உங்கள் உடலில் அமில-காரம் சம நிலை இல்லாமலிருந்தால் உண்டாகும் விளைவுகள்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

நமது உடலில் அமிலத்தன்மையோ, காரத்தன்மையோ அதிகம் அல்லது குறைவானால் வளர்சிதை மாற்றங்கள், ஜீரண சக்தி, என்சைம்களின் செயல்கள், செல்களின் செயல்கள், என ஒட்டு மொத்த உடலின் இயக்கமும் பாதிக்கப்படும் உடலில் அமிலம் மற்றும் காரம் (உப்பு) சம நிலையில் இருக்க வேண்டும். அதைத்தான் pH பேலன்ஸ் என்று சொல்வோம்.

பொதுவாக காரத்தன்மை அதிகமாக இருந்தால், ஜீரண சக்தி குறைந்துவிடும். எல்லா உறுப்புகளும் மந்தத் தன்மையுடன் இருக்கும்.

அதேபோல் அமிலத்தனமை அதிகரித்தால் என்சைம்கள் செயல்கள் பாதிக்கும். சிறு நீரகம், தோல், கல்லீரல் ஆகியவை மடங்கு வேலை செய்ய வேண்டியது வரும் மற்றும் பல விளைவுகள் ஏற்படும். இதனால் உண்டாகும் பின்விளைவுகள் தெரிந்து கொள்ளலாமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சத்துக்கள் குறையும் :

சத்துக்கள் குறையும் :

உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும். ரத்தத்தால் சத்துக்களை உறிய முடியாமல் போய்விடும். இதனால் தசைகள் பலவீனமடைந்து வலி ஏற்படும்.

உடல் பருமன் :

உடல் பருமன் :

கொழுப்பு செல்கள் அதிகரிக்கும். சிறு நீரகம், தோல், குடல் என எல்லாமே அதிக வேலைகளைச் செய்ய வேண்டியது வரும்.

பற்கள் பலஹீனம் :

பற்கள் பலஹீனம் :

உடலில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும்போது, அதனை சமன் படுத்த உடல் தன்னைத் தானே ரிப்பேர் செய்ய முயற்சிக்கும். இதன் விளைவாக பற்கள் மற்றும் எலும்பிலிருந்து கால்சியம் போன்ற மினரல்களை எடுத்துக் கொள்ளும். இதன் விளைவாக பற்கள் பலவீனமடையும்.

எலும்பு தேயும் :

எலும்பு தேயும் :

பற்களில் எடுப்பது போலவே எலும்புகளிலிருந்தும் கால்சியத்தை உடல் எடுத்துக் கொள்ளும். இதனால் எலும்பு பலஹீனம்டைந்து அஸ்டியோஃபோரோஸிஸ், ஆர்த்ரைடிஸ் போன்ற பிரச்சனைகளை தரும்.

முகப்பரு மற்றும் சரும பிரச்சனைகள் :

முகப்பரு மற்றும் சரும பிரச்சனைகள் :

சிறு நீரகம் நச்சுக்களை வெளியேற்ற சிரமப்படும். இதனால் நச்சுக்கள் உள்ளேயே தங்கி அதன் விளைவை முதலில் சருமத்தில் ஏற்படுத்தும். அதனால் கடுமையான முகபப்ருக்கள், சரும பாதிப்புகள் உண்டாகும்.

தூக்கமின்மை :

தூக்கமின்மை :

கால்சியம் குறைபாடு மற்றும் நரம்புகளின் செயல்களில் உண்டாகும் மாற்றங்களால் தூக்கம் வராமல் அவதிப்பட நேரிடும்.

மூட்டு வலி :

மூட்டு வலி :

அமிலம் அதிகமாக இருந்தால் மூட்டு இணைப்புகளில் விறைப்புத் தன்மை உண்டாகி, ரத்த ஓட்டத்தை தடைபடுத்தும். இதனால் மூட்டு வலி உண்டாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

உங்களுக்கான சிறந்த ஹெல்த் இன்சூரன்ஸ் எது, ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள்!

English summary

Signs that Indicate Your Body is Too Acidic.

What Will happen If your body is not maintained pH balance
Subscribe Newsletter