காலை உணவைத் தவிர்த்தால் சர்க்கரை நோய் மற்றும் உடல் எடை அதிகரிக்குமா?

By: Batri Krishnan
Subscribe to Boldsky

நம் முன்னோர்கள் உணவே மருந்து எனக் கூறிச் சென்றுள்ளனர். திருமூலரோ 'உடம்பை வளர்த்தேன், உயிரை வளர்த்தேனே' எனத் தெரிவித்துள்ளார். எனவே நம் வாழ்க்கை உணவுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த உணவானது காலந்தோறும் மாறுபாடு அடைந்து வந்துள்ளது. உணவு மட்டுமா மாறியுள்ளது!.

நம்முடைய உணவு உட்கொள்ளும் கால நேரம் மற்றும் முறை போன்றவையும் மாறியுள்ளது. அத்தகைய மாற்றங்களில் மிகவும் முக்கியமானது, காலை நேர உணவைத் தவிர்ப்பது.

இன்றைய அவசர உலகில் காலை நேர உணவை உட்கொள்ள நம்மில் பலருக்கும் நேரமில்லை அல்லது காலை உணவைத் தவிர்த்தால் நம்முடைய உடல் எடை குறையும் என நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

காலை உணவைத் தவிர்ப்பது ஆரோக்கியமானதா?. அது எவ்வாறு நம்முடைய உடலை பாதிக்கின்றது என இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலை உணவைத் தவிர்ப்பது

காலை உணவைத் தவிர்ப்பது

தினந்தோறும் வேலைக்கு அல்லது பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் நாம் காலை உணவைத் தவற விடுகின்றோம். இது ஒரு ஆரோக்கியமான செய்கை இல்லை. இந்த ஆரோக்கியமற்ற செயல் முறை மிகவும் ஆபத்தானது. ஏன் இது சில சமயங்களில் நமக்கு மரணத்தையே பரிசளிக்கலாம்.

ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

ஒரு ஆய்வின் அடிப்படை தரவுகள், ஒரு நாளின் ஆரம்ப உணவான காலை உணவை தவிர்க்கும் வயதிற்கு வந்த மற்றும் பதின் வயதுடையவர்கள், தங்கள் நலனில் அக்கறையில்லாமல் இருக்கின்றனர், எனத் தெரிவிக்கின்றது. மேலும் அது, இத்தகைய பழக்கமுடையவர்கள் அதிக புகை, குடிப்பழக்கம் அல்லது அதற்கும் மேற்பட்ட போதைப் பழக்கவழக்கத்திற்கு உட்படுகின்றனர் எனத் தெரிவிக்கின்றது. ஆனால் காலை உணவை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ளும் நபர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறையுடன் இருக்கின்றனர் எனவும் தெரிவிக்கின்றது.

உடல் பருமன்

உடல் பருமன்

காலை உணவைத் தவிர்க்கும் மக்கள் அதிக உடல் பருமனுடன், கவனமின்மையுடனும் இருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு ஒரு சில வேலைகள் மிகவும் கடினமாகத் தெரிகின்றது, என மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றது.

கெட்ட பழக்கம் அதிகரிக்கும்

கெட்ட பழக்கம் அதிகரிக்கும்

ஒரு ஆராய்ச்சியாளர், புகைப் பழக்கம், சரியான உடற்பயிற்சி இல்லாமை, சத்தான உணவுகளைத் தவிர்த்தல், அதிகமாக மது அருந்துதல் மற்றும் அதிக பிஎம்ஐ போன்றவை அனைத்தும், காலை உணவைத் தவிர்க்கும் பெரியவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பரவலாக காணப்படுகின்றது, எனத் தெரிவிக்கின்றார்.

மோசமான வாழ்க்கை முறை

மோசமான வாழ்க்கை முறை

முன்னதாக நிபுணர்கள், ஒரு நாளின் மிக முக்கிய உணவான காலை உணவை கைவிடுதல் என்பது, ஒருவருடைய மோசமான வாழ்க்கை முறை அல்லது அவர் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார் என்பதைக் குறிக்கின்றது, எனத் தெரிவிக்கின்றனர்.

வேறொரு ஆய்வு

வேறொரு ஆய்வு

ஆராய்ச்சியாளர்கள், சுமார் 5,500 இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம், அவர்கள் காலை உணவை எவ்வாறு உட்கொள்கின்றனர், அதைத் தவிக்கின்றனரா? போன்ற கேள்விகளை முன் வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். மேலும் அவர்களின் எடை, மதுப் பழக்கம், மற்றும் உணவு பழக்கம் போன்ற பிற விவரங்களும் சேகரிக்கப்பட்டது.

போதைப் பழக்க உபயோகம் அதிகரிக்கும்

போதைப் பழக்க உபயோகம் அதிகரிக்கும்

காலை உணவைத் தவிர்க்கும் பெற்றோர்களின் குழந்தைகள், காலை உணவைத் தவிர்க்கும் பழக்கத்திற்கு அதிகம் ஆட்படுகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பதின் வயதின் ஆரம்ப மற்றும் நடுப்பகுதியில் இருப்பவர்கள், காலை உணவைத் தவிர்க்கும் பொழுது, அவர்கள் மது, புகையிலை மற்றும் கன்னாபிஸ் உபயோகத்திற்கு உள்ளாகின்றனர் எனவும் ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கினறன.

காலை உணவின் நன்மைகள்

காலை உணவின் நன்மைகள்

ஒரு நாளை முழு வயிற்றுடன் தொடங்குபவர்கள், அவர்களுடைய பசி மற்றும் உடல் எடையை மிக எளிதாக கட்டுப்படுத்துகின்றார்கள் எனத் தெரிவிக்கின்றது. மேலும் காலை உணவானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகின்றது என நம்பப்படுகின்றது. இரத்தத்தில் உள்ள சக்கரையானது பசி மற்றும் உடல் ஆற்றலைக் கட்டுப்படுத்துகின்றது.

உடல் எடை, நீரிழிவு பிரச்சனை குறையும்

உடல் எடை, நீரிழிவு பிரச்சனை குறையும்

மற்றொரு ஆராய்ச்சியானது 3000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் காலை உணவை வழக்கமாக உட்கொண்டு வரும் நபர்கள் அதிக எடை மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்படவில்லை எனத் தெரிவிக்கின்றது. அதுவே காலை உணவைத் தவிர்க்கும் நபர்களுக்கு அதிகமாக இருந்தது எனவும் கண்டறியப்பட்டது.

குறிப்பு

குறிப்பு

எனவே, தற்பொழுதைய மிக முக்கியமான தேவை என்பது காலை உணவு மட்டுமே. அதை எப்பொழுதும் தவிர்க்க முயற்சிக்காதீர்கள். மேலும், பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைக்கு ஒரு ஆரோக்கியமான நல்ல சத்தான உணவுகளை வழங்கி அன்றைய நாளை இனிதே தொடங்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Skipping Breakfast Leads To Weight Gain & Diabetes

Skipping breakfast can have several side effects on our body, which may even lead to weight gain and diabetes. Read on to know why skipping breakfast is bad.
Subscribe Newsletter