Latest Updates
-
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன? -
உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
மலேசியா ஸ்பெஷல் முட்டை சம்பல் ரெசிபி - 4 முட்டை இருந்தா போதும் - தரமான சைடிஷ் ரெடி! -
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா?
முளைக்கட்டிய தானியங்களின் சுகாதாரப் பலன்கள்!!!
நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் பெரும் பங்கு வகிக்கின்றது. ஆதலால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் ஊட்டச்சத்து நிரம்பியதாகவே இருக்க வேண்டும். பாக்கெட்களில் கிடைக்கும் உணவுவகைகளை தவிர்த்து, வீட்டிலேயே தயாரிக்கும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். இதனால், நம்மை தாக்கும் கொடிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
முளைக்கட்டிய தானியங்கள் அதிக ஊட்டச்சத்தும் புரோட்டீன் நிறைந்த ஒரு இயற்கையான உணவாகும். பருப்புகள், கடலைகள், விதைகள், தானியங்கள் மற்றும் அவரை வகைகளை முளைக்கட்டலாம். முளைக்கட்டல் மூலம் அவற்றின் கனிமப்பொருள் உள்ளிழுக்கப்பட்டு புரோட்டீன், வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து தன்மை அதிகரிக்கின்றது. முளைக்கட்டல் முறையில் அவற்றில் இருக்கும் ஜீரண பிரச்சனைகளை உண்டாக்கும் ப்ஹைடெட் போன்ற ஆன்டி-நியூடிரியன்ட் பொருட்களை குறைக்கச் செய்கின்றது. அவற்றில் உள்ள கடினமான ஸ்டார்ச் பொருட்களை குறைத்து ஜீரணத்திற்கு உதவி புரியும் நொதிகளை உருவாக்கச் செய்கின்றது. முளைக்கட்டல் என்பது தானியங்களையும் பருப்புகளையும் தண்ணீரில் வெகு நேரம் ஊறவைப்பதுதான் ஆகும்.
கடலை வகையான பாதாம் போன்றவற்றை முளைகட்டுதல் மூலம் அவற்றில் ஒளிந்திருக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் வெளியில் கொண்டுவரப்படுகின்றது. பாதாம் பருப்பை முளைக்கட்டும் போது லிபெஸ் என்னும் ஜீரணத்திற்கு உதவி புரியும் நொதியை உருவாக்கி நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கச் செய்யும். கொள்ளு, முள்ளங்கி விதை, ப்ராக்கோலி, மற்றும் சோயா போன்றவைகளை முளைக்கட்டுவது மூலம் அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் கூட்டுப்பொருள் உருவாகும். இவற்றில் உள்ள அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் வயது முதிர்ச்சியை குறைக்கச் செய்யும்.
முளைக்கட்டிய தானியங்கள் எளிதாக கிடைக்கக் கூடிய விலைகுறைவான பொருளாகும். பச்சை பயறு,கடலை பருப்பு, கொண்டைக்கடலை, அவரை விதை, காய்ந்த பட்டாணி போன்றவை நமது நாடு முழுவதிலும் எளிதாக கிடைக்கக் கூடிய தானியங்கள் ஆகும். பல நுற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் முளைக்கட்டிய பொருள்களை பயன்படுத்தி வருகின்றனர். இவை அனைத்திலும் முளைக்கட்டிய குதிரைகொள்ளு அதிகமான பலன்களை கொண்டுள்ளது. இதில் மாங்கனீஸ், வைட்டமின் ஏ, பி, சி, டி, ஈ, கே மற்றும் அமினோ அமிலங்களை நிறைந்துள்ளது.
இப்பொழுது முளைக்கட்டிய தானியங்களின் சுகாதார பலன்களை படிக்கலாம்.

நொதிகள்
பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களைக் காட்டிலும் முளைக்கட்டிய தானியங்களில் ஏராளமான நொதிகள் உள்ளடங்கியுள்ளது என்று நிரூபணமாகியுள்ளது. அதிக புரோட்டீன் நிறைந்துள்ள நொதிகள் எனப்படுவது நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து வைட்டமின், மினரல், அமினோ அமிலம், தேவையான கொழுப்பு அமிலங்கள் போன்றவற்றை எடுக்கும் ஊக்கிகளாகும்.

அதிக புரோட்டீன்
விதைகள், கடலைகள், மற்றும் தானியங்கள் போன்றவற்றை முளைக்கட்டுவதன் மூலம் அதில் இருக்கும் புரோட்டீன்களின் தரம் அதிகரித்து ஊட்டச்சத்தை அளிக்கின்றது. முளைகட்டிய தானியங்களில் உள்ள சிலவகையான அமினோ அமிலங்கள் நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்யும்.

அதிக நார்ச்சத்து
முளைக்கட்டுவதன் மூலம் உடல் எடை குறைப்பு மற்றும் ஜீரணத்திற்கு உதவும் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கின்றது. நார்ச்சத்தானது நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புச்சத்தையும் நச்சுபொருட்களையும் நீக்குவதற்கு உதவுகின்றது.

வைட்டமின்கள்
முளைக்கட்டும் முறையால் அவற்றில் உள்ள பலவகையான வைட்டமின்கள் அதிகரிக்கின்றது. குறிப்பாக, வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ வகைகள் அதிகரிக்கின்றன. முளைக்கட்டும் முறையால் சிலவற்றில் இருக்கும் வைட்டமின்கள்களின் அளவு 20 மடங்கு அதிகரிக்கின்றது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அமினோ அமிலங்கள்
ஒழுங்கற்ற டயட் முறையால் ஏற்படும் அமினோ அமிலக் குறைபாடுகள் இப்பொழுது அதிகரித்துவருகின்றன. முளைக்கட்டல் முறையால் மேடபாலிசத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள் அதிகரிக்கின்றது.

இன்றியமையாத கனிமப் பொருட்கள்
முளைக்கட்டிய தானியங்களில் உள்ள இன்றியமையாத கனிமப்பொருட்கள் நமது உடலுக்கு அதிகமாகத் தேவைப்படுக்கின்றன. முளைக்கட்டிய தானியங்களில் அல்கலைன் கனிமப் பொருட்களான கால்சியம், மக்னீசியம் போன்றவைகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட புரோட்டீன்கள் நிறைந்துள்ளது. இவை ஜீரண சக்திக்கு பெரிதும் உதவுகின்றது.

அதிக சக்தி வாய்ந்தவை
முளைக்கட்டல் மூலமாக அவற்றில் ஒளிந்திருக்கும் ஏராளமான சக்திகள் வெளிவந்து நமது உடலில் வந்தடையும். பாதாம் பருப்பை முளைக்கட்டும் போது லிபெஸ் என்னும் ஜீரணத்திற்கு உதவி புரியும் நொதியை உருவாக்கி நமது உடலில் உள்ள கொழுப்புச்சத்தை குறைக்கச் செய்யும்.



Click it and Unblock the Notifications
