For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தினமும் சரியா தூங்குறதில்லையா? அப்ப அத சாதாரணமா விடாதீங்க...

By Maha
|

எப்படி உணவு, உடை, இருப்பிடம் ஒருவருக்கு இன்றியமையாததோ, அதேப்போல் ஒருவருக்கு தூக்கமும் மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ தூக்கம் முக்கியம். அன்றாட செயல்பாடுகளுடன், ஒருவர் நல்ல தூக்கத்தை மேற்கொண்டால், உடலின் ஆரோக்கியம் மேம்படும்.

இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் தவிப்பதற்கான காரணங்கள்!!!

ஆனால் அப்படி சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாமல் வாழ்ந்து வந்தால், அதனால் பல்வேறு பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதோ, அந்த தூக்கமின்மை செக்ஸ் வாழ்க்கையையும் பாதிக்கும்.

மதிய வேளையில் குட்டித் தூக்கம் போடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

இங்கு ஒருவர் சரியான தூக்கத்தை மேற்கொள்ளவிட்டால் சந்திக்கக்கூடும் பக்க விளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் தூக்கத்திற்கு நேரம் ஒதுக்கி நல்ல தூக்கத்தை மேற்கொண்டு வாருங்கள்.

திங்கட்கிழமை ஆபிஸ் வந்தாலே தூக்கம் சொக்குதா? அதை போக்க சில சிம்பிளாக வழிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிவுத்திறன் நலிந்து போதல்

அறிவுத்திறன் நலிந்து போதல்

தூக்கமின்மை ஒருவரின் அறிவாற்றல் திறன்களான ஞாபக சக்தி, செயலில் கவனம் போன்றவற்றை மெதுவாக அழித்துவரும். இந்த தூக்கமின்மையால் தான் சிலர் எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று தெரியாமல் அடிக்கடி தேடிக் கொண்டிருக்கிறோம்.

விபத்து

விபத்து

கணக்கெடுப்பு தகவல்கள், பெரும்பாலான சாலையோர விபத்துக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக தூக்கமின்மையை சொல்கின்றன. எனவே கார், பைக் போன்றவற்றில் பயணம் செய்பவர்கள், தினமும் நல்ல தூக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

பாலுணர்ச்சி

பாலுணர்ச்சி

ஆரோக்கியமான வாழ்க்கையில் காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டுமெனில் தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கமின்மை இருந்தால், அது செக்ஸ் வாழ்க்கையை பாதித்து, அதுவே தம்பதியர்களுக்கிடையே பெரிய விரிசலை ஏற்படுத்தும்.

இதய பிரச்சனைகள்

இதய பிரச்சனைகள்

நாள்பட்ட தூக்கமின்மை இதய நோய்கள் வருவதற்கு வழிவகுக்கும். ஏனெனில் தூக்கமின்மை இதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு, அதன் மூலம் மாரடைப்பில் இருந்து தமனி தடிப்பு வரை எந்த ஒரு இதய நோயும் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

சுருக்கங்கள்

சுருக்கங்கள்

ஆம், தூக்கமின்மையால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். மேலும் தூங்கும் நிலை கூட சரும சுருக்கங்களை உண்டாக்கும்.

மன இறுக்கம்

மன இறுக்கம்

மன இறுக்கத்திற்கும், தூக்கமின்மைக்கும் தொடர்பு இருப்பதாக உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலும் சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்வோர் தான் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அதனால் தான் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்வோர் மன இறுக்கத்தினால், தூக்கமின்மை ஏற்பட்டு, நாளடைவில் தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of Insomnia

The long term side effects of insomnia can spoil your health in many ways. Sufficient sleep is very important for the harmonious functioning of your body.
Desktop Bottom Promotion