கையும் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆண்களைவிட பெண்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகம் என்கிறது ஓர் ஆய்வு.

காரணங்கள் என்ன?

காரணங்கள் என்ன?

1. உடல் பருமன்

2. அசாதாரணமான உணவு வளர்சிதை மாற்றங்கள்.

3. பித்தநீர் அளவுக்கு அதிகமாகச் சுரப்பது.

4. பரம்பரைக் கோளாறு.

5. கொழுப்புள்ள உணவை அதிகம் உண்பது.

6. நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.

7. மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளை அதிகமாக உண்பது.

8. குறுகிய காலத்தில் உடல் எடை திடீரென அதிகமாவது.

9. ஹார்மோன் கோளாறு. குறிப்பாக, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பது.

10. பாக்டீரியா கிருமிகளின் தாக்குதல் காரணமாகப் பித்தப்பை அழற்சியும், அதைத் தொடர்ந்து பித்தநீர்த் தேக்கம் அடைவது மற்றும் பித்தப்பையில் அடைப்பு ஏற்படுவது.

11. கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் சாப்பிடுவது.

12. அடிக்கடி விரதம் இருப்பது.

13. கர்ப்பம்.

14. முறையான உடற்பயிற்சி இல்லாதது.

15. ‘சிக்கில் செல்' ரத்தசோகை.

 அறிகுறி 1:

அறிகுறி 1:

பித்தப்பைக் கற்களால் பாதிக்கப்படுவோருக்கு மூன்று விதமான அறிகுறிகள் காணப்படும். உணவு உண்ட பின்பு சிறிது நேரம் செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற உணர்வுடன் ஒரு வலி, வயிற்றின் மேல் பாகத்தில் அதாவது தொப்புளுக்கு மேலே தோன்றுவது ஒரு வகை.

அறிகுறி 2:

அறிகுறி 2:

இந்த வலியானது கடுமையாகிப் பல மணி நேரம் நீடித்து, குமட்டல், வாந்தி, ஏப்பம் போன்ற துணை அறிகுறிகளுடன் சிரமப்படுத்துவது அடுத்த வகை.

அறிகுறி 3:

அறிகுறி 3:

வலது புற விலா எலும்புகளைச் சுற்றி வந்து, முதுகுப்புறம் வரைக்கும் சென்று, தோள்பட்டைவரை வலி பரவும். இது மாரடைப்புக்கான வலி போலத் தோன்றும்.

அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்

அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம்

முக்கியமாகக் கொழுப்பு அதிகமுள்ள எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிட்டதும் இந்த வலி ஏற்படும், பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் அழற்சியை ஏற்படுத்துமானால் பாதிக்கப்பட்ட நபருக்கு முதுகுப்புறம் வரும். பித்தநீர்க் கற்கள் பித்தப்பையை அடைத்துவிடுமென்றால் நோயாளிக்கு மஞ்சள் காமாலை வரும். இதற்கு 'அடைப்புக் காமாலை' என்று பெயர்.

சிலருக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது. வேறு பாதிப்புகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யும்போது, பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவரும்.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில் உள்ள மிக முக்கியமான மூலக்கூறு கூர்குமின் ஆகும். இதன் மருத்துவ குணங்கள் மிக நீண்ட காலமாக அறியப்பட்டது ஆகும். தினமும் உங்களது உணவில் ஒரு டீஸ்பூன் முதல் ஒரு டேபிள் ஸ்பூன் வரையில் மஞ்சளை சேர்த்துக் கொள்ளுங்கள்..

அல்லது மிதமான சூடுள்ள பாலில் சிறிதளவு மஞ்சள், தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து பருகலாம். இதில் மிளகும் சேர்த்து பருகலாம்.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள்

உங்களது கல்லீரலில் உள்ள நச்சுக்களை அடிக்கடி சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதற்கு பிரஷ் ஆன எலுமிச்சை, தக்காளி, ஆப்பிள் போன்ற பழங்களை தினமும் சாப்பிடுங்கள்.

அடிக்கடி பழம் மற்றும் காய்கறிகளால் செய்யப்பட்ட ஜூஸ் வகைகளை பருகலாம். ஆப்பிள் ஜூஸ் பருகுவது கல்லீரலை சுத்தம் செய்யவும் கற்களை நீக்கவும் உதவுகிறது.

ஆரோக்கியமான கொழுப்புகள்

ஆரோக்கியமான கொழுப்புகள்

ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை உண்பதன் மூலமாக உங்களது உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறைக்கப்படுகிறது. இது பித்தப்பை கற்களை குறைக்கவும் உதவுகிறது. ப்ரூட் மற்றும் காய்கறி சாலட்டுகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காபி

காபி

காபியை குறைவாக பருகினால் ஆரோக்கியம் தான்.. தினமும் ஒன்று முதல் இரண்டு கப் காபிகளை பருகுவதன் மூலமாக உங்களுக்கு பித்தப்பை கற்கள் வராமல் பாதுகாக்கலாம். ஒரு கப் காபி குடிப்பதால் எந்த வித தீங்கும் உண்டாகாது. ஆனால் நீங்கள் காபி குடிப்பதை அதிகரிக்கும் முன்னர் மருத்துவரின் ஆலோசனையை பெறலாம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனைகள் வராமலும், கல்லீரலில் கற்கள் உண்டாகாமலும் காக்கும். மாம்பழம், ஆரஞ்ச், திராட்சை போன்ற பழங்களை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.

உணவை தவிர்க்க வேண்டாம்

உணவை தவிர்க்க வேண்டாம்

நீங்கள் அடிக்கடி சாப்பிடாமல் இருப்பது, அடிக்கடி விரதம் இருப்பது போன்றவைகளும் உங்களுக்கு கல்லீரலில் கற்கள் வர காரணமாக இருக்கலாம். எனவே தினமும் குறிப்பிட்ட இடைவெளிகளில் உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

உடல் எடை

உடல் எடை

உங்களது உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை பராமரித்து வாருங்கள். உடல் எடையை டயட் என்ற பெயரில் மிகவும் அதிகமாக குறைப்பதாலும் இந்த பித்தப்பை கற்கள் உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Have these Foods to Prevent Gall Stones

Have these Foods to Prevent Gall Stones
Story first published: Tuesday, December 12, 2017, 11:30 [IST]
Subscribe Newsletter