பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

பல உடல்நல பயன்களை கொண்டுள்ள எளிய மூலப்பொருளான பூண்டு இல்லாமல், இந்தியா உணவுகள் முழுமை அடையாது. மிகவும் திடமானதாகவும், கசுப்புத்தன்மையுடனும் இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படும் உணவில் அதீத சுவை மணம் கூடும். அதேப்போல் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி குறிப்பிடாமல், பூண்டை பற்றிய விளக்கம் நிறைவு பெறாது. நினைவிற்கு எட்டாத காலம் முதல், பல வித நோய்கள் மற்றும் மருத்துவ நிலைகளை தடுக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், இந்த அதிசய மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.

பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

பூண்டை நன்றாக நறுக்கினாலோ அல்லது துண்டு துண்டாக வெட்டினாலோ அல்லது மசித்தாலோ அல்லிசினால் கிடைக்கும் உடல்நல பயன்களை திரட்டிடலாம். பூண்டில் செலினியமும் அதிகமாக உள்ளது. அஜோன், அல்லின், அல்லிசின் போன்ற மூலப்பொருட்களுடன் கூடிய பூண்டினால் நம் உடலின் சுற்றோட்ட, செரிமான மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் அமைப்புகளின் மீது சிறந்த தாக்கம் இருக்கும். மேலும் இரத்தக் கொதிப்பை குறைக்கவும், நச்சுத்தன்மையை நீக்கவும், உட்காயங்களை குணப்படுத்தவும் கூட பூண்டு பயன்படுகிறது.

இதோ, பூண்டினால் ஏற்படும் 15 உடல்நல பயன்கள், உங்களுக்காக!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி

பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி

பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான பூண்டு.

சரும தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க..

சரும தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்க..

பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.

இரத்தத்தை சன்னமாக்குதல்

இரத்தத்தை சன்னமாக்குதல்

பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனத்தில் இரத்தத்தை உறைதல் எதிர்ப்பி குணங்கள் இருப்பதால், உடலில் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். இதனால் அறுவை சிகிச்சைக்கு பின், இரத்த கசிவு அதிகரிப்பதற்கான இடர்பாடுகள் அதிகம்.

இரத்த கொதிப்பை குறைக்கும்

இரத்த கொதிப்பை குறைக்கும்

ஏஞ்சியோடென்சின் II என்ற புரதம் நம் இரத்த குழாய்களை சுருங்க வைக்கும். இதனால் இரத்த கொதிப்பு அதிகரிக்கும். பூண்டில் உள்ள அல்லிசின், ஏஞ்சியோடென்சின் II-வின் நடவடிக்கைகளை தடுக்கும். இதனால் இரத்த கொதிப்பை குறைக்கும். பூண்டில் உள்ள பாலிசல்ஃபைட்ஸ், சிவப்பு இரத்த அணுக்களால் ஹைட்ரஜன் சல்பைடு என்ற வாயுவாக மாற்றப்படும். நம் இரத்த குழாய்களை ஹைட்ரஜென் சல்பேட் விரிவாக்குவதால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க அது உதவிடும்.

இதயத்தை பாதுகாக்கும்

இதயத்தை பாதுகாக்கும்

நெஞ்சு வலி மற்றும் தமனித் தடிப்பு போன்ற இதயகுழலிய பிரச்சனைகளில் இருந்து நம் இதயத்தை பூண்டு பாதுகாக்கும். இதிலுள்ள இதய பாதுகாப்பு குணத்திற்கு பல காரணங்கள் அடங்கியுள்ளது. வயது ஏற ஏற, விரிவடையும் திறனை தமனிகள் இழக்கத் தொடங்கும். இதனை குறைக்க பூண்டு உதவும். மேலும் ஆக்சிஜன் இயக்க உறுப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் இதயத்தை காக்கும். பூண்டில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள், இரத்த குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும். மேலும் தமனித் தடிப்பு வளர்ச்சியையும் மெதுவாக்கும். அஜோனின் இரத்த உறைதல் எதிர்ப்பி குணங்களால், இதயத்திற்குள் இரத்த கட்டிகள் உருவாகாமல் தடுக்க உதவும்.

கொலஸ்ட்ராலை குறைக்கும்

கொலஸ்ட்ராலை குறைக்கும்

நம் இரத்த ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும், தமனி பிளேக் உருவாக்கத்தை குறைக்கும் தன்மையும், பூண்டில் அதிகமாக உள்ளது.

அலர்ஜிகளை எதிர்க்கும்

அலர்ஜிகளை எதிர்க்கும்

பூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்களும் அடங்கியுள்ளது. இதனால் நம் உடல் அழற்சிகளை எதிர்த்து போராட இது உதவிடும். டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் ஆகியவை பூண்டில் இருப்பதால் இதற்கு கீல்வாத எதிர்ப்பி குணங்களும் உள்ளது. அலர்ஜியால் ஏற்படும் அழற்சியை (ஒவ்வாமை நாசியழற்சி போன்றவைகள்) குணப்படுத்த பூண்டு உதவுகிறது. பச்சையாக பூண்டை ஜூஸாக்கி பருகினால், படை மற்றும் மூட்டப்பூச்சி கடியினால் ஏற்படும் அரிப்பை உடனடியாக நின்றுவிடும்.

சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வு

சுவாச பிரச்சனைகளுக்கான தீர்வு

பூண்டை தினசரி பயன்படுத்தி வந்தால், சளி ஏற்படும் எண்ணிக்கைகள் குறைந்துவிடும். அதிலுள்ள பக்டீரியா எதிர்ப்பி குணங்கள் தொண்டை எரிச்சல்களை குணப்படுத்த உதவும். மேற்பகுதி சுவாச பாதை தொற்றுக்களின் தீவிரத்தை குறைக்க பூண்டு உதவிடும். ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம் போன்ற நுரையீரல் கோளாறுகளுக்கும் இது பயனளிக்கும். அதனால் கண்டிப்பாக இது ஒரு விலை மதிப்பற்ற மருந்தே. இதன் சளிநீக்கம் திறனால் தீவிர மூச்சுக்குழாய் அழற்சியும் குறையத் தொடங்கும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

பூண்டால் இன்சுலின் சுரத்தல் அதிகரிக்கும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும் இது உதவிடும்.

மருக்கள் மற்றும் காலாணிகள் எதிராக சிறப்பாக செயல்படும்

மருக்கள் மற்றும் காலாணிகள் எதிராக சிறப்பாக செயல்படும்

கொழுப்பை கரைக்கும் பூண்டு சாற்றை காலாணிகள் மற்றும் கையில் இருக்கும் மருக்களின் மீது தடவினால் நல்ல பலனை அளிக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

புற்றுநோயைத் தடுக்கும்

தினமும் பூண்டை உட்கொண்டு வந்தால், பல வகையான புற்றுநோய் ஏற்படும் இடர்பாடு குறையும். பூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால் தான் புற்றுநோய் எதிர்ப்பியாக இது செயல்படுகிறது. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணமாக இருப்பது PhIP என்ற ஒரு வகை ஹெட்ரோசைக்ளிக் அமைன் (HCA). பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு தான் PhIP-யை கார்சினோஜென்ஸாக மாற்றுகிறது.

இரும்பு மெட்டபாலிசத்தை மேம்படுத்துதல்

இரும்பு மெட்டபாலிசத்தை மேம்படுத்துதல்

இரும்புச்சத்தை உறிஞ்சவும், வெளியற்றவும் உதவுவது ஃபெர்ரோபோர்டின் என்ற புரதம் தான். பூண்டில் உள்ள டையாலில் சல்பைடு, ஃபெர்ரோபோர்டின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். இதனால் இரும்பு மெட்டபாலிசம் மேம்படும்.

உணர்வுகளை கிளறி விடும்

உணர்வுகளை கிளறி விடும்

இரத்தத்தின் சுற்றோட்டத்தை அதிகரிக்கும் திறன் பூண்டில் உள்ளதால், அதில் பாலுணர்வைத் தூண்டும் குணம் அடங்கியுள்ளது.

பல் வலிகள்

பல் வலிகள்

நசுக்கிய பூண்டு மற்றும் கிராம்பை நேரடியாக பாதிக்கப்பட்ட பற்களில் போடுங்கள். இதில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் வலி நிவாரணி குணங்கள் அடங்கியுள்ளதால், பல் வலிக்கு நிவாரணம் அளிக்க இது உதவும். ஆனால் இது ஈறுகளில் எரிச்சலை உண்டாக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

உடல் எடையை குறைத்தல்

உடல் எடையை குறைத்தல்

உடல் பருமன் என்பது நீண்ட-கால குறைந்த-தர அழற்சி என பல ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றின் படி, பூண்டு உடலில் உள்ள கொழுப்பு அணுக்களின் உருவாக்கத்தை சீர்படுத்த உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

15 Health Benefits Of Garlic

Indian curries are incomplete without garlic – a simple ingredient with packed health benefits. It is very strong and bitter but adds an unbelievable flavour to the cuisine. Any description of garlic is incomplete without mentioning its medicinal values. Here are 15 health benefits of garlic:
Please Wait while comments are loading...
Subscribe Newsletter