Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும்
கடுமையான ஒற்றைத் தலைவலியால் கஷ்டப்படுறீங்களா? அதைத் தடுக்க இதோ சில எளிய வழிகள்!
ஒற்றைத் தலைவலி என்பது ஒரு நரம்பியல் நோயாகும். ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சனை இருந்தால், அவரால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாது. இந்த ஒற்றைத் தலைவலியானது மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருப்பது, பரம்பரை மற்றும் புகைப்பிடித்தல் போன்றவற்றால் வரக்கூடும்.
ஒற்றை தலைவலி வந்தால், அத்துடன் வாந்தி, தாங்க முடியாத அளவிலான கடுமையான ஒருபக்க தலைவலி, கண்களை திறக்க முடியாத அளவில் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் வலியை சந்திக்க நேரிடும். ஆனால் இந்த ஒற்றை தலைவலியை ஒருசில வழிகளின் மூலம் தடுக்க முடியும். இங்கு அந்த எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஒற்றைத் தலைவலியைத் தடுக்கலாம்.

உணவைத் தவிர்க்காதீர்கள்
எவ்வளவு வேலை இருந்தாலும், உணவை மட்டும் தவிர்க்கக்கூடாது. அப்படி தவிர்த்தாலோ அல்லது மிகவும் குறைவாக உணவை உட்கொண்டாலோ, அதனால் ஒற்றை தலைவலி ஆரம்பமாகிவிடும். ஆகவே ஒற்றை தலைவலி உள்ளவர்கள், உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், ஒற்றைத் தலைவலியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம். அதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சியை செய்ய வேண்டாம். மிதமான அளவில் தினமும் மேற்கொண்டு வந்தாலே, தலைவலி வருவதைத் தடுக்கலாம்.

காப்ஃபைன்
காப்ஃபைன் நிறைந்த பானங்களை அளவுக்கு அதிகமாக குடித்தாலும், ஒற்றை தலைவலி வரக்கூடும். எனவே காப்ஃபைன் நிறைந்த பானங்களை அதிகமாக குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பிரகாசமான ஒளியைத் தவித்திடுங்கள்
கண்கள் கூடும் அளவிலான ஒளியை காண நேரிட்டால், ஒற்றைத் தலைவலி ஆரம்பமாகக்கூடும். எனவே எந்த ஒரு ஒளியையும் நேரடியாக காண்பதைத் தவிர்த்திடுங்கள்.

நல்ல தூக்கம்
தினமும் சரியான நேரத்தில் தூங்கி எழ வேண்டும். குறிப்பாக ஒற்றை தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் தினமும் குறைந்தது 7 மணிநேர தூக்கத்தைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

மன அமைதி
மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு தியானம், யோகா போன்றவற்றை தினமும் மேற்கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications
