உண்மையிலேயே க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்குமா அல்லது இது வெறும் கட்டுக்கதையா?

Posted By:
Subscribe to Boldsky

சமீப காலமாக க்ரீன் டீ மக்களிடையே நல்ல மதிப்பை பெற்று வருகிறது. இதற்கு காரணம் நிறைய ஆராய்ச்சிகள், க்ரீன் டீ புற்றுநோயைத் தடுக்கும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், நீரிழிவைக் கட்டுப்படுத்தும் என்று சொன்னது தான். அதுமட்டுமின்றி, சில ஆராய்ச்சிகள் க்ரீன் டீ உடல் எடையைக் குறைக்கும் என்று சொன்னதும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் பலரும் இதனை தினமும் குடித்து வருகிறார்கள்.

காபி, பால் டீயை விட க்ரீன் டீ ஆரோக்கியமானது என்பதில்லை எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. ஆனால் இது உண்மையிலேயே உடல் எடையைக் குறைக்க உதவுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அத்தகையவர்களுக்காக தான் இக்கட்டுரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரீன் டீயில் இருப்பது என்ன?

க்ரீன் டீயில் இருப்பது என்ன?

க்ரீன் டீயில் வைட்டமின்களான ஏ, பி, பி5, டி, ஈ, சி, கே, எச் மற்றும் செலினியம், குரோமியம், ஜிங்க், காப்ஃபைன், மாங்கனீசு போன்றவை வளமாக நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, க்ரீன் டியில் EGCG என்னும் சேர்மமும் உள்ளது.

க்ரீன் டீ மற்றும் எடை குறைவு

க்ரீன் டீ மற்றும் எடை குறைவு

உடல் சாதாரணமாகவே வெப்பத்தை உருவாக்கும். இந்த வெப்பம் தான் கலோரிகளை எரிக்க உதவுகிறது. ஆனால் க்ரீன் டீ குடிக்கும் போது, உடலின் வெப்பமானது அதிகரிக்கப்படுகிறது. க்ரீன் டீயினால் உடலின் வெப்பம் அதிகரிப்பதற்கு காரணம், அதில் உள்ள EGCG தான். இப்படி வெப்பம் அதிகமாவதால், கலோரிகளின் அளவு அதிகமாக எரிக்கப்படுகிறது. கலோரிகள் அதிகம் எரிக்கப்படுவதால், உடல் எடை வேகமாக குறைகிறது.

காப்ஃபைன்

காப்ஃபைன்

க்ரீன் டீயின் ஒரு கப்பில் 30 மி.கி காப்ஃபைன் உள்ளது. காப்ஃபைன் உடலின் ஆற்றலை தூண்டி, உடற்பயிற்சியில் நீண்ட நேரம் சிறப்பாக ஈடுபட உதவி, அதன் காரணமாக மறைமுகமாக உடல் எடையைக் குறைக்கிறது.

ஆய்வுகள்

ஆய்வுகள்

ஆய்வு ஒன்றில், க்ரீன் டீ குடிக்காமல், வெறும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தவர்களை விட, தொடர்ந்து க்ரீன் டீ குடித்து, உடற்பயிற்சி செய்து வந்தவர்களின் உடலில் 15% அதிகமாக கொழுப்புக்கள் கரைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் க்ரீன் டீ குடிக்காமல் உடற்பயிற்சி செய்து வந்தவர்களின் உடலில் 3% கொழுப்புக்கள் தான் கரைக்கப்பட்டிருந்ததாம்.

ஒரு நாளைக்கு எத்தனை கப் குடிக்கலாம்?

ஒரு நாளைக்கு எத்தனை கப் குடிக்கலாம்?

மேரிலாந்து மருத்துவ பல்கலைகழகமானது ஒரு நாளைக்கு 2-3 கப் க்ரீன் டீ குடிப்பது போதுமானது என்று பரிந்துரைக்கிறது. ஏனெனில் இதனால் ஒரு நாளைக்கு 240 முதல் 320 பாலிஃபீனால்கள் கிடைக்கும். இந்த பாலிஃபீனால்கள் ஒருவகையான தாவர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள். அதாவது இவை செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரித்து, உடல் எடை குறைய உதவும்.

பக்கவிளைவுகள்

பக்கவிளைவுகள்

க்ரீன் டீயை ஒரு நாளில் 2-3 கப்பிற்கு மேல் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் இதய துடிப்பை அதிகரித்து, தூக்கமின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, களைப்பு, மன இறுக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

யார் குடிக்கக்கூடாது?

யார் குடிக்கக்கூடாது?

க்ரீன் டீயை குடிக்க ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது. அதிலும் உங்களுக்கு இதயம் பிரச்சனை, சிறுநீரக பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரத்த சோகை, ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவை இருந்தால், க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இப்பிரச்சனைகளுக்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது, க்ரீன் டீ குடித்தால், அவை இடைவினைபுரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Does Green Tea Help You Lose Weight Fast Or Is It Just A Myth?

Does green tea help you lose weight fast or is it just another fad? Surely, green tea speeds up the metabolism. But here is what the health experts say...
Story first published: Saturday, December 12, 2015, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter