இளம் பெண்ணின் மூளைக்குள் பல், முடி, எலும்புகளுடன் வளர்ந்த ஓர் விசித்திர ஜந்து!!!

Posted By:
Subscribe to Boldsky

ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் யாமினி கரணம், 26 வயது நிரம்பிய இளம் பெண்ணான இவர் ஓர் பி.எச்.டி. மாணவர். கல்வியின் காரணமாக அமெரிக்காவில் இருக்கும் இன்டியான மாகணத்தில் வாழ்ந்து வந்தார்.

இரண்டு பிறப்புறுப்புடன் வாழ்ந்து வரும் அதிசயப் பெண்!! - ஆச்சரியம்!!!

அனைவரையும் போல இவரும் சாதரணமாக தான் தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ஆனால், திடீரென அடிக்கடி மயக்கமும், சரியாக பேச முடியாத நிலை, தலைவலி, வகுப்பறையில் கவனிக்க முடியாது பல வகைகளில் தடுமாறி வந்தார் யாமினி.

ஆண்களை போலவே பெண்களும் நின்றவாறே சிறுநீர் கழிக்கலாம், டெல்லி மாணவர்கள் புதிய கண்டுபிடிப்பு!!!

மருத்துவர்கள் இவரை ஆராய்ந்து, இவரது மூளையில் கூம்புக் கட்டி (Pineal Tumor) வளர்ந்துள்ளதாக கூறினார்கள். ஆனால், அது ஓர் விசித்திரமான ஜந்து போன்றது என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை...

பெண்ணின் பிறப்புறுப்பு பகுதியில் ஒட்டுண்ணியாக வளரும் இரட்டை சகோதரி!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விசித்திரமான ஜந்து

விசித்திரமான ஜந்து

யாமினியின் மூளையை பரிசோதித்து மருத்துவர்கள், அவரது மூளையில் ஏதோ கட்டி இருப்பதாக கண்டறிந்தனர். ஆனால், அது எது போன்றது என அறியாமல் குழம்பி இருந்தனர். மருத்துவர்கள் ஒருவருக்கு ஒருவர் இதை என்ன செய்வது என வாதிட்டு வந்தனர்.

Image Courtesy

புரியாத புதிர்

புரியாத புதிர்

அனைத்து வகை பரிசோதனைகளும், சிகிச்சைகளும் மேற்கொண்டும், எவராலும் சரியான பதிலை கூற முடியவில்லை. யாமினியின் மூளையில் மருத்துவர்கள் கண்டறிந்த கட்டி புரியாத புதிராக நீடித்தது.

Image Courtesy

யாமினியின் நிலை

யாமினியின் நிலை

சில சமயங்களில் 14 நாட்கள் கூட உறங்கியப்படியே இருந்தாராம் யாமினி. இந்நிலை யாமினியின் நண்பர்களையும், உறவினர்களையும் மிகவும் கவலையடைய செய்தது.

Image Courtesy

யாமினி வருத்தம்

யாமினி வருத்தம்

தனது வலைபதிவு தளத்தில் யாமினி, "இதற்கு யாரேனும் சீக்கிரம் ஓர் முடிவு கூறுங்கள், கடவும், மருத்துவர் அல்லது யாரேனும் கூறுங்கள்..." என்று வருத்தமாக பதிவேற்றம் செய்திருந்தார். இந்த பதிவை கடந்த மார்ச் மாதம் 15 நாள் யாமினி பதிவேற்றம் செய்திருந்தார்.

Image Courtesy

ஆன்-லைனில் நிதியுதவி

ஆன்-லைனில் நிதியுதவி

யாமினியின் நண்பர்கள், இவரது நிலையை காட்டி ஆன்-லைனில் நிதியுதவி திரட்டினர். அதில் மொத்தம் 32,437 அமெரிக்க டாலர்கள் நிதியுதவி கிடைத்தது.

யாமினியே நேரடியாக ஆராய்ச்சி

யாமினியே நேரடியாக ஆராய்ச்சி

பிறகு தனது நிலையை குறித்து தானே நேரடியாக ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தார் யாமினி. கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருக்கும் கபாலம் சார்ந்த "Skull Institute"ல் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

Image Courtesy

கீ-ஹோல் அறுவை சிகிச்சை

கீ-ஹோல் அறுவை சிகிச்சை

அந்த ஆராய்ச்சி மையத்தில் இருந்த டாக்டர்.ஷாஹினியன் யாமினிக்கு கீ-ஹோல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். இதன் மூலம் யாமினியின் மூளையின் உட்பகுதிகளை கண்டறிந்து அதிர்ச்சியடைந்தார்.ஏனெனில் அவரது மூளையில் வளர்ந்து வந்தது கட்டியல்ல ஓர் அயல் திசுக்கட்டி (Teratoma) என அப்போது தான் தெரிய வந்தது.

Image Courtesy

மருத்துவர் அதிர்ச்சி

மருத்துவர் அதிர்ச்சி

டாக்டர்.ஷாஹினியன் 8000'திற்கும் மேற்பட்ட மூளை கட்டி சார்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதில் இது தான் இரண்டாவது அயல் திசுக்கட்டி (Teratoma) என அவர் கூறினார். இதை கட்டி என கூறுவதை விட, பேய் போன்ற இரட்டை என கூறலாம். ஏனெனில், யாமினியில் மூளையில் வளர்ந்த அந்த கட்டியில், முடி, பற்கள், எலும்பு இருந்ததாக மருத்துவர்கள் கூறினார்.

Image Courtesy

26 வருடங்களாக தொல்லை

26 வருடங்களாக தொல்லை

இந்த விசித்திர ஜந்து போன்ற அயல் திசுக்கட்டி (Teratoma) கடந்த 26 வருடங்களாக யாமினியை தொல்லை செய்து வந்துள்ளது. ஆனால் சமீப காலமாக அது அதிகரித்ததால் தான் அவரால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. இன்னும் கூட யாமினி மருத்துவ ஆராய்ச்சியில் தான் இருக்கிறார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Evil Twin Inside Woman's Brain

A girl named yamini karanam from Hyderabad faced a weird situation. An evil twin inside her brain grown with teeth, hair and bones.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter