Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
அமைதியாக இருந்து ஆளைக் கொல்லும் கல்லீரல் கொழுப்புக்களை சரிசெய்யும் கிராமத்து கை வைத்தியங்கள்!
இன்றைய மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால், கல்லீரல் நோய்கள் ஒருவருக்கு சீக்கிரம் வந்துவிடுகிறது. கல்லீரல் நோய்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் அதனை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், தடுக்க முடியும். கல்லீரலில் ஏற்படும் முக்கியமான ஓர் பிரச்சனை தான் கல்லீரல் கொழுப்பு. கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்!!!
கல்லீரலில் கொழுப்பு செல்கள் அதிகமாக இருக்கும் நிலை தான் கல்லீரல் கொழுப்பு. கொழுப்புச் செல்கள் அதிகமானால் கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிக்கப்பட்டு, அதனால் நாளடைவில் கல்லீரல் செயலிழக்கக்கூடும். மேலும் இந்நிலையில் கல்லீரல் வீங்கி இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த பிரச்சனையானது சர்க்கரை நோய் மற்றும் குண்டாக இருப்பவர்களை அதிகம் தாக்குவதோடு, கொழுப்புமிக்க உணவுகளை உண்போரையும் தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கல்லீரல் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகள்!!!
கல்லீரல் கொழுப்பு ஏற்படாமல் இருக்கவும், கல்லீரலில் நச்சுக்கள் சேராமல் இருக்கவும் ஒருசில வழிகளை பின்பற்றி வந்தால், நிச்சயம் கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். மேலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிகள் கிராமத்து கை வைத்தியங்கள் என்பதால் பயப்படாமல் மேற்கொள்ளலாம். கல்லீரலைத் தூய்மைப்படுத்தும் 15 உணவுகள்!!!

எலுமிச்சை மற்றும் தண்ணீர்
ஒரு மாதம் தொடர்ந்து எலுமிச்சை சாற்றினை நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, அதில் உள்ள வைட்டமின் சி கல்லீரலில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றி, கல்லீரலின் செயல்பாட்டினை அதிகரிக்கும்.

மஞ்சள் மற்றும் தண்ணீர்
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, 15 நாட்கள் தினமும் இரண்டு டம்ளர் குடித்து வர, கல்லீரலில் உள்ள கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, கல்லீரல் சுத்தமாகும். ஹ

நெல்லிக்காய் ஜூஸ்
நெல்லிக்காயில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளதால், அது கல்லீரலை சுத்தம் செய்ய உதவும். அதிலும் உங்களுக்கு கல்லீரல் பிரச்சனை இருப்பின், தொடர்ந்து 25 நாட்கள் தினமும் காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வர, விரைவில் குணமாகியிருப்பதை உணர்வீர்கள்.

அதிமதுரம்
அதிமதுரம் இரத்தத்தை சுத்தம் செய்வதோடு, கல்லீரல் திசுக்களின் அளவை அதிகரித்து, கல்லீரல் நோய்களைத் தடுக்கும். அதற்கு அதிமதுரத்தை பொடி செய்து, அதனை ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வினிகர் மற்றும் தண்ணீர்
ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரில் சில துளிகள் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து உணவு உண்பதற்கு முன் குடித்து வர வேண்டும். இப்படி தினமும் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள கொழுப்புச் செல்கள் கரைக்கப்படுவதோடு, அழுக்குகளும் வெளியேறி, கல்லீரல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

க்ரீன் டீ
ஆய்வு ஒன்றில் தினமும் காலை மற்றும் மாலையில் ஒரு கப் க்ரீன் டீ குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, கல்லீரலின் இயக்கம் அதிகரித்து, அதன் ஆரோக்கியம் மேம்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு
முக்கியமாக அன்றாடம் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, கொழுப்புமிக்க உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்து மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்த்து, குடிக்கும் நீரின் அளவை அதிகரித்து வந்தால், கல்லீரல் பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம்.



Click it and Unblock the Notifications