ஆண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அந்தரங்க நோய்கள் - ஒரு ஷாக் ரிப்போர்ட!

Posted By: viswa
Subscribe to Boldsky

STD (Sexually Transmitted Diseases) எனப்படும் பாலுணர்வு நோய்கள் பற்றி ஒவ்வொரு ஆணும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். நீங்கள் அந்த விஷயத்தில் உத்தமராக இருந்தாலும். நான் வேறு பெண்களுடன் உறவுக் கொள்ளதில்லை, எனக்கு அந்த மாதிரி நோய்கள் வர வாய்ப்புகள் இல்லையென நீங்களே அனுமானிக்கலாம். ஆயினும், நீங்கள் இதைப் பற்றி தெரிந்துக் கொள்வது அவசியம். தவறான உறவினால் மட்டுமல்லாமல் தவறான அணுகுமுறைகளை கையாள்வதாலும் கூட ஆண்களுக்கு சில நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன.

அந்தரங்க சமாச்சாரங்களில் இருக்கும் தெளிவு, ஆண்களுக்கு அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரிந்து வைத்திருப்பது இல்லை. சில அறிகுறிகளை வைத்தே சில நோய்கள் நம்மை நெருங்குகிறதா என அறிந்துக்கொள்ளலாம். முளையிலேயே கிள்ளி எரிய வேண்டியதை வளரவிட்டு வேதனை படாமல் இருக்க ஆண்கள் அந்தரங்க சமாச்சாரங்களின் காரணங்களினால் ஏற்படும் நோய்களைப் பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக, 8 பாலுணர்வு நோய்களைப் பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளமீடியா (Chlamydia)

கிளமீடியா (Chlamydia)

கிளமீடியா ஒரு வகையான பாக்டீரியல் பாலுணர்வு நோயாகும். இது இந்நோய் உள்ள ஒருவருடன் உடல் சேர்க்கை வைத்துக் கொள்ளும் போது பரவுகிறது. தவறான உடல் சேர்க்கையினால் ஏற்படும் மிக பொதுவான பொய்யாக கிளமீடியா கருதப்படுகிறது. இந்நோய் வந்ததற்கான அறிகுறிகள், ஆணுறுப்பில் எரிச்சல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், விறைக்கொட்டைகளில் வீக்கம் போன்றவை ஆகும். சில சமயங்களில் இது பூரணமாக குணமாகாதப் போதிலும். இதன் அறிகுறிகள் நின்றுவிடும். எனவே, சரியான மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

மேக வெட்டை நோய் (Gonorrhoea)

மேக வெட்டை நோய் (Gonorrhoea)

மேக வெட்டை நோய், இதுவும் தவறான உடல் உறவினால் ஏற்படும் பாக்டீரியல் தொற்றுநோய் தான். இந்த நோய்க்கு அறிகுறியென எதுவும் இருக்காது. பெரும்பாலான ஆண்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படுவதாக கருதப்படுகிறது. இந்த நோய் காரணமாக விரைப்பை வீக்கம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அதன் நிறம் மஞ்சளாக போகும். இந்த நோய்க்கு சிகிச்சை எடுக்கும் போது கிளமீடியா நோயும் சரியாகிவிடும். ஏனெனில் பொதுவாக கிளமீடியாவும், மேக வேட்டை நோய் ஒன்றாகத் தான் தோன்றும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

ட்ரைக்கொமோனியாஸிஸ் (Trichomoniasis)

ட்ரைக்கொமோனியாஸிஸ் (Trichomoniasis)

பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்நோயில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் தோன்றுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தெளிவாக இந்த நோய் நமக்கு ஏற்பட்டுள்ளது என்பது இந்நோயின் தாக்கம் உள்ளவர்களுக்கே தெரியாது. இதன் காரணாமாக ஏற்படும் பிரச்சனைகள் சிறுநீரகத்தில் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்ப்படும்.

எச்.ஐ.வி (H.I.V)

எச்.ஐ.வி (H.I.V)

தவறான உடல் சேர்க்கையினால் ஏற்படும் மிக மோசமான உயிர்கொல்லி நோயாக உலகம் முழுவதும் கருதப்படுவது எச்.ஐ.வி நோய். ஆண், பெண் பிறப்புறுப்புகளில் தவறான உடல் சேர்க்கையினால் உருவாகும் இந்நோய்க்கு இந்நாள் வரை மருந்துகள் கண்டுபிடிக்கப் படவில்லை. இந்நோய்க்கு அறிகுறிகள் என சொல்லப்படுவது, அடிக்கடி காய்ச்சல் வருவது, உடல் எடை திடீரென குறைவது போன்றவை ஆகும். இந்நோயின் தாக்கம் வெளியே தெரியவே 1௦ வருடங்கள் ஆகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

ஹெர்பீஸ் (Herpes)

ஹெர்பீஸ் (Herpes)

ஹெர்பீஸ் ஒரு வைரஸ் தொற்று நோயாகும். மிகவும் வலி ஏற்படுத்தக்கூடிய நோயாகும். இந்த நோய் தாக்கம் ஏற்படும் போது எந்த அறிகுறிகளும் காட்டாது என்ற போதிலும். இது உடலில் பரவிடும் போது, ஆண் உறுப்பு, புட்டம், விதைப்பை, சிறுநீரகப் பகுதிகளில் கொப்புளங்களும், புண்களும் ஏற்படும். ஹெர்பீஸ் முத்த பரிமாற்றத்தினால் கூட பரவ வாய்ப்புகள் உள்ளதாய் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த வகையில் பரவும்போது இதழ்களில் புண் ஏற்படும். மேலும் இதை குணப்படுத்துவது கடினம் என்றும், வாழ்நாள் முழுக்க ஆன்டி-வைரல் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டயாம் ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

பிறப்புறுப்பில் மருக்கள் (Genital Warts)

பிறப்புறுப்பில் மருக்கள் (Genital Warts)

Human Papillomavirus infection எனும் தொடரின் மூலம் பரவும் நோய் தான் Genital Warts எனப்படும் பிறப்புறுப்பில் உருவாகும் மருக்கள் நோய். இவை, பிறப்புறுப்பு மட்டுமில்லாமல் புட்டத்திலும் தொற்று ஏறப்பட வாய்ப்புகள் உள்ளன. இதை எளிதில் குணப்படுத்திவிடலாம்.

ஹெபடைடிஸ் பி (Hepatitis B)

ஹெபடைடிஸ் பி (Hepatitis B)

ஹெபடைடிஸ் பி அபாயமான நோய் ஆகும். பாலுணர்வு நோய்களிலேயே இது மிகவும் ஆபத்தான நோயாக கருதப்படுகிறது. இதன் நோய் தொற்றினால் கல்லீரலிலும் பாதிப்புகள் ஏற்ப்படும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது இந்நோய் உள்ளவர்களுடன் உடல் உறவு அல்லது அவர்களின் இரத்தம் போன்றவையின் கலப்பின் காரணமாக ஏற்படுகிறது. இதன் அறிகுறிகள், வாந்தி, உடல் எடை குறைவு, தசை மற்றும் எலும்புகளில் வலி ஏற்படுவது, மஞ்சள் காமாலை போன்றவை ஆகும்.

மேக புண் (Syphilis)

மேக புண் (Syphilis)

மேக புண் நோய் தகாத உடல் உறவுகளினால் ஏற்படுகிறது. இந்நோய் நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது. முதல் நிலையிலேயே இதை கண்டறிந்து சரி செய்யாவிட்டால், இரண்டாம் நிலையில் உடல் பாகங்களை பாதிக்க ஆரம்பித்துவிடும். கடைசி நிலைகளில் இது மூளையை பாதிக்கும் அபாயமும் இருக்கிறது. இதனால் கண் பார்வை மற்றும் காது கேளாமை போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள். எனினும், இது குணப்படுத்த கூடியது தான். எனவே, ஆண்கள் இதுப்போன்ற உடலுறவு சார்ந்த நோய்களில் வருடத்திற்கு ஒருமுறையாவது சரியான உடல் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

8 STDs All Men Should Know About

Men should aware about it. There are 8 STDs all men should know about.
Story first published: Sunday, February 15, 2015, 12:03 [IST]