ஆறே வாரங்களில் உடல் எடை குறைக்க மீன் எண்ணெய் காப்ஸ்யூல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

மீன் எண்ணெய் என்பது, மீனின் திசுக்களில் இருந்து இருந்து பிரித்தெடுக்கும் ஒன்றாகும். இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், ஈ.பி.ஏ (eicosapentaenoic acid) மற்றும் டி.எச்.எ (docosahexaenoic acid) போன்ற மூலப்பொருட்களை கொண்டுள்ளது.

மீன் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள் உடல் எடையை குறைக்க பயனளிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும், தசைக்கு வலிமையும் அளிக்கிறது. இதனால், உடல் சக்தியும் அதிகரிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொழுப்பை கரைக்க

கொழுப்பை கரைக்க

மீன் எண்ணெயில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது கொழுப்பை கரைக்க உதவுகிறது. ஓர் ஆய்வில், மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள் தினமும் உட்கொள்வதால் ஆறு வாரங்களில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடிகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

தசை வலிமை

தசை வலிமை

மேலும் தினமும் மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள் உட்கொள்வதால் தசையின் வலிமை அதிகரிக்கிறது. மேலும் இதற்கேற்ற உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டியது அவசியம்.

பசியை குறைக்கும்

பசியை குறைக்கும்

மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள், உணவு இடைவேளைகளுக்கு மத்தியில் ஏற்படும் அதிகப்படியான பசியை குறைக்கிறது. இதனால் உடலில் தேவையின்றி சேரும் கலோரிகளை தடுத்து, உடல் எடை அதிகரிக்காமல் செய்ய முடியும்.

பயனுள்ள டயட்

பயனுள்ள டயட்

மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள் உங்கள் டயட் மற்றும் உடற்பயிற்சியை பயனுள்ளதாக மாற்றுகிறது. அதிகமான பசியை குறைத்து, தசை வலிமையை அதிகரித்து டயட்டை பயனுள்ளதாக மாற்றுகிறது.

கொழுப்பு சேமிப்பு

கொழுப்பு சேமிப்பு

மேலும் மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள், உடலில் சேமிப்பாகும் கொழுப்பை குறைக்கிறது. இதனால் நீங்கள் நல்ல உடற் தகுதியுடன் இருக்க இது உதவுகிறது.

வாங்கும் போது கவனிக்க வேண்டியது

வாங்கும் போது கவனிக்க வேண்டியது

ஓர் நல்ல மீன் எண்ணெய் காப்ஸ்யூல்கள் 750 mg EPA மற்றும் DHA இருக்கும். மேலும் இதிலிருக்கும் ஒமேகா 3s தான் பல நன்மைகளை தருகிறது.

உட்கொள்ளும் அளவு

உட்கொள்ளும் அளவு

2-3 கிராம் அளவு மீன் எண்ணெய் காப்ஸ்யூல்கள் தினமும் உட்கொண்டால் இரண்டு பவுண்ட் அளவு உடல் எடை குறைக்க முடியும். அதிகமாக உட்கொள்ள வேண்டாம், மேலும் இதை உட்கொள்ளும் போது சர்க்கரை உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டாம். மற்றும் அதிகமாக மீன் எண்ணெய் (Fish Oil) காப்ஸ்யூல்கள்உட்கொள்வது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Fish Oil Helps You To Lose Weight

Do you know How Fish Oil Supplements Can Help You Lose Weight? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter