துடிப்பாக செயல்படும் மக்கள் பின்பற்றும் மிக இயல்பான பழக்கவழக்கங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஒரே வீட்டில் தாய் சமைத்த ஒரே உணவு சாப்பிட்டு வளர்ந்தாலும் கூட இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி துடிப்பாக செயல்பட மாட்டார்கள். இந்த நடவடிக்கை பல தாய்மார்களுக்கு கூட வியப்பாக இருக்கும். ஏனெனில், ஒருவரது பழக்கவழக்கங்கள் தான் அவரை துடிப்பாகவும், சிறப்பாகவும் இயங்க வைக்கிறது.

இந்த பழக்கவழக்கங்களில் உணவுக்கும் ஓர் பங்கு இருக்கிறது. ஆனால், அதற்கும் மேலாக நிறைய நல்ல பழக்கவழக்கங்கள் இருக்கின்றன. நல்ல தூக்கம், வேலைக்கு நடுவில் சீரான இடைவேளை என நாம் அறிந்தும் பின்பற்றாமல் இருக்கும் பழக்கவழக்கங்கள் எண்ணிலடங்க கூடியவை தான்.

அவற்றில் சிலவற்றை பற்றி இனி இங்கு காணலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமநிலை முக்கியம்

சமநிலை முக்கியம்

வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் என அனைத்து நிலையிலும், உங்கள் கவனம் சிதறாமல் ஒருநிலையில் இருக்க வேண்டியது முக்கியமாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய பண்பாகும்.

ஓய்வு அவசியம்

ஓய்வு அவசியம்

வேலை செய்யும் அதே அளவு நேரம் ஓய்வும் அவசியம். ஒருமணிநேரம் வேலை செய்தால் குறைந்தது பத்து நிமிட இடைவேளையாவது அவசியம். இது நீங்கள் அடுத்த ஒரு மணி நேரம் சிறந்து இயங்க உதவும். மனதையும், உடலையும் சோர்ந்து போகாமல் இருக்க உதவும்.

தேவையான அளவு தூக்கம்

தேவையான அளவு தூக்கம்

மூத்த அரசியல்வாதி கலைஞர் கருணாநிதி, தினமும் காலை 5 மணிக்கெல்லாம் எழும் வழக்கம் கொண்டிருந்தார். ஓர் மனிதனுக்கு தேவையானது 6 மணிநேர தூக்கம். அதை சரியான நேரத்தில் நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களா என்பது தான் உங்களது செயல்பாடுகளை சிறக்க வைக்க உதவுகிறது.

டயட்

டயட்

துடிப்பாக இயங்கும் மக்கள் பெரும்பாலும் எந்த டயட்டும் பின்ட்பற்றுவது இல்லை.அவர்கள் தினமும் சாதாரணமாக தான் உணவு சாப்பிடுகிறார்கள். அதே போல அதற்கேற்ப உடல் வேலையும் சரியாக செய்கின்றனர். நடைப்பயிற்சி ஒன்றினை பின்பற்றினாலே நீங்கள் எந்த டயட்டையும் பின்பற்ற தேவையே இல்லை.

ஆரோக்கியமானவர்கள்

ஆரோக்கியமானவர்கள்

இவர்கள் அதிகம் நொறுக்கு தீனிகள் சாப்பிடுவதில்லை. உணவையும் அளவுக்கு அதிகமாக உட்கொள்வதில்லை. அவர்கள் செய்யும் வேலைக்கு எவ்வளவு உணவு தேவைப்படுகிறதோ அந்த அளவு மட்டும் தான் உட்கொள்கின்றனர்.

ஜிம் செல்லும் பழக்கம்

ஜிம் செல்லும் பழக்கம்

ஜிம் என்று மட்டுமல்ல நீச்சல், கராத்தே என எதாவது ஒரு பயிற்சியை பின்பற்றுவது உங்கள் மனதையும் உடலையும் ஒருநிலைபடுத்த உதவும். உங்கள் நேரத்திற்கும் வசதிக்கும் ஏற்ப பயிற்சியை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். ஆனால், தேர்வு செய்ய மறந்துவிட வேண்டாம்.

மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதில்லை

மாத்திரைகளை அதிகம் உட்கொள்வதில்லை

சிறப்பாகவும், துடிப்பாகவும் செயல்படும் நபர்கள் அதிகமாக மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது இல்லை. தங்களது உணவு பழக்கத்தின் மூலமாகவே சரிசெய்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Habits Of Energetic People

Energy levels depend a lot on your lifestyle. Read on to know about the habits of a healthy person.
Subscribe Newsletter