உடல் எடை குறைக்க இந்த கொடியிடை அழகிகள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

உடல் பருமனை குறைக்க நாம் ஒருபக்கம் முயற்சி செய்தாலும் கூட, மறுபக்கம் தானாக அது ஏறத்தான் செய்கிறது. இதற்கு காரணம் நமது வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் வேலை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான். ஒருசிலருக்கு திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடினால் பிறகு குறையவே குறையாது.

ஆனால், நடிகைகள் மட்டும் காலாகாலமாக எவ்வளவு வயதானலும் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். அது எப்படி? அது ஒன்றும் பெரிய மாய வித்தை கிடையாது அவர்கள் கடைபிடிக்கும் டயட் தான் அவர்களது உடல் எடை கூடாமல் இருக்க உதவுகிறது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

இவர் புரதச்சத்து நிறைந்த உணவை அதிகம் இவரது உணவுமுறையில் சேர்த்துக் கொள்கிறார். மற்றும் கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்கிறார். தினமும் மூன்று கப் கிரீன் டீ குடிப்பது இவரை ஃபிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறதாம். வயிறு நிறைய உணவை உட்கொள்ளாமல், சிறிது, சிறிதாக பிரித்து உட்கொள்ளும் பழக்கத்தை சோனாக்ஷி சின்ஹா கொண்டிருக்கிறார். மற்றும் தினமும் நிறைய நீர் குடிக்கிறார்.

கத்ரீனா கைப்

கத்ரீனா கைப்

காலை எழுந்ததும் மூன்று கிளாஸ் நீர் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் கத்ரீனா கைப். இது உடலில் உள்ள நச்சுக்களை அழிக்க உதவுகிறதாம். புரதம், நார்ச்சத்து நிறைந்த உணவை தான் இவர் விரும்பி உண்கிறார். மேலும் உடல் வறட்சி ஏற்படாமல் இருக்க தினமும் எட்டு கிளாஸ் நீர் பருகுகிறார் கத்ரீனா கைப்.

ஆலியா பட்

ஆலியா பட்

எண்ணெய் மாற்றும் ஜங்க் உணவுகளில் இருந்து தள்ளியே இருக்கிறார் ஆலியா பட். ஃப்ரஷான காய்கறி, பழங்களை விரும்பி சாப்பிடுகிறார். ஜூஸ், நட்ஸ் போன்ற உணவுகள் இவருக்கு பிடித்தமான உணவுகள். மேலும் இரவு உணவை, உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கிறார் ஆலியா பட்.

கஜோல்

கஜோல்

வயது ஏறினாலும், எடை ஏறாமல் பார்த்துக் கொள்கிறார் கஜோல். ஃப்ரஷான காய்கறி, பழங்கள் சாப்பிடுவது, தினமும் அதிகமாக நீர் பருகுவது போன்றவை தான் இவரது டயட் இரகசியம் என்கிறார்.

கரீனா கபூர்

கரீனா கபூர்

பிரியாணி என்றால் கரீனா கபூருக்கு மிகவும் பிரியம். இவர், "ஒருவர் என்ன வேண்டுமானாலும் சாப்பிடலாம் அதற்கு ஏற்ற உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி செய்தாலே போதுமானது" என்கிறார். இவர் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கொஞ்சம், கொஞ்சமாக உணவு உட்கொள்ளும் முறையை பின்பற்றுகிறார்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

வித்யா பாலனுக்கு சமைப்பது என்றால் மிகவும் பிடிக்குமாம். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை தான் இவர் மிகவும் விரும்புகிறார். கார்போஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை தான் இவர் தேர்வு செய்து உண்கிறார். மேலும் டயட்டில் காய்கறி மற்றும் பழரசங்கள் பருகுவதும், நார்ச்சத்து உணவுகளை சேர்த்துக் கொள்ளவும் இவர் தவறுவதே இல்லை.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்

அனைவரையும் போல ஐஸ்வர்யா ராயும் கூட கார்போஹைட்ரேட் குறைவான உணவு மற்றும் புரதம் அதிகமுள்ள உணவை தான் தேர்வு செய்கிறார். அதிகமாக பசி எடுக்காமல் இருக்க நிறைய தண்ணீர் பருகுகிறார் ஐஸ். மேலும் ஜங்க் ஃபுட்ஸ் பக்கம் தனது தலையை கூட திருப்புவதில்லையாம் ஐஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Celebrity Weight Loss Secrets Revealed

Do you know about the top celebrities weight loss secrets? read here in tamil.
Subscribe Newsletter