சீத்தாப்பழம் சாப்பிடுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

சீத்தாப்பழத்தின் வெளித்தோற்றம் வித்தியாசமாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி மிகவும் இனிப்பாக இருக்கும். அதோடு சீத்தாப்பழம் நல்ல மணத்தையும் கொண்டது. இத்தகைய சீத்தாப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளதால், அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும்.

Amazing Benefits Of Custard Apple

உங்களுக்கு சீத்தாப் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். அதன் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், இனிமேல் சீத்தாப்பழம் சாப்பிட மறுக்கமாட்டீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆஸ்துமா

ஆஸ்துமா

சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமாக உள்ளது. இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.

கண்கள்

கண்கள்

சீத்தாப்பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ்

சீத்தாப்பழத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது மூட்டுகளில் உள்ள அதிகப்படியான அமிலத்தை நீக்கி, ஆர்த்ரிடிஸ் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், தசைகள் பலவீனமாவது தடுக்கப்படும்.

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனை

சீத்தாப்பழத்தில் காப்பர் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இந்த பழம் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

சீத்தாப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, உடல் சர்க்கரையை உறிஞ்சும் வேகத்தைக் குறைத்து, டைப்-2 சர்க்கரை நோய் வருவதற்கான அபாயத்தைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Amazing Benefits Of Custard Apple

Custard apple contains many nutrients and minerals which are good for health. Here are some of the health benefits of custard apple fruit.
Story first published: Friday, October 14, 2016, 18:46 [IST]
Subscribe Newsletter