உங்களுக்கு ரத்த உறைவுப்பிரச்சனை இருக்கிறதா என்று கண்டுபிடிக்க எளிய வழி!

Posted By:
Subscribe to Boldsky

நம் உடலில் நம்மை எப்போதும் ஆச்சரியப்படுத்தும் விஷயங்கள் இருந்து கொண்டே தான் இருக்கின்றன. நமக்குத் தோன்றும் உணர்வுகள், அறிகுறிகள், செயல்படும் விதம் எல்லாமே ஒரு வியப்புக்குரிய விஷயம் தான். இதயம் துடிப்பது, பசி உணர்வு,காதல் உணர்வு,அதீத கோபம்,ருசி, வலி, காயங்கள் தானாகவே ஆறுவது, கருத்தரிப்பது என அடுக்கொண்டே போகலாம் இவற்றில் நீங்கள் சேர்க்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? ரத்தம் உறைதல்.

ஆம், இயற்கையாகவே ரத்தம் உறைவது என்பது ஆச்சரியமான விஷயம் தான். இது மட்டும் நிகழவில்லை என்றால் லேசான கீறல் ஏற்பட்டால் கூட ரத்தம் உறையாமல் அதிகப்படியான ரத்தம் வெளியேறி உயிருக்கே ஆபத்தாய் முடிந்திடும்.

Find out if you're at risk for a deadly blood clot.

அதே சமயம் அதிகப்படியாக உறைந்திடவும் கூடாது. அப்படியானால் ரத்த வோட்டம் இன்றி, பிற உறுப்புகளுக்கு தேவையான ரத்தம் கிடைக்காது அதுவும் ஆபத்து தான். அதனால் ரத்த ஓட்டம் என்பது எப்போதும் சீராக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரத்தம் :

ரத்தம் :

‘ரத்தம் உறைதல்' என்பது சொல்லிவைத்தது போல் ஒரு சங்கிலி வினையாக நிகழ்கிறது. கிழிபட்ட ரத்தக் குழாயிலிருந்து கொழுப்புப் புரதமும் பாஸ்போ புரதமும் இணைந்து, ‘திராம்போபிளாஸ்டின்' (Thromboplastin) எனும் புதுப் புரதமாக மாறுகிறது.

இது சில ரத்த உறைவுக் காரணிகளுடன் வினைபுரிந்து, ‘திராம்போகைனேஸ்' (Thrombokinase) எனும் புரதப் பொருளாக மாறுகிறது.

ரத்தக்கட்டி :

ரத்தக்கட்டி :

இந்த நேரத்தில், கல்லீரலில் இருந்து புரோத்ராம்பின் எனும் புரதப்பொருள், ரத்தச் சுற்றோட்டம் வழியாக அடிபட்ட ரத்தக்குழாய்க்கு வருகிறது.

அப்போது அங்குள்ள திராம்போகைனேஸ் கால்சியம் தாதுவுடன் இணைந்து செயல்பட்டு, புரோத்திராம்பினை ‘திராம்பின்' எனும் என்சைமாக மாற்றி விடுகிறது.

இது ரத்தத்தில் உள்ள ‘ஃபைப்ரினோஜன்' (Fibrinogen) எனும் புரதப்பொருளுடன் வினை புரிகிறது. இதன் பலனாக, பிசுபிசுப்பான, நீண்ட ‘ஃபைப்ரின்' இழைகள் உருவாகின்றன.

இவை ஒரு வலைப்பின்னலை உருவாக்குகின்றன. அந்த வலையில் தட்டணுக்கள், ரத்த அணுக்கள், பிளாஸ்மா முதலியவை சிறை பிடிக்கப்படுகின்றன.

பின்னர் இந்த வலையமைப்பு சுருங்கி, ஒரு ரத்தக்கட்டியாக உருவாகிறது. இந்த ரத்தக்கட்டிதான் கிழிபட்ட ரத்தக்குழாயை அடைத்து, ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கிறது.

இருமுனைக்கத்தி :

இருமுனைக்கத்தி :

ரத்த உறைவு என்பது இருமுனைக் கத்தி போன்றது. உடலிலிருந்து வெளியேறும்போது மட்டுமே ரத்தம் உறைய வேண்டும். ரத்தம் உடலில் சுற்றிக்கொண்டிருக்கும்போதே உறைந்துவிட்டால், ரத்த ஓட்டம் தடைபட்டு உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தாகிவிடும்.

என்னாகும் ? :

என்னாகும் ? :

இதயத் தசைகளுக்கு ரத்தம் கொடுக்கும் கரோனரி தமனி குழாய்களில் ரத்தம் உறைந்துவிட்டால், மாரடைப்பு நேரும். மூளைத் தமனிகளில் இது ஏற்பட்டால் பக்கவாதம் வரும்.

அறிகுறிகள் :

அறிகுறிகள் :

எடுத்தவுடனேயே உங்களுக்கு தீவிரமான அறிகுறியெல்லாம் தெரியாது. நாம் லேசாக கடந்து போகக்கூடியதாகவே அவை இருக்கும். லேசான கால் வலி,தசைப்பிடிப்பு,வீக்கம் போன்றவைத் தோன்றிடும்.

இதுவே ஒரு வாரத்திற்கும் மேல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள். இந்தப் பிரச்சனை யாருக்கெல்லாம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாம்.இப்பிரச்சனை யாருக்கெல்லாம் வருவதற்கு

அதிக எடை :

அதிக எடை :

அதீதமான எடை கொண்டவர்களுக்கு ரத்தம் உறைவுப் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் . உங்கள் எடைக்கு ஏற்றவாறு இப்பிரச்சனையின் தீவிரம் இருக்கும்.

அதே போல உடலுழைப்பு அதிகம் இல்லாமல் நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருந்தாலும் இப்பிரச்சனை உண்டாகும் என்பதால் எடை குறைவாக இருப்பவர்களும், சரியான எடையில் இருப்பவர்களும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது.

புகைப்பழக்கம் :

புகைப்பழக்கம் :

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தம் உறையும் வாய்ப்பு அதிகம். பொதுவாக புகைப்பழக்கம் இருந்தால் கல்லீரல் பாதிக்கப்படும் என்று தான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதையும் தாண்டி ஏராளமான பிரச்சனைகள் உண்டாகும்.

இது ரத்த நாளங்களை பாதித்து ரத்த ஓட்டத்தை சீர்குலைக்கிறது. இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திடும்.

கர்ப்பிணிகள் :

கர்ப்பிணிகள் :

இப்பிரச்சனை கர்ப்பிணிகளுக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு, இதற்கு முக்கியமான காரணம் ஹார்மோன் மாற்றங்கள் தான். குறிப்பாக ஈஸ்ட்ரோஜன் உங்கள் ரத்த நாளங்களில் அதிகமாக இருக்கும் என்பதாலும் வயிறு அபிரிதமாக பெரிதாவதாலும் இப்பிரச்சனை வருகிறது.

குழந்தை வளர வளர... அது வயிற்றில் இருக்கும் ரத்த நாளங்களை அழுத்துகிறது. இதனால் ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது.

மாத்திரை :

மாத்திரை :

குழந்தை தங்காமல் இருக்க, அல்லது அபார்ஷன் செய்ய என்று மாத்திரைகள் தொடர்ந்து எடுத்துக் கொள்பவராக இருந்தால் உங்களுக்கு ரத்த உறைவு ஏற்படுவதற்கு பிறரை விட நான்கு மடங்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

கால் வீங்குவது, மூச்சு வாங்குவது, அடிக்கடி லேசாக நெஞ்சு வலிப்பது போன்ற உணர்வு ஆகியவை தான் இவற்றிற்கு ஆரம்ப கட்ட அறிகுறிகள்.

தொற்று :

தொற்று :

மிகத்தீவிரமான நோய்களினால் ஏதேனும் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர் என்றால் கவனம். குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்பிரச்சனை அதிகம் ஏற்படும்.

மூளை,கர்பப்பை வாய்,வயிறு,கிட்னி,கல்லீரல் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் பாதிப்பு உண்டானவர்கள் இதனை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

நீண்ட நேரம் :

நீண்ட நேரம் :

அதிக உடலுழைப்பு இல்லாமல் நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பதும் இப்பிரச்சனைக்கு தூண்டுகோலாக இருக்கும். நீண்ட நேரம் பயணம் செய்கிறவர்கள்.

படுக்கையில் சிகிச்சையில் இருப்பவர்கள் ஆகியோருக்கு இப்பிரச்சனை உண்டாகும் வாய்ப்புகள் அதிகம்.

விமானங்களில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அப்படியே உட்கார்ந்திருக்காமல் அவ்வப்போது சற்று எழுந்து நடக்க வேண்டும்.

சீட்டில் இருக்கும்போது கை-கால்களை விறைப்பாக வைக்காமல் அடிக்கடி அசைத்து கொள்ள வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் மிகவும் அவசியமான ஒன்று.

மரபணு :

மரபணு :

உங்கள் வீடுகளில் பிறருக்கு அல்லது உறவுகளில் யாருக்கேனும் இப்பிரச்சனை ஏற்பட்டிருந்தால் கூட நீங்கள் உங்கள் உடலை அடிக்கடி கண்காணிப்பது மிகவும் அவசியமான ஒன்று.

இப்பிரச்சனை மரபணு ரீதியாகவும் உங்களை தாக்கும் என்பதால் ஆரம்ப கட்ட அறிகுறிகள் தெரியும் போதே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.

அனுபவம் :

அனுபவம் :

இந்த ரத்த உறைவு என்பது எடுத்ததுமே பெரும் பிரச்சனையாக இருக்காது. ஆரம்பத்தில் சின்ன சின்னதாக ரத்த உறைவுப்பிரச்சனை ஏற்படும். அது சில நிமிடங்களில் தானாக சமாளித்துக் கொண்டுவிடும், இப்படி உங்களுக்கு தொடர்ந்து ஏற்ப்பட்டால் உங்களுக்கு தீவிரமாக பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

இப்படி அடிக்கடி ஏற்படும் சிறிது நேரத்தில் தானாக சரியாகிடும் என்று நினைத்து லேசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Find out if you're at risk for a deadly blood clot.

Find out if you're at risk for a deadly blood clot.
Story first published: Saturday, November 25, 2017, 10:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter