ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இரத்த கொதிப்பு எப்படி வேறுபடுகிறது?

By Ashok Cr

உயர் இரத்த கொதிப்பு என்பது எந்தவொரு அறிகுறியையும் காட்டாததால் அதனை அமைதியான கொலைகாரன் என்றும் கூறலாம். சரி, இரத்த கொதிப்பு என்றால் என்ன? இரத்த குழாய்கள் வழியாக இரத்தத்தை உங்கள் இதயம் அழுத்த முயற்சி செய்யும் போது, இரத்த குழாய்களின் சுவர்களின் மீது உந்த முயற்சி செய்யும். இது தான் இரத்த கொதிப்பை உண்டாக்கும்.

உண்மையை சொல்ல வேண்டுமானால், உடல் முழுவதும் இரத்தம் பாய்ந்தோட உங்கள் உடலுக்கு இரத்த அழுத்தம் தேவைப்படும். உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்க அத்தியாவசியமான தேவைப்பாடாகும். தமனிகள் வழியாக அதிக இரத்தம் பாய்ந்தோட ஆரோக்கியமான தமனிகள் விரிவடையும்.

தமனிகள் ஆரோக்கியமாக விளங்க இரத்த கொதிப்பு ஆரோக்கியமான அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். இருப்பினும் இயல்பு நிலையில் இரத்த கொதிப்பை வைத்திட நாம் பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் உள்ளது. சிலருக்கு இரத்த கொதிப்பு அதிகமாகலாம். இப்படி இரத்த கொதிப்பு அதிகமாக இருக்கும் போது உடல்நல பிரச்சனைகள் வந்து சேரும். அதற்கு உடனடி மருத்துவ மேற்பார்வை தேவை.

உயர் இரத்த கொதிப்பை ஹைப்பர்டென்ஷன் என்றும் அழைப்பார்கள். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக ஏற்படக்கூடியதே. 50 வயதுக்கு முன்னாள் இது அடிக்கடி ஏற்படக்கூடும். பொதுவாக வயதானவர்களை விட உயர் இரத்த கொதிப்பு இருக்கும் இளைஞர்களுக்கு தான் உயர் இதயவிரிவமுக்கம் ஏற்படும். பொதுவாக வயதானவர்களுக்கு இதயச் சுருக்க அழுத்தம் ஏற்படும்.

இருப்பினும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே ஏற்படும் இரத்த கொதிப்பிற்கு இடையே வேறுபாடுகள் உள்ளன. அவை எப்படி என்பதையும், இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்கள் ஏன் அதிகமாக அவதிப்படுகிறார்கள் என்பதையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆண்களுக்கு உயர் இரத்த கொதிப்பு

ஆண்களுக்கு உயர் இரத்த கொதிப்பு

50 வயதுக்கு முன்பாக, பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் தொடர்ச்சியாக ஏற்படும். ஆனால் 55 வயதிற்கு பிறகு, ஆண்களை விட பெண்களுக்கு தான் உயர் இரத்த கொதிப்பு தொடர்ச்சியாக ஏற்படும். கருப்பை மற்றும் விரைச்சிரை ஹார்மோன் அமைப்பிற்கு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை தவிர, பாலுணர்வு குரோமோசோம்கள் கூட உயர் இரத்த கொதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

இளைஞர்களுக்கு உயர் இரத்த கொதிப்பு

இளைஞர்களுக்கு உயர் இரத்த கொதிப்பு

45 வயதுக்கு குறைவான ஆண்களுக்கு இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணமாக இருப்பது உடல் பருமன் அல்லது வேலை அழுத்தம். உணவு பழக்கவழக்கங்கள் அல்லது அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்தாலும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். உடல் நிறை அதிகரிப்பதும் கூட இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு ஒரு அங்கமாக உள்ளது. பொதுவாக உயர் இரத்த அழுத்தம் உள்ள இளைஞர்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருக்கும். இது இதயம் மற்றும் சர்க்கரை நோய்களுடன் தொடர்புடையதாகும். இருப்பினும் இறுதி மாத விடாயை அடையும் போதே பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படும்.

பெண்களும் இறுதி மாதவிடாயும்

பெண்களும் இறுதி மாதவிடாயும்

இறுதி மாதவிடாயை அடையும் வரை பெண்களுக்கு உயர் இரத்த கொதிப்பு பிரச்சனை இருப்பதில்லை. சில நேரங்களில், மாதவிடாய் முடிவடைந்த பின்னர் உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆண்களை விட உயர் இரத்த கொதிப்பால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவதற்கான காரணங்கள் என்னவென்று தெரியுமா? இருது மாதவிடாயின் போது ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களே பெண்களுக்கு உயர் இரத்த கொதிப்பு ஏற்படுவதற்கான ஒரு அங்கமாக உள்ளது என சில மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

ஈஸ்ட்ரோஜன்

ஈஸ்ட்ரோஜன்

பொதுவாக 20 வயது அல்லது 40 வயதுகளில் உள்ள பெண்கள் உயர் இரத்த கொதிப்புகள் மற்றும் இதய குழலிய நோய்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். அதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பெண்களுக்கான பாலியல் ஹார்மோன்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம் அடிப்படையில் 40 வயதுள்ள ஆண்களையும் பெண்களையும் ஒப்பிடும் போது, ஆண்களை விட பெண்களுக்கு குறைந்த அளவிலான இடர்பாடே உள்ளது என பல்வேறு ஆய்வுகள் கூறியுள்ளது. உயர் இரத்த கொதிப்பு இருக்கும் போது மட்டும் தான் பெண்களின் உறுப்புகள் மற்றும் இரத்த குழாய்கள் பாதிப்படையக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. மேலும் சீரான இடைவேளையில் இரத்த கொதிப்பு சோதனைகளை மேற்கொள்வது நல்லதாகும்; குறிப்பாக நீங்கள் 40 வயதை உடைய ஆண்கள் ஆண்கள் அல்லது இறுதி மாத விடாய் முடிந்த பெண்கள். ஆண்களும் பெண்களும் இரத்த கொதிப்புள் எப்படி வேறுபடுகிறார்கள் என்பதற்கான சில சாத்தியங்கள் தன இவை.

30 மற்றும் 40 வயதுகளில் உள்ள ஆண்கள்

30 மற்றும் 40 வயதுகளில் உள்ள ஆண்கள்

வயதான பிறகு தான் உயர் இரத்த கொதிப்பு ஏற்படும் என இளைஞர்கள் நினைக்கிறார்கள். இருப்பினும் தனக்கே தெரியாமல் 30 மற்றும் 40 வயதுகளில் உள்ள ஆண்கள் இந்த வியாதியால் அவதிப்படலாம். பெண்களுடன் ஒப்பிடுகையில் 54 வயது வரை ஆண்களுக்கு இந்த நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

சிறு வயது ஆண்கள் உயர் இரத்த கொதிப்பால் அவதிப்படுதல்

சிறு வயது ஆண்கள் உயர் இரத்த கொதிப்பால் அவதிப்படுதல்

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் உள்ள இள வயது ஆண்களுக்கு மெட்டபாலிக் சிண்ட்ரோம் இருக்கும். இது இதயம் மற்றும் சர்க்கரை நோய்களுடன் தொடர்புடையதாகும். இருப்பினும் பெண்கள் விஷயத்தில் அப்படி நடப்பதில்லை.

ஆண்களும் பெண்களும்

ஆண்களும் பெண்களும்

உடல் ரீதியான நடவடிக்கைகள் இல்லாமை அல்லது அளவுக்கு அதிகமான மது பழக்கத்தால் ஆண்களை போல் பெண்களும் கூட உயர் இரத்த கொதிப்பால் அவதிப்படுவார்கள். சில நேரங்களில், உணவுகளில் அதிகமாக உப்பை சேர்ப்பதாலும் கூட பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும். இது போக கருத்தடை மாத்திரைகள் கூட பெண்களுக்கு உயர் இரத்த கொதிப்பை ஏற்படுத்தலாம். ஒரு பெண் கருத்தடை மாத்திரையை பயன்படுத்தினால் அவர் சீரான முறையில் இரத்த கொதிப்பு சோதனையை மேற்கொள்ள வேண்டும். இந்த காரணங்களால் தான் பொதுவாக ஆண்களை விட பெண்கள் உயர் இரத்த கொதிப்பால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

திருமண நிலை

திருமண நிலை

பொதுவாக உயிரியல் மற்றும் சமூகப் பொருளாதாரக் காரணிகளால் இரத்த கொதிப்பு உள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் திருமண நிலையினால் (ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான) உயர் இரத்த அழுத்தம் பாதிக்கப்படுகிறது. தனியாக இருக்கும் போது இருந்ததை விட திருமணத்திற்கு பிறகு அவர்களின் இரத்த கொதிப்பு அதிகரிக்கும்.

மன அழுத்த அளவு

மன அழுத்த அளவு

அதிக மன அழுத்தத்திற்கு தங்கள் மனைவி ஆளாகியிருந்தால் அவர்களுக்கு இதயச் சுருக்க அழுத்தம் அதிகமாக இருக்கலாம். சுவாரசியமாக, பெண்களுக்கு உயர் இரத்த அழுத்தம் அப்படி ஏற்படுவதில்லை. கணவனின் மன அழுத்த அளவுகளால் பெண்களின் இதயம் பாதிப்படைவதில்லை. ஒரு ஒப்பீட்டு ஆய்வின் படி, இரத்த நாளங்கள் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் வாய்ப்பு ஒரே அளவிலான உயர் இரத்த அழுத்தத்தை கொண்டுள்ள ஆண்களை விட 40% பெண்களுக்கே அதிகமாக வருகிறது. இது போக, ஹார்மோன் அளவில் மாற்றங்கள் போன்ற பெண்களின் இதயகுழலிய அமைப்பில் உள்ள முக்கியமான உளவியல் வேறுபாடு இரத்த கொதிப்பு கட்டுப்பாட்டை பாதிக்கக்கூடும். இது இதய நோய்க்கான இடர்பாட்டையும் அதிகரிக்கும்.

50-59 மற்றும் 60-69 வயதை உடைய ஆண்களை தவிர பிற வயதுடைய ஆண்களுக்கு உயர் இரத்த கொதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், பிற்காலத்தில் உயர் இரத்த கொதிப்பு அதிகமாக வருவது பெண்களுக்கே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion