அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவர்கள் அஜித்திடம் கூறியது என்ன?

Posted By:
Subscribe to Boldsky

திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நடிகர் அஜித்திற்கு நிறைய காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயங்கள் ஓடியாடி விளையாடிய போதல்ல. பைக் மற்றும் கார் பந்தையங்களில் கலந்துக் கொண்ட போது ஏற்பட்ட விபத்துக்களினால் ஆன காயங்கள்.

பல விபத்துக்கள் காயங்கள் ஏற்பட்ட போதிலும் கூட அஜித் அதைப்பற்றி ஏதும் கவலைப்படாமல் பந்தையங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். ஆனால், ஒரு கட்டத்தில் இதற்கு மேல் விபத்து ஏற்பட்டால் பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்றதால் தான் அஜித் பந்தயங்களில் கலந்துக் கொள்வதில் இருந்து விலகினார்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரம்பத்தில் ஆரம்பமான பிரச்சனை

ஆரம்பத்தில் ஆரம்பமான பிரச்சனை

ஆரம்பம் படம் ஆரம்பிக்கும் போது உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பான முறையில் பராமரித்தார் அஜித். ஆனால், ஓர் சண்டை காட்சியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து காலில் பிரச்சனையை உண்டாக்கியது.

ஊன்றுகோல்

ஊன்றுகோல்

அதன் பின்னர் எங்கு சென்றலும் ஊன்றுகோல் அல்லது கால் மூட்டு பகுதியில் கட்டுப் போட்டு தான் நடந்து வந்தார் நடிகர் அஜித்.

தொடர்ந்து படங்கள்

தொடர்ந்து படங்கள்

தொடர்ந்து படங்களில் புக் ஆகியிருந்ததால், அந்த காயத்தை பொருட்படுத்தாமல் தயாரிப்பாளர்களுக்கு தொல்லையாக இருந்துவிட கூடாது என தொடர்ந்து நடித்துக் கொடுத்தார்.

வேதாளம் ஷூட்டிங்கில் மீண்டும் காயம்

வேதாளம் ஷூட்டிங்கில் மீண்டும் காயம்

மேலும் வேதாளம் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பின் போது மீண்டும் அஜித்தின் காலில் அடிப்பட்டது. இதனால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் எச்சரித்தினர்.

ரிலீஸ் வரை காத்திருந்த அஜித்

ரிலீஸ் வரை காத்திருந்த அஜித்

படம் ரிலீஸ் ஆகிவிடட்டும் என அஜித் காத்திருந்தார். பிறகு, நேற்று (நவம்பர் 12) ஓர் தனியார் மருத்துவமனையில் ஆறு மணிநேரம் அளவில் அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்டது.

அஜித் நலம்

அஜித் நலம்

அறுவை சிகிச்சை முடித்த மருத்துவர்கள் அஜித் நலமாக உள்ளார் என கூறியிருக்கிறார்கள். மேலும் அஜித் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

மருத்துவர்கள் கூறிய அறிவுரை

மருத்துவர்கள் கூறிய அறிவுரை

மேலும் அஜித்திடம் குறைந்தது ஆறு மாதங்களாவது ஓய்வு எடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் புதிய படங்களில் நடிக்க போகலாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

வேதாளத்தின் ஆர்ப்பரிப்பு ரசிகர்களிடம் இன்னும் குறையவில்லை. அஜித் விரைவில் குணமடைந்து நடிக்க வர வேண்டும் என்று இப்போதே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Doctors Have Advised To Actor Ajith

Doctors have advised to actor Ajith to take rest for at least six months and then take up any project.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter