For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழங்கால் மற்றும் மூட்டு வலி சிகிச்சைக்கு மூலிகை மற்றும் வாசனை திரவியங்கள்

By Super Admin
|

முழங்கால் வலி என்பது மூட்டுக்களில் மிகுந்த வலி மற்றும் இறுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிதைவு நிலை. இந்த முழங்கால் வழியில் பல வகைகள் உள்ளன என்பதுடன் இதனுடைய கடினத் தன்மை அவதியுறுவோரின் நிலையைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.

மூட்டு வலிகள் உள்ளவர்கள் அனைவருமே முழங்கால் வலி அல்லது ஆர்தரைடிஸ் குறைபாடு உள்ளவர்கள் அல்ல. வலி, எரிச்சல் மற்றும் மூட்டுகள் இறுக்கம் ஆகியவை வயதுமுதிர்ந்த மற்றும் எடை அதிகமாக உள்ளவர்களிடையே பொதுவாகக் காணப்படும் அறிகுறிகளாகும்.

வலி மற்றும் அசவுகரியம் ஆகியவை மற்ற எந்த மூட்டு வழிகளை போன்றே இதற்கும் உண்டு என்பதோடு உங்களது தினசரி செயல்களை பாதித்து வாழ்க்கையைக் கடினமாக்குகின்றன.

மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் மற்றும் கடைகளில் கிடைக்கும் இயற்கை சத்து மருந்துகள் தவிர பல இயற்கை மருந்துகள் இந்த மூட்டுவலி அறிகுறிகளை குணப்படுத்த உள்ளன. குறிப்பாக மூலிகைகளும் வாசனைத் திரவியங்களும் பல நூற்றாண்டுகளாக இதுபோன்ற பயமுறுத்தும் வலிகளையும் சுகவீனத்தையும் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன.

எனவே இன்று இதுபோன்ற வலியை கட்டுப்படுத்த உதவும் மூலிகை மற்றும் வாசனைத் திரவியங்கள் பட்டியலை தொகுத்து வழங்குகிறோம். ஒவ்வொரு நபரையும் பொறுத்து இந்த மூலிகை மருந்தின் அளவுகள் மாறுபடும்.

அதனால்தான் இந்த மருந்து அல்லது மூலிகைகளை ஆகாரத்துடன் சேர்க்கும் முன் ஒரு உணவியல் வல்லுனரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

இதை மனதில் வைத்து பழம்பெரும் சிகிச்சை முறைகள், மூலிகை மற்றும் வாசனைத் திரவியங்களைக் கொண்டு மூட்டு மற்றும் முழங்கால் வழிகளை எவ்வாறு குணப்படுத்துவது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மஞ்சள்

1. மஞ்சள்

பரவலாக மருந்தாகவும் அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் இந்த மூலிகை புண்களை ஆற்றும் இயல்புகளை கொண்டுள்ளதால் இது மூட்டுவலி மட்டுமல்லாது பொதுவான வலிகளுக்கும் மருந்தாக அமைந்துள்ளது. இதை பாலுடன் கலந்தோ அல்லது வேறு விதமாகவோ அருந்தலாம்.

2. பூண்டு

2. பூண்டு

பூண்டு மூட்டுவலிக்கு பழங்காலம் தொட்டே மருந்தாக இருந்து வருகிறது. மூட்டு மற்றும் கடும் முழங்கால் வலிகளுக்கு நல்ல பலன் தருவதாக உறுதிசெய்யப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.

3. அதிமதுரம்

3. அதிமதுரம்

இந்த மூலிகை அதன் சக்திவாய்ந்த நறுமணத்திற்கு பெயர்போனது. அதே நேரம் இதில் வலி குறைக்கும் பல்வேறு உட்பொருட்கள் நிறைந்து காணப்படுவதுடன் மூட்டு மற்றும் முழங்கால் வலிக்கு நல்ல நிவாரணம் தருகிறது. அதனால்தான் பல ஆயிரம் வருடங்களாக இந்த மூலிகை மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

4. இஞ்சி

4. இஞ்சி

இஞ்சி நாம் அனைவரும் அறிந்ததை போல் பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு அருமருந்தாக உள்ளது. இதில் மூட்டு மற்றும் முழங்கால் வலிகளுக்கும் பொருந்தும். இதில் உள்ள எரிச்சல் மற்றும் வலித் தடுப்பு உட்பொருட்கள் இஞ்சியை ஒரு சிறந்த மருந்தாக ஆக்குகின்றது.

5. க்ரீன் டீ

5. க்ரீன் டீ

ஒரு கப் க்ரீன் டீ மூட்டு வலியின் தீவிரத்தைக் குறையச் செய்து ஆறுதல் அளிக்கக் கூடியது. ஆர்தரைடிஸ் குறைபாடால் அவதியுறும் பெரும்பாலான மக்கள் க்ரீன் டீயை தங்கள் உணவில் சேர்த்து பயன்பெற்று வருகிறார்கள்.

6. மிளகு

6. மிளகு

ஆர்தரைடிஸ் குறைபாடுள்ள பலர் மிளகை உபயோகித்து மூட்டுச் சிதைவு நிலையிலிருந்து ஆறுதல் பெறுகின்றனர். உணவில் மிளகாய் சேர்ப்பதன் மூலம் மூட்டுகளில் ஏற்படும் எரிச்சல் கட்டுப்படுத்தப்படும்.

7. இலவங்கப் பட்டை

7. இலவங்கப் பட்டை

இந்த நறுமணத் திரவியம் தொற்றுக்களிலிருந்தும் கிருமிகளிடமிருந்தும் பாதுக்காப்பு அளிக்கும் குணங்களைப் பெற்றுள்ளது. இந்த பண்புகள் மூட்டு வலிக்கும் முழங்கால் வலிக்கும் சிறப்பான மருந்தாக உள்ளது.

8. பெருங்காஞ்சொறி (ஸ்டிஞ்சிங் நெட்டில்)

8. பெருங்காஞ்சொறி (ஸ்டிஞ்சிங் நெட்டில்)

இது மூட்டுவலியை குறைக்கும் இயற்கை மூலிகைகளில் ஒன்று. இது மூக்கை துளைக்கும் நெடியுடன் காணப்படும். இந்த இல்லை கொண்டு டீ தயார் செய்து அருந்தினால் மூட்டுகளில் ஏற்படும் இருக்கும் வழியும் குறையும்.

9. வில்லோ பட்டை

9. வில்லோ பட்டை

வில்லோ மரப்பட்டை உலகின் மிகவும் பழமையான வலி நிவாரணி. இயற்கை ஆஸ்பிரின் என்றும் இதனை அழைப்பர். பெரும்பாலானோர் இதன் பட்டையை மென்று மூட்டு வலியையும் எரிச்சலையும் குறைத்துக்கொள்ள விரும்புகின்றனர்.

10. பிரிஞ்சி அல்லது புண்ணை இல்லை

10. பிரிஞ்சி அல்லது புண்ணை இல்லை

பே லீப் எனப்படும் இந்த மசாலா இலை அதன் நறுமணத்திற்குப் பெயர் போனது. இது பெரும்பாலும் சமையலில் பயன்படுகிறது. இதைத் தவிர மூட்டுவலி மற்றும் முழங்கால் வலி அறிகுறிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கவும் இது பயன்படுத்தப் படுகின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: health wellness bone
English summary

Best Herbs And Spices For Arthritis And Joint Pain

Best Herbs And Spices For Arthritis And Joint Pain, read here in tamil
Story first published: Thursday, October 6, 2016, 6:30 [IST]