உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருக்கா? அப்ப தினமும் இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க சரியாகும்!

Posted By:
Subscribe to Boldsky

உயர் இரத்த அழுத்தம் என்பது அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் ஓர் பிரச்சனை. இப்பிரச்சனை இருந்தால் அதற்கான அறிகுறிகள் அவ்வளவு எளிதில் தெரியாது. மேலும் பெரும்பாலானோருக்கு இப்பிரச்சனை இருப்பதே தெரியாது.

ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால், அதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுவதும் அதற்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் ஓர் நல்ல செய்தி என்னவென்றால், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது தான்.

இப்போது உயர் இரத்த அழுத்தம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு ஜூஸ் குறித்தும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உடலின் சுற்றோட்ட அமைப்பில் இதயம் மற்றும் இரத்த நாளங்களின் உதவியால் தான் இரத்தமானது உடல் முழுவதும் செல்கிறது. இந்த அமைப்பில் இதயம் கொடுக்கும் அழுத்தத்தினால் தான் இரத்தம் உடலின் பல பகுதிகளுக்கு செல்கிறது. அதுவும் ஒவ்வொரு முறை இதயம் துடிக்கும் போதும், இதயம் சுருங்கி மிகப் பெரிய இரத்த நாளமான தமனிகளின் வழியே இரத்தத்தை அழுத்தி அனுப்புகிறது. இந்நிலையில் தான் ஒருவரின் இரத்த அழுத்தம் கணக்கிடப்படுகிறது.

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?

உயர் இரத்த அழுத்த பிரச்சனையின் போது இரத்தத்தை மற்ற உறுப்புகளுக்கு அனுப்ப இதயம் கடினமாக செயல்படும். இந்நிலை நீடித்தால் தமனிகளின் சுவர்கள் தடிமனாவதோடு, இரத்தத்தில் உள்ள கொழுப்புக்கள் சுவர்களில் படிந்து ப்ளேக்கை உருவாக்கும். இதனால் தமனிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி, உடலுறுப்புக்களில் இரத்த ஓட்டம் குறையும். நாளடைவில் இதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய்கள் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.

லண்டன் பல்கலைகழகம்

லண்டன் பல்கலைகழகம்

சமீபத்தில் லண்டன் பல்கலைகழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பீட்ரூட் ஜூஸ் உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு நல்ல தீர்வை வழங்குவதாக கண்டுபிடித்துள்ளனர்.

நைட்ரேட்

நைட்ரேட்

இதற்கு பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் என்றும் கூறுகின்றனர். இந்த நைட்ரேட்டானது உடலினுள் செல்லும் போது நைட்ரிக் ஆக்ஸைடாக மாறி, இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.

க்ரீன் ஆப்பிள் மற்றும் கேரட்

க்ரீன் ஆப்பிள் மற்றும் கேரட்

பீட்ரூட்டுடன் எலுமிச்சை, இஞ்சி, க்ரீன் ஆப்பிள் மற்றும் கேரட்டை சேர்த்து ஜூஸ் செய்து குடித்தால் இரத்த அழுத்தம் குறைவதோடு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தலைவலி அல்லது குமட்டல்

தலைவலி அல்லது குமட்டல்

இந்த ஜூஸைக் குடித்தால், உடனடியாக உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும். அதே சமயம் இந்த ஜூஸை குடிக்க ஆரம்பிக்கும் போது சில நாட்கள் தலைவலி அல்லது குமட்டலை உணரக்கூடும். இதற்கு இந்த ஜூஸ் முதலில் உடலை சுத்தம் செய்வது தான் காரணம். நாளடைவில் அப்பிரச்சனை நீங்கி, உயர் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

பீட்ரூட் - 2

க்ரீன் ஆப்பிள் - 1

கேரட் - 1

எலுமிச்சை - 1/2

துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

செய்முறை

முதலில் அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை சற்றும் தாமதிக்காமல் தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இந்த ஜூஸை எப்போது வேண்டுமானாலும் தயாரித்துக் குடிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Incredible Juice that Lowers Blood Pressure

If you experience heart-related problems and have blood pressure that exceeds the limits, then this is an amazing and healthy alternative to help you lower high blood pressure without using any medications.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter