பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வைத் தரும் தேங்காய் எண்ணெய்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

வீட்டு சிகிச்சைகளுக்காக நாம் நம் வீட்டில் சமையலறையில் இருக்கும் பொருட்களையே பயன்படுத்தலாம். அதில் மிக முக்கியமான ஒன்றாக இருப்பது தேங்காய் எண்ணெய். பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வை அளிக்கும் இயற்கையான வீட்டு சிகிச்சையில் ஒன்றாக தேங்காய் எண்ணெய் விளங்குகிறது. புண்களை ஆற வைப்பது முதல் சருமத்திற்கு ஈரப்பதம் அளிப்பது வரை இதன் பயன்கள் மிக நீண்டதாகும். சந்தையில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தேவையற்ற எதிர்வினைகளை தவிர்க்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதுப்போக பல வித பயன்களை அளிக்கிறது தேங்காய் எண்ணெய்.

பல ஆண்டு காலமாக அதன் மருத்துவ குணங்களுக்காக அறியப்படுவது தேங்காய் எண்ணெய். இயற்கையான வடிவில் உள்ள தேங்காய் எண்ணெய், பல்வேறு சரும பிரச்சனைகளுக்கும் ஒரு மிகச்சிறந்த வீட்டு சிகிச்சையாக பயன்படுகிறது. சந்தையில் கிடைக்கும் பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். அதனால் தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கையான பொருட்களை பாதுகாப்பாக தேர்ந்தெடுங்கள்.

தேங்காய் எண்ணெய்யை அருந்தவும் செய்யலாம் அல்லது உடலின் மீது தடவியும் பயன்படுத்தலாம். அதனை உட்கொள்ளும் போது, ஆரோக்கியமான மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவுவதோடு, பயன்படக்கூடிய ஆற்றலையும் அளிக்கும். தேங்காய் எண்ணெயின் கிருமிநாசினி குணம் இருப்பதால், உடலின் மீது தடவுவதற்கு அது சிறந்த வீட்டு சிகிச்சை மருந்தாக செயல்படுகிறது. தேங்காய் எண்ணெயை வீட்டு சிகிச்சைக்காக பயன்படுத்தும் போது, அதனால் கிடைக்கும் சில நன்மைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேக்-அப்பை நீக்க...

மேக்-அப்பை நீக்க...

ஏற்கனவே சொன்னதை போல், வீட்டு சிகிச்சை அளித்திட தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாக உள்ளது. இதனை மேக்-அப்பை களைப்பதற்கும் பயன்படுத்தலாம். முகத்தில் போட்டிருக்கும் மேக்-அப்பை நொடிப்பொழுதில், எந்த ஒரு பாதிப்பும் இன்றி நீக்க இது உதவும்.

மௌத் ஃப்ரெஷ்னர்

மௌத் ஃப்ரெஷ்னர்

தேங்காய் எண்ணெயின் வீட்டு சிகிச்சைகளில் மௌத் ஃப்ரெஷ்னரும் ஒன்றாகும். இதனை புரிய தேங்காய் எண்ணெயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பி குணங்கள் உதவிடும்.

பேன் சிகிச்சை

பேன் சிகிச்சை

பேன் சிகிச்சைக்கும் இது பயன்படுவதால் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த வீட்டு சிகிச்சையாக செயல்படுகிறது. இதனை தலையில் தேய்த்து விட்டு 12-24 மணி நேரம் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் தலையை வாரிக்கொள்ளுங்கள்.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

குளிர் காலத்தில் தேங்காய் எண்ணெய் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வறண்ட சருமத்திற்கு, குறிப்பாக முழங்கைகள் மற்றும் மூட்டுகள்.

 தோல் வெடிப்புகள்

தோல் வெடிப்புகள்

தேங்காய் எண்ணெயின் மிகச்சிறந்த பயன்களில் இதுவும் ஒன்றாகும். மேல்தோல் உரிக்கப்படும் போது அதனை ஆற வைக்க இது உதவும். மேனிக்யூர் செய்த நகங்களில் பயன்படுத்தினால் அது நீடித்து நிலைக்கும்.

உதட்டு தைலம்

உதட்டு தைலம்

உதட்டில் வெடிப்பு ஏற்பட்டால் வலி மிகுந்ததாக இருக்கும். சில நேரங்களில் இரத்தக் கசிவும் ஏற்படும். அதற்கான சிறந்த தீர்வுகளில் ஒன்று தான் தேங்காய் எண்ணெய்:

ஸ்ட்ரெட்ச் மார்க்

ஸ்ட்ரெட்ச் மார்க்

பிரசவத்திற்கும் முன்பும் பின்பும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை போக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.

தழும்புகள்

தழும்புகள்

தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதால் தழும்புகள் முழுமையாக நீங்கும் என நாங்கள் கூறவில்லை. ஆனால் வீட்டு சிகிச்சையாக தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தும் போது கரும்புள்ளிகள் மற்றும் கொப்புளங்கள் உருவாகாமல் தடுக்கும்.

கண்களுக்கு கீழ்

கண்களுக்கு கீழ்

இதில் பல வித மருத்துவ தன்மைகள் உள்ளதால், முகத்தில் உள்ள சருமத்தில் மிகவும் மென்மையானதாக விளங்கும் கண்களுக்கு கீழான சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தேர்வாக இருக்கும்.

தொற்றுக்கள்

தொற்றுக்கள்

தேங்காய் எண்ணெயில் நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் உள்ளதால், உங்களுக்கு சில தொற்றுக்கள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக அமையும். காயங்கள் மற்றும் வெட்டுப் புண்களுக்கும் இது கிருமிநாசினியாக செயல்படும்.

பொடுகு சிகிச்சை

பொடுகு சிகிச்சை

வறண்ட தலைச்சருமத்தால் ஏற்படுவது தான் பொடுகு. அதற்கு தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மென்மையாக மசாஜ் செய்திடுங்கள்.

அரிப்பு நிவாரணம்

அரிப்பு நிவாரணம்

மூட்டைப் பூச்சி கடிகள் மற்றும் பல விதமான அரிப்புகள் ஏற்படும் போது இது மிகவும் பயனுள்ளதாக விளங்கும். இது கிருமிநாசினியாக செயல்பட்டு, மூட்டு கடிகளும் நிவாரணம் அளிக்கும்.

கண்டிஷனர்

கண்டிஷனர்

உங்கள் முடிக்கு இயற்கையான வழியில் கண்டிஷன் அளிக்க வேண்டும் என்றால் தேங்காய் எண்ணெய்யை தேர்ந்தெடுங்கள். சந்தையில் கிடைக்கும் பிற பொருட்களுடன் ஒப்பிடுகையில், சிறப்பாக செயலாற்ற இது கண்டிப்பான உத்திரவாதத்தை அளிக்கும்.

சுருக்கம்

சுருக்கம்

சுருக்கங்களுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வை அளிக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தும். அதனால் இரவு நேர கிரீம்மாக இதனைப் பயன்படுத்தலாம்.

முடி வளர்ச்சியை மேம்படுத்தும்

முடி வளர்ச்சியை மேம்படுத்தும்

தேங்காய் எண்ணெய்யை கொண்டு தலையில் மசாஜ் செய்தால், முடி வளர்ச்சி மேம்படும். மேலும் முடி கொட்டுவதையும் இது தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Ways To Use Coconut Oil As A Home Remedy

Here are some of the most common uses of coconut oil as a home remedy.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter