For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண் வலியால் அவதிப்படுகிறீர்களா? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை...

By Ashok CR
|

கண் என்பது நம் உடலில் உள்ள மிக மென்மையான உறுப்பாகும். கண்களில் சிறிதேனும் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும். நம்மில் பலரும் கண்களைப் பற்றி பெரிதாக கவலை கொள்வதில்லை. அதனால் வருங்காலத்தில் நமக்கு கண்களில் பல பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அதில் கண்பார்வை இழத்தலும் கூட அடங்கும்.

கண்கள் எதுக்கு அடிக்கடி துடிக்குதுன்னு தெரியுமா?

கண்களில் வலி இருந்தால் அல்லது வேறு ஏதேனும் அசௌகரியம் இருந்தால், அதனை புறக்கணிக்கக் கூடாது. அப்படி புறக்கணித்தால் நிலைமை மோசமாகி, கண் பார்வையை இழக்கும் நிலைக்கு ஆளாவீர்கள்.

கண்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க 8 டிப்ஸ்...

கண் வலி ஏற்படுவதற்கான சில பொதுவான காரணங்களைப் பார்க்கலாமா? கண் பார்வை என்பது மிகவும் முக்கியம் என்பதால், கண் வலிக்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வகைகள்

வகைகள்

கண் வலியை ஆப்தல்மால்ஜியா என கூறுவார்கள். அது இரண்டு வகைப்படும்.

விழியில் வலி

விழியில் வலி

கண்களின் மேற்பரப்புகளில் இது ஏற்படும். அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வை இது உண்டாக்கும். பொதுவாக உங்கள் கண்களில் காயம் ஏற்படும் போது இது நடக்கும். இவ்வகையான கண் வலிக்கு கண் சொட்டு மருந்தை கொண்டு சுலபமாக சிகிச்சை அளித்திடலாம்.

சுற்றோட்ட வலி

சுற்றோட்ட வலி

இது உங்கள் கண்களுக்குள் ஏற்படும். இது ஏற்படும் போது கண்களில் துடிப்பு, குத்தல் மற்றும் நறைநறைப்பு போன்ற உணர்வு உண்டாகும். இவ்வகையான வலி ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லையென்றால் அது சில மோசமான நிலையை உண்டாக்கிவிடும்.

புறத்துப் பொருட்களின் உள்தள்ளல்

புறத்துப் பொருட்களின் உள்தள்ளல்

இந்த வலி ஒரு பொதுவான வகையே. கண்களில் தூசி அல்லது அழுக்கு நுழையும் நேரத்தில் இதனை நாம் அனுபவிப்போம். இவ்வகையான உள்தள்ளல் எரிச்சல், சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் கண்களையும் கலங்கச் செய்யும்.

காயம்

காயம்

கண் வலி ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பது காயம். ரசாயன தீப்புண் அல்லது வேறு சில தீப்புண்கள் கூட தீவிர வலியை ஏற்படுத்தும். மேலும் ப்ளீச் அல்லது சூரியன் போன்ற சக்தி வாய்ந்த வெளிச்சத்தை தொடர்ச்சியாக பார்க்கும் போதும் கூட எரிச்சல் ஏற்பட்டு, அதனால் கண்களில் வலி ஏற்படும்.

கண் கட்டி

கண் கட்டி

சரும மெழுகு சுரப்பிகளில் அடைப்பு ஏற்படுவதால் கண்களில் சிவப்பு நிற பருக்கள் ஏற்படும். இதனை கண்கட்டி என கூறுவார்கள். இது பொதுவாக கண்களுக்குள் அல்லது கண் இமையின் நுனியில் உண்டாகும். இது ஒன்றும் ஆபத்தான நிலையல்ல. கொஞ்ச நாளில் அதுவாகவே வற்றி விடும். கண் மிகவும் மென்மையான மற்றும் உணர்ச்சிமயமான உறுப்பு என்பதால் உங்களுக்கு கண்களில் வலி ஏற்படும். அதனை அடிக்கடி தொடக்கூடாது. அதனை தானாகவே வற்ற விடுங்கள்.

காண்டாக்ட் லென்ஸ் எரிச்சல்

காண்டாக்ட் லென்ஸ் எரிச்சல்

நீங்கள் சீரான முறையில் காண்டாக்ட் லென்ஸ் அணிபவர் என்றால், அதுவும் நாள் முழுவதும் அணிபவர் என்றால், உங்களுக்கு கண் வலி வருவதற்கான சாத்தியங்கள் உண்டு. சீரான இடைவேளைகளில் லென்ஸ்களை கழுவவில்லை என்றால் வலி இன்னமும் மோசமடைய தான் செய்யும். இந்த எரிச்சல் வலியை ஏற்படுத்தும். நாளடைவில் தொற்று ஏற்படவும் செய்யும். காலாவதியான, பழைய லென்ஸ்களை அணிவதாலும் கூட கண்களில் வலி ஏற்படும்.

க்ளுகோமா

க்ளுகோமா

க்ளுகோமா எனப்படும் கண் அழுத்த நோய் மிக மோசமான நிலையாகும். இது கண்களில் அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் கண்களுக்கான நரம்புகள் பாதிக்கப்படும். மேலும் இது தாங்க முடியாத வலியையும் ஏற்படுத்தும். இதனை கவனிக்காமல் விட்டு விட்டால் கண் பார்வை போகும் நிலை கூட ஏற்படும்.

தேவையான ஓய்வு

தேவையான ஓய்வு

கண்களில் எரிச்சல் அல்லது வலி ஏற்பட்டால், கண்களுக்கு சிரமம் அளிக்காமல் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டும். தொலைகாட்சி அல்லது கணிப்பொறி முன்பு அமர்வதையும் கைப்பேசி பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நிலைமை இன்னமும் மோசமடையும்.

தண்ணீர் சிகிச்சை

தண்ணீர் சிகிச்சை

கண்களை சுத்தப்படுத்த, கண்களின் மீது குளிர்ந்த நீரை தெளியுங்கள். எரிச்சலுக்கு இது இதமாக இருக்கும்.

பரிசோதனை

பரிசோதனை

உங்கள் வலி தானாகவே சரியாகவில்லை என்றால் மருத்துவரை அணுகி, கண்களை பரிசோதிப்பது நல்லது. சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Have Eye Pain? Here’s What You Should Know

Here are some of the common reasons for eye pain. As eye sight is important, it is very important to find out the real reason for eye pain.
Desktop Bottom Promotion