மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

மாதுளை மிகவும் சுவையான பழம் மட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமும் கூட. மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் வளமாக இருப்பதால், இது மிகவும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. மேலும் பலருக்கு மாதுளை பழம் என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதனை உரித்து சாப்பிடுவது என்பதை நினைக்கும் போது பலரும் அதனை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, சோம்பேறித்தனப்பட்டு வேறு பழங்களை வாங்கி உட்கொள்கின்றனர்.

எந்த ஒரு பொருளும் எளிதில் கிடைப்பதை விட, கஷ்டப்பட்டு அடையும் போது தான், அதன் அருமை தெரியும். அதுப்போல் தான் மாதுளையை கஷ்டப்பட்டு உரித்து சாப்பிட வேண்டியிருந்தாலும், அதனால் எண்ணற்ற நன்மைகளை நாம் பெறலாம். அதிலும் இதனை அப்படியே சாப்பிட்டாலும் அல்லது ஜூஸாக செய்து குடித்தாலும், அதன் நன்மைகள் ஒன்றே. சரி, இப்போது மாதுளையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

மாதுளையில் இதயத்தைப் பாதுகாக்கும். பாலிஃபீனால்கள், டானின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்புக்கள் படிந்து தடிப்புகள் ஏற்பட்டு, அடைப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டு, இதயம் மற்றும் மூளைக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதன் மூலம் இதய நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

மாதுளையில் உள்ள ப்ருக்டோஸ், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கிறது. மேலும் ஆய்வு ஒன்றில், தொடர்ந்து இரண்டு வாரங்களாக மாதுளை ஜுஸ் குடித்து வந்தவர்களின் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக பராமரிக்கப்படுவது தெரிய வந்துள்ளது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

மாதுளை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதில் உள்ள இயற்கையான ஆஸ்பிரின், இரத்தம் உறைவதை தடுப்பதோடு, இரத்தத்தின் அடர்த்தியைக் குறைத்து, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

புற்றுநோயை தடுக்கிறது

புற்றுநோயை தடுக்கிறது

மாதுளையை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அது உடலில் சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதோடு, உடலில் தேவையற்ற புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த வெள்ளையணுக்களை தூண்டி, கிருமிகள் மற்றும் டாக்ஸின்களை உடலில் இருந்து வெளியேற்றி, வலிமையான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. முக்கியமாக ஆண்கள் இதனை குடித்து வந்தால், புரோஸ்டேட் புற்றநோய் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

வயிற்றை இதமாக்கும்

வயிற்றை இதமாக்கும்

மாதுளை ஜூஸ் வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதிலும் 1 டம்ளர் மாதுளை ஜூஸில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம்

வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம்

மாதுளையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை அதிகம் இருப்பதால், அவற்றை சாப்பிடும் போது, உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்குகிறது.

இரத்த சோகை

இரத்த சோகை

இரத்த சோகை உள்ளவர்கள், மாதுளையை அன்றாடம் உட்கொண்டு வந்தால் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கும். ஏனெனில் மாதுளையில் இரும்புச்சத்து அதிக அளவில் உள்ளது.

எடையைக் குறைக்கும்

எடையைக் குறைக்கும்

மாதுளையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால், இதனை உட்கொண்டு வந்தால், உடல் எடை கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, நாள்பட்ட நோய்களின் தீவிரமும் குறையும்.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

மாதுளையை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், இளமைத் தோற்றம் பாதுகாக்கப்படும். இதற்கு அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் காரணம்.

வாய் ஆரோக்கியம்

வாய் ஆரோக்கியம்

மாதுளையில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஈறுகள் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்த்தொற்றுகளை எளிதில் எதிர்த்து போராடி, வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.

விந்தணு உற்பத்தி

விந்தணு உற்பத்தி

மாதுளையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விந்தணுவின் உற்பத்தியை அதிகரிக்கும். எலியின் மீது நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், மாதுளை ஜூஸ் விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் தரத்தை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Powerful Health Benefits Of Eating Pomegranate

Here are some powerful health benefits of eating pomegranate. Take a look...
Subscribe Newsletter