For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண் உடலில் இருக்கும் அவசியமற்ற உடல் பாகங்கள்!!

|

நம் உடலில் சில பாகங்கள் எப்போதும் எந்த செயலாற்றலும் இன்றி, பயனின்றி இருக்கும். அவை ஏன் இருக்கிறது, இதன் பயன்பாடு என்ன என்பது பற்றி ஆய்வாளர்கள் அவ்வப்போது மண்டையை குழப்பிக் கொண்டு ஆராய்ச்சியில் குதிப்பது உண்டு. அப்படி ஆண்களின் உடலில் அவசியமின்றி இருக்கும் உறுப்புகள் என ஓர் பட்டியலிட்டு, அது ஏன் இருக்கிறது? இதனால் உடலுக்கு என்ன அவசியம் என்று சில விளக்கங்களும் தந்திருக்கின்றனர்.

நிப்பிள்ஸ், அக்குள் முடி, புருவங்கள், உள்நாக்கு, ஆண்குறி மேல்தோல், ஞானப் பற்கள் என இவை அவசியமற்று உடலில் இருப்பினும் கூட இதனால் உடலுக்கு சில பயன்கள் இருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளித்துள்ளார்கள். அவற்றை பற்றி இனிக் காண்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிப்பிள்ஸ்

நிப்பிள்ஸ்

ஆண் மற்றும் பெண் உடல் கூற்றில் மார்பு பகுதியில் நிப்பிள்ஸ் இருப்பது இயற்கை. பெண்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட நிப்பிள்ஸ் பயன்படுகிறது. ஆனால், ஆண்களுக்கு ஏன்? உடற்கூறு வகையில் இது பொது எனிலும் கூட, பெண்களுக்கு இருக்கும் ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் இல்லாததால், ஆண்களுக்கு எந்த பயனுமின்றி வெறும் உடல் உறுப்பாக நிப்பிள்ஸ் இருக்கிறது.

அக்குள் முடி

அக்குள் முடி

அக்குள் பகுதிகளில் ஏன் முடி வளர்கிறது என்பதற்காக உறுதியான கதை எதுவுமில்லை. நம் உடலில் இரண்டு வகையான வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை, "Eccrine" மற்றும் "Apocrine" ஆகும். இவை அதிகமாக அக்குள் பகுதிகளில் தான் இருக்கின்றதாம். இதில் Apocrine என்பது பாலியல் சிக்னல் தரவல்லது ஆகும். மறைமுகமாக அக்குள் முடி மூலமாக அந்த வாசம் மெல்ல உங்கள் துணையை ஈர்க்கிறது என ஹார்வர்ட் பல்கலைகழக பேராசிரியர் டேனியல் கூறுகிறார்.

புருவங்கள்

புருவங்கள்

பல காலமாக புருவங்கள் ஏன் இருக்கின்றன என்ற பேச்சு ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சிலர் இது கண்ணுக்குள் வியர்வை அல்லது மழைநீர் செல்லாமல் தடுக்க உதவுகிறது என கூறினும், உண்மையில் புருவம் இல்லை என்றால் ஒரு நபரின் தோற்றத்தை கண்டறிவது மிகவும் கடினம் என்பதே உண்மை.

குடல்வளரி (Appendix)

குடல்வளரி (Appendix)

குடல்வளரி என்பது ஓர் பயனற்ற உறுப்பாகும். மனிதர்கள் சமைக்காத மற்றும் புள் போன்ற உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திய பிறகு இது பயனற்று போனதாக குறிப்பிடுகிறார்கள். சில சமீபத்திய ஆய்வுகளில் ஆரோக்கிய பாக்டீரியாக்களுக்கு இது அத்தியாவசியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உள்நாக்கு வளர்ச்சி

உள்நாக்கு வளர்ச்சி

உள்நாக்கு என்பது, நிணநீர் மண்டலதின் ஓர் நிணநீர் கணுக்கள் ஆகும். இது நோய் எதிர்ப்புக்கு மிகவும் முக்கியமானது . நமது வாய்வழி குழி தான் உடலின் உட்செல்லும் பகுதி. இதன் மூலமாக கிருமிகள், நச்சுக்கள் உட்செல்ல நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. சில சமயங்களில் இதனால் உள்நாவில் தொற்று ஏற்பட்டால் அதை அகற்றிவிடுவார்கள்.

ஞானப் பற்கள் (Wisdom Teeth)

ஞானப் பற்கள் (Wisdom Teeth)

தற்போதைய தலைமுறையினர் பலருக்கு இந்த ஞானப் பற்கள் வருவது இல்லை என கூறப்படுகிறது. முன்பு போல இப்போது கடினமான உணவகளை சாப்பிடுவது இல்லை என்பதால் தாடை போதுமான அளவு பயன்படாமல் ஞானப் பற்கள் முளைப்பது இல்லை என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மேல்தோல்

மேல்தோல்

மேல்தோல் ஆணுறுப்பில் இருந்து தனித்து வர சில வருடங்கள் தேவைப்படுகிறது. இதுவும் அவசியமற்றது என எண்ணினாலும், ஆண்குறியில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க இது பயனளிக்கிறது. மேலும் ஆடைகளோடு உராய்வு ஏற்பட்டு காயங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Useless Body Parts Of Men

Why Do Men Have Nipples?And an explanation for six other ‘useless’ body parts, take a look.
Desktop Bottom Promotion