தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

திராட்சை பலருக்கும் பிடித்த ஓர் அற்புதமான பழம். அதில் கருப்பு, பச்சை என இருவகை திராட்சைகளை மார்கெட்டுகளில் கண்டிருப்போம். இந்த திராட்சைகள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை வாரி வழங்குபவை. அதில் பச்சை நிற திராட்சை அதிகம் புளிப்பு இல்லாமல், தித்திக்கும் என்பதால் பலரும் அதை விரும்பி வாங்கி சாப்பிடுவார்கள்.

பொதுவாக திராட்சைகளில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கனிமச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் போன்றவை உள்ளன. இப்போது பச்சை திராட்சைகளை உண்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்

கொலஸ்ட்ரால் பிரச்சனைகள்

உங்களுக்கு உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள pterostilbene என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளும்.

எலும்பு ஆரோக்கியம்

எலும்பு ஆரோக்கியம்

திராட்சையில் காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற எலும்புகளின் வலிமைக்கும், உருவாக்கத்திற்கும் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

வைட்டமின் ஏ மற்றும் சி

வைட்டமின் ஏ மற்றும் சி

திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் சி வளமாக நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். அதேப் போல் வைட்டமின் சி ஈறுகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று.

ஆஸ்துமா

ஆஸ்துமா

பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். மேலும் திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும். மொத்தத்தில் சுவாச பிரச்சனை இருப்பவர்கள், பச்சை திராட்சையை தினமும் சிறிது உட்கொண்டு வருவது நல்லது.

எலக்ட்ரோலைட்டுகள்

எலக்ட்ரோலைட்டுகள்

பச்சை திராட்சையில் மிகவும் முக்கியமான கனிமச்சத்தான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இந்த கனிமச்சத்தானது உடலில் நீர்ச்சத்து மற்றும் இரத்தத்தில் அமிலத்தின் அளவை சீராக பராமரிக்க இன்றியமையாத ஒன்று. முக்கியமாக தசைகளின் செயல்பாட்டிற்கு எலக்ட்ரோலைட்டுக்கள் மிகவும் முக்கியம்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

தினமும் சிறிது பச்சை திராட்சை உட்கொண்டு வருவதன் மூலம் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Know Why Green Grapes Are Good For Health!

Green Grapes are a fruit which is loved by all and are also good for health. Here are some health benefits of the juicy fruit.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter