கண் பார்வையை மேம்படுத்த செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்று ஏராளமானோர் பார்வை பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். இதற்கு காரணம் ஸ்மார்ட்போன், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்றவைகள் தான். எந்நேரமும் இவற்றில் உள்ள எழுத்துக்கள் மற்றும் படங்களை கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பதால், கண்கள் விரைவில் சோர்ந்து நாளடைவில் பார்வை மங்கலாக ஆரம்பிக்கின்றன.

8 Do's and Don'ts to Improve Your Eyesight

இந்த பிரச்சனைக்கு பலர் உடனே மருத்துவரிடமும் செல்லமாட்டார்கள். அதே சமயம், கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளையும் சாப்பிடமாட்டார்கள் மற்றும் கண் பயிற்சிகளையும் செய்யமாட்டார்கள். இது இப்படியே நீடித்தால், பின் பார்வை குறைபாடு ஏற்பட்டு, கண்ணாடி போடும் நிலைமை வந்துவிடும்.

இருப்பதிலேயே மிகவும் மோசமானது, பார்க்க கண்கள் இருந்தும் கண்ணாடி அணிந்தால் தான் எதுவும் தெரியும் என்பது தான். எனவே இந்த நிலைமை வராமல் இருக்க, ஆரம்பத்திலேயே கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உட்கொண்டு, கண் பார்வையை மேம்படுத்த செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகளை தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கண்களுக்கான ஊட்டம்

கண்களுக்கான ஊட்டம்

செய்ய வேண்டியவை

வைட்டமின் ஏ, வைட்டமின் சி, லுடீன் மற்றும் பீட்டா கரோட்டீன் நிறைந்த உணவுகள் கண்களை சரிசெய்ய உதவும். ஆகுவே காட் லிவர் ஆயில், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வெண்ணெய், பப்பாளி, ப்ளூபெர்ரி, ஆப்ரிகாட் மற்றும் திராட்சை போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

கீரையை எப்போதும் தவிர்க்கக்கூடாது. ஆகவே பசலைக்கீரை, சிறு கீரை, அரைக்கீரை போன்றவற்றால் வாரத்திற்கு 2-3 முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓய்வு

ஓய்வு

செய்ய வேண்டியவை

தினமும் போதிய ஓய்வு எடுங்கள். குறிப்பாக தினமும் குறைந்தது 7-8 மணிநேரம் தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் கண் தசைகளுக்குத் தேவையான ஓய்வு முழுமையாக கிடைக்கும்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

ஒரே வேலையில் நீண்ட நேரம் ஈடுபடாதீர்கள். 5-10 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

நீர் அவசியம்

நீர் அவசியம்

செய்ய வேண்டியவை

குடிக்கும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்பவர்கள் அதிகம் நீர் குடிக்க வேண்டும். அப்படி செய்தால் கண்கள் வறட்சி அடையாமல், சோர்வடையாமல் மற்றும் மங்கலாக தெரியாமல் இருக்கும்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

முகத்தை நீரில் கழுவ மட்டும் செய்யாதீர்கள். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போது வாயில் நீரை நிரப்பி, பின் கண்களைத் திறந்து நீரைத் துப்புங்கள். இதனால் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

பயிற்சி அவசியம்

பயிற்சி அவசியம்

செய்ய வேண்டியவை

கண்கள் ஆரோக்கியமாக இருக்க அவ்வப்போது கண் பயிற்சியை செய்ய வேண்டும். அதுவும் உள்ளங்கைகளை ஒன்றாக தேய்த்து வெப்பமூட்டி, பின் கண்களின் மீது வைக்க வேண்டும். இதனால் கண்கள் ரிலாக்ஸ் ஆகும்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

கண் பயிற்சியை செய்யும் போது ஒளியை அனுமதிக்காதீர்கள். முக்கியமாக இந்த கண் பயிற்சிகளை கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

பழங்கள்

பழங்கள்

செய்ய வேண்டியவை

பீட்டா கரோட்டீன் கேரட்டுகளில் மட்டுமின்றி, ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் இருக்கும். எனவே கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

ஒமேகா-3 உணவுகளைத் தவிர்க்கக்கூடாது. முக்கியமாக நட்ஸ் மற்றும் மீன்களில் அதிகம் இச்சத்து உள்ளது. இந்த சத்து ரெட்டினாவின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வயதான காலத்தில் ஏற்படும் பார்வை குறைபாட்டைத் தடுக்கும்.

'நோ' சொல்லுங்கள்

'நோ' சொல்லுங்கள்

செய்ய வேண்டியவை

சர்க்கரை உணவுகள் கண்களுக்கு மிகவும் மோசமானது. எவ்வளவுக்கு எவ்வளவு சர்க்கரை சாப்பிடுகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கண் பார்வை மோசமாகும்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

புகைப்பழக்கம் அறவே கூடாது. ஏனெனில் இப்பழக்கம் இருந்தால் வயதான காலத்தில் மாகுலர் திசு சிதைவு நோய், கண் புரை மற்றும் கண் நரம்பு பாதிப்பு போன்ற பிரச்சனைகள் கட்டாயம் வரும்.

கண்களுக்கான ட்ரிக்ஸ்

கண்களுக்கான ட்ரிக்ஸ்

செய்ய வேண்டியவை

கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்கள், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை குறைந்தது 20 நொடிகள் 20 அடி தொலைவில் உள்ள பொருளைப் பாருங்கள். இதனால் கண்கள் ரிலாக்ஸ் ஆவதை நன்கு உணர முடியும்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைலைப் பார்க்காதீர்கள். மேலும் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் திரையின் வெளிச்சத்தையும் குறைத்துக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம் குறையும்.

பெர்ரி ஸ்பெஷல் டிப்

பெர்ரி ஸ்பெஷல் டிப்

செய்ய வேண்டியவை

பில்பெர்ரி பழத்தில் உள்ள அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கண்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சரியான பாதுகாப்பை வழங்கும்.

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

ஒருவேளை நீங்கள் கண்ணாடி அணிபவராயின், அந்த கண்ணாடி அணிவதைத் தவிர்க்க, பில்பெர்ரி பழத்தை அடிக்கடி சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Do's and Don'ts to Improve Your Eyesight

Here we have listed tips and tricks that are designed to strengthen your natural eyesight, and help take care of your eyes in a matter of minutes.