Latest Updates
-
ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் சிவப்பு அவல் கேசரி - 5 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
இந்தியாவின் 'தங்க நகரம்' என்று அழைக்கப்படும் அதிசய நகரம் - இதுக்கு என்ன காரணம் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 05-ல் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
உலகில் அதிக மின்சாரத்தை உபயோகிக்கும் டாப் 5 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
காரைக்குடி செட்டிநாடு சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
ஆடிப் பெருக்கு ஸ்பெஷல் மிளகு புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
எந்த நோய்க்கு எந்த ஜூஸ் குடிப்பது நல்லது? - விளக்கும் டாக்டர்.பிள்ளை! -
நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2027 வரை சகல நன்மைகளையும், ராஜயோகத்தையும் அடையப்போகும் ஒரே ராசி எது தெரியுமா? -
சனி மங்கள யோகம்: இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
சரவணபவன் ஸ்டைல் வெள்ளை குருமா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்!
வெந்நீருடன் தேன் சாப்பிட்டு எடையை குறைக்கலாம் வாருங்கள்!
உணவுகள் மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் தேன் ஆரோக்கியத்தையும், சுவையையும் ஒருங்கே தரும் அற்புத மருந்தாகும். உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்க தேனை தினமும் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். தேனை சாப்பிட பல்வேறு வழிகள் உள்ளன.
அதில் ஒரு நாளைக்கு ஒரு தேக்கரண்டி தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது பானங்கள் மற்றும் உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம். அதிலும் தேனை வெந்நீருடன் கலந்து சாப்பிடுவதும் ஒரு நல்ல வழிமுறை. குறிப்பாக வெந்நீரில் சிறிதளவு தேனையும், சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றையும் கலந்தும் குடிக்கலாம்.
இதுப்போன்று வேறு சில: ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?
இப்படி வெந்நீருடன் தேன் கலந்து சாப்பிடுவதால், உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்று இந்த கட்டுரையில் பார்ப்போம்.

செரிமானம்
தினமும் காலையில் வெந்நீரில் தேனும், எலுமிச்சை சாறும் கலந்து குடித்தால் உணவு செரிமானம் நன்முறையில் நடக்கும். வெந்நீருடன், எலுமிச்சை சாற்றை கலந்து சாப்பிட்டால் காலை நேரத்தில் வயிறு சுத்தமாக அது உதவும். உணவுப்பொருளை கரைக்கக் கூடிய திரவங்களை நுரையீரலில் உற்பத்தி செய்ய வைக்க இந்த முறை உதவும். எலுமிச்சை சாற்றையும், தேனையும் வெந்நீரில் கலந்து குடிக்கும் போது, செரிமானக் குழாய் தளர்வடையும். அதனால் உணவு அந்த வழியில் எளிதில் செல்லும். இதன் மூலம் தேவையற்ற எடை கூடுதல் மற்றும் வயிறு உப்புசமடைதல் போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். இந்த வழியில் வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து சாப்பிட்டு உடல் எடையைக் குறைக்க முடியும்.

சுத்தம் செய்தல்
வெந்நீருடன் தேன் கலந்து சாப்பிட்டு, உடலிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் மற்றும் இதர பொருட்களை சுத்தம் செய்து, உப்புசமடைதல், வயிறு வலி போன்ற பிரச்னைகளை தவிர்க்க முடியும். வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து குடிப்பதால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். அதன் காரணமாக உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் நீக்கப்படுகின்றன. உடலிலுள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீருடன் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமடைவதால், தேவையற்ற வகையில் உடல் எடையை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் அசுத்தங்களும் வெளியேற்றப்படுகின்றன. வெந்நீரில் உள்ள சுத்தம் செய்யும் குணங்கள் தேனுடன் கூட்டாக சேர்ந்து உடல் எடைய குறைத்து விடுகிறது.

சக்தி ஊக்கி
தேன் மற்றும் வெந்நீர் ஆகியவை மிகவும் சிறப்பான சக்தி ஊக்கிகளாகும். உயர்வான அளவில் சக்தி ஊட்டம் பெறுவதால் உடலின் செயல் திறனும், செயல்பாடுகளும் அதிகரித்து விடுகிறது. தேனின் குணங்கள் உடலின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தும் பணியை சிறப்பாக செய்கிறது. உயர்வான அளவிலான செயல் திறன் காரணமாக அதிகளவிலான கலோரிகள் எரிக்கப்பட்டு விடுகின்றன. இந்த வகையில் கொழுப்புகளும், கலோரிகளும் எரிக்கப்படுவதால் உடல் எடையும் கணிசமாக குறைகிறது. மேலும், காலை நேரங்களில் வெந்நீருடன் எலுமிச்சை சாற்றை தினனும் குடித்த வந்தால், உடலின் செயல் திறன் நாள் முழுமையும் அதீதமாக இருக்கும்.

பசியை குறைத்தல்
தேன் மற்றும் எலுமிச்சையை சேர்த்து வெந்நீரை குடிப்பதால் உடலின் பசியைக் குறைத்திட முடியும். இந்த வெந்நீரை தினமும் குடிப்பதால், தினமும் சாப்பிடும் உணவின் அளவ குறைவாக இருக்கும். வெந்நீருடன் சேர்த்து தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை குடிக்கும் போது அதிலுள்ள நார்ச்சத்து பசியை குறைக்கவும், சர்க்கரையின் அளவை குறைக்கவும் செய்து போதுமான அளவு சக்தியை அளிக்கிறது. எனவே தான், தங்களுடைய தினசரி வாழ்க்கையை ஒரு கோப்பை வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு குடித்து துவக்குபவர்கள் எளிதில் எடையைக் குறைத்து விடுகிறார்கள்.

ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள்
வெந்நீருடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கும் போது உடலின நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இந்த பானத்தில் உடலுக்கு மிகவும் அவசியமான ஆக்ஸிஜன் எதிர் பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலின் எடையும் குறைகிறது. எரிச்சலுக்கு எதிரான குணங்களை கொண்டிருக்கும் இந்த பானம் வயிறு உப்புசமடைவதையும் தவிர்க்கிறது.
ஆகவே மேற்கண்ட வழிகளில் வெந்நீருடன் தேன் கலந்து சாப்பிட்டு உடல் எடையை குறைத்து பயன் பெறுங்கள்.



Click it and Unblock the Notifications