வெள்ளையான பற்களை மஞ்சளாக மாற்றும் உணவுப் பொருட்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரின் அழகை அதிகரித்து காட்டுவதில் சிரிப்பு முதன்மையானதாக உள்ளது. அப்படி சிரிக்கும் போது பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், அது அவரின் அழகை நொடியில் கெடுத்துவிடும். பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுவதற்கு முக்கிய காரணம், உண்ணும் உணவுப் பொருட்களும், பானங்களும் தான். மற்றொரு காரணம் குறிப்பிட்ட உணவுகளில் உள்ள அமிலங்கள் தான். அவை வெள்ளை நிற பற்களில் மஞ்சள் நிறத்தில் படலங்களை உருவாக்கிவிடுகிறது.

இங்கு அழகான முத்துப் போன்ற பற்களை மஞ்சள் நிறத்தில் மாற்றும் உணவுப் பொருட்களும் பானங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை அதிகம் குடிப்பதை விடுப்பதுடன், குடித்த பின்னர் வாயை நீரில் கொப்பளிக்கும் செயலில் ஈடுபடுங்கள். சரி, இப்போது வெள்ளையான பற்களை மஞ்சளாக மாற்றும் உணவுப் பொருட்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளாக் காபி

ப்ளாக் காபி

ப்ளாக் காபி குடிப்பதால் பற்களில் கறைகள் படியும். அதற்காக அதனை குடிக்காமல் இருக்க வேண்டுமென்று சொல்லவில்லை. ப்ளாக் காபி குடிப்பதற்கு பதிலாக அதில் சிறிது பால் சேர்த்துக் கொண்டால்,. ப்ளாக் காபியின் நிறம் சற்று குறைவதுடன், உடலுக்கு வேண்டிய கால்சியம் மற்றும் வைட்டமின் டி கிடைக்கும். இதனால் பற்களும், எலும்புகளும் வலிமையாக இருக்கும்.

டீ

டீ

காபியைப் போன்றே டீயும் பற்களை மஞ்சள் நிறத்தில் மாற்றும். ஏனெனில் டீயில் பற்களில் கறைகளை உண்டாக்கும் டேனின்கள் உள்ளது. ஆகவே டீயை அதிக ஸ்டாங்க்காக குடிக்க வேண்டாம். லைட்டாக போட்டு குடியுங்கள். மேலும் ப்ளாக் டீ குடிப்பதை தவிர்த்து, க்ரீன் டீ, ஒயிட் டீ போன்றவற்றை குடித்து பழகுங்கள்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

ரெட் ஒயின் இதயத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் அதனை குடித்தால், பற்களின் நிறம் மாறும் என்பது தெரியுமா? ஆகவே ரெட் ஒயின் குடித்த பின்னர், குளிர்ந்த நீரில் வாயை மறக்காமல் கொப்பளித்து விடுங்கள்.

கோலா

கோலா

நல்ல அடர் நிறத்தில் இருக்கும் கார்போனேட்டட் பானங்கள் உடல் ஆரோக்கியத்தை கெடுப்பதோடு மட்டுமின்றி, பற்களின் நிறத்தையும் கெடுக்கும். ஏனெனில் இதில் பாஸ்போரிக் ஆசிட் மற்றும் சிட்ரிக் ஆசிட் போன்றவை இருப்பதால், அவை பற்களின் மேலுள்ள எனாமலை அரித்து, பின் பற்களுக்கு வேறுசில பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். ஆகவே இவற்றை குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது பற்களுக்கு மட்டுமின்றி, உடலுக்கும் நல்லது.

அடர் நிற பழச்சாறுகள்

அடர் நிற பழச்சாறுகள்

தண்ணீர் சேர்க்காமல் செய்யும் பழச்சாறுகள் உடலுக்கு ஆரோக்கியமானது. ஆனால் அது பற்களுக்கு நல்லதல்ல. அதிலும் அடர் நிறத்தில் இருக்கும் பழச்சாறுகள் பற்களை மஞ்சள் நிறத்தில் மாற்றும். ஆகவே பழச்சாறுகளை குடிப்பதாக இருந்தால், அவற்றை குடித்த பின்னர் வாயை கொப்பளியுங்கள் அல்லது ஆப்பிள் சாப்பிடுங்கள்.

சோயா சாஸ்

சோயா சாஸ்

அடர் நிற பானங்கள் மட்டும் பற்களை மஞ்சள் நிறத்தில் மாற்றுவதில்லை. அடர் நிற ஃப்ளேவர்களும் பற்களின் நிறத்தை மாற்றும். அதாவது எந்த பொருட்கள் எல்லாம் துணியில் கறை படச் செய்கிறதோ, அவை அனைத்தும் பற்களிலம் கறையை உண்டாக்கும். ஆகவே சோயா சாஸ் சேர்க்கப்பட்ட உணவை உண்ட பின்னர் தவறாமல் வாயை கொப்பளியுங்கள்.

 தக்காளி சாஸ்

தக்காளி சாஸ்

தக்காளி சாஸ் பலருக்கு மிகவும் பிடிக்கும். அத்தகைய தக்காளி சாஸில் சேர்க்கப்பட்டுள்ள பதப்படுத்தப்பட்ட பொருட்கள் பற்களின மேல் மஞ்சள் நிற படலத்தை உருவாக்கும். ஆகவே தக்காளி சாஸ் சாப்பிடும் முன், பசலைக்கீரை அல்லது ப்ராக்கோலியை சாப்பிடுங்கள். இதானல் பற்களுக்கு ஒரு பாதுகாப்பு படலம் உருவாகி, பற்களில் கறைகள் படிவது தடுக்கப்படும்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருக்கலாம். ஆனால் இதன் நீல நிற தோல் பற்களில் கறைகளை உருவாக்கும். ஆகவே ப்ளூபெர்ரியை சாப்பிட்டு முடித்த பின்னர், சுத்தமான நீரால் வாயை கொப்பளியுங்கள்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ரூட் சாப்பிடுவது மிகவும் நல்லது. அதிலும் அதனை பச்சையாக சாப்பிடுவது இன்னும் சிறந்தது. ஆனால் அதனை சாப்பிட்டால், பற்களில் கறைகள் படியும். எனவே இதனை உட்கொண்ட பின்னரும் நீரால் வாயை கொப்பளியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods And Drinks That Cause Yellow Teeth

Here are some of the foods and drinks that cause yellow teeth. Take a look...
Story first published: Friday, February 6, 2015, 16:54 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter