Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண், காரணம் என்ன?
இருபது வயதே நிரம்பிய அழகிய பெண். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது.
தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார் நிக்கோல். ஒருமுறை உறங்கினால் இவர் எழுந்திருக்க மாதங்கள் ஆகின்றன.
கே.எல்.சி என்பது Kleine-Levin Syndrome (KLS) என்பதை குறிப்பது ஆகும். இதுவொரு அரியவகை உறக்கம் சார்ந்த குறைபாடு.
இதையும் படிங்க: இளம் பெண்ணின் மூளைக்குள் பல், முடி, எலும்புகளுடன் வளர்ந்த ஓர் விசித்திர ஜந்து!!!
இந்த நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு 24 மணிநேரம் உதவ ஓர் நபர் தனியாக நியமிக்கப்பட வேண்டும். நிக்கோல் பாதிக்கப்பட்டுள்ளது இந்த பாதிப்பால் தான்.

ஆறு வயதில்...
முதல் முறையாக நிக்கோலுக்கு இந்த பாதிப்பு உள்ளது என்பதை இவரது ஆறு வயதில் தான் உணர முடிந்தது.
ஆறு வயதில் நிக்கோல் ஒருநாளுக்கு 18 மணி நேரம் உறங்கும் தன்மை கொண்டார். இங்கு தான் நிக்கோலின் தாய்க்கு சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.

சங்கடங்கள்!
அந்த சின்ன வயதில் தனக்கு என்ன நேர்கிறது என்பது கூட நிக்கோலுக்கு தெரியாது. தூங்கி எழும் போது தனது தாய், உறவினர் போன்றவர்களை கண்டு உணரவே இவருக்கு சற்று சிரமமாக இருந்துள்ளது.

14வது பிறந்தநாள்
நிக்கோலின் 14வது பிறந்தநாளின் போது தான் ஓர் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தேங்க்ஸ் கிவ்விங் நாளின் போது உறங்கிய நிக்கோல் அடுத்த ஜனவரி மாதம் தான் எழுந்தார்.
இடையே என்ன நடந்தது என்பது இவருக்கு ஒன்றுமே தெரியாது.

25 மாத சிகிச்சை!
நிக்கோலின் இந்த மயக்கநிலை உறக்கம் சார்ந்த குறைபாட்டிற்கு 25 மாதகாலம் எடுத்துக் கொண்டு சிகிச்சை அளித்தனர் மருத்துவர்கள்.
பொதுவாக நிக்கோல் நீண்டநாள் உறங்க போகிறார் என்பதை அவருக்கு திடீரென வரும் தலைவலி மற்றும் மந்தமான நிலையை வைத்து அறிந்துக்கொள்ள முடியுமாம்.

22 - 64 நாட்கள்!
இதுபோல இவர் உறங்கும் போது சராசரியாக 22-64 நாட்கள் வரை உறங்குவராம். இந்த இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து நிக்கோலுக்கு ஒன்றுமே தெரியாது.
இதுபோன்ற தருணத்தில் தனது பிறந்தநாள், கிறிஸ்தமஸ், குடும்ப விழாக்கள், உறவினர் மரணம் என பல நிகழ்வுகளை இழந்துள்ளார் நிக்கோல்.

18 மணிநேர உறக்கம்
ஏறத்தாழ ஒருநாளுக்கு 18 மணிநேரத்திற்கும் மேலாக நிக்கோல் உறங்குகிறார். இடையே இவர் எழுவதே உணவு உண்பதற்கு தான். அதுவும், இவரது தாய் எழுப்ப வேண்டும். அப்படி எழும் போதும், இவரது கண்கள் புகைமூட்டம் போல காணப்படுமாம்.
இவர் உறக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளவர்கள் போல தான் இருப்பாராம். நிக்கோலுக்கு நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவரது தாய் முனைகிறார்.

1000 பேர்!
நிக்கோலுக்கு இருக்கும் இந்த குறைபாடு உலகில் ஆயிரம் பேருக்கு தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்கு இதுவரை மருத்துவத்தில் எந்த தீர்வும் இல்லை என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நிக்கோலின் தாயின் அச்சம்:
ஒவ்வொரு முறை இவர் நீண்ட உறக்க நிலைக்கு செல்லும் போதும், நிக்கோல் மீண்டும் எழுவாளா, இல்லையா? என்ற அச்சம் தன்னுள் தொற்றிக் கொள்கிறது என தன் மனக் கவலையை பகிர்ந்திருக்கிறார் நிக்கோலின் தாய்.
Image Source

ஸ்லீபிங் பியூட்டி!
கே.எல்.சி எனும் இந்த குறைபாட்டை ஸ்லீபிங் பியூட்டி என்றும் குறிப்பிடுகிறார்கள். இது ஒரு சிக்கலான நரம்பியல் குறைபாடு ஆகும்.
நிக்கோல் காணொளிப்பதிவு!
நிக்கோல் மற்றும் அவரது தாய் அளித்த பேட்டியின் காணொளிப்பதிவின் ஓர் பகுதி!



Click it and Unblock the Notifications











