For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கிய பிரச்சனைகளும்.. அதற்கான பாட்டி வைத்தியங்களும்...

By Maha
|

ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று எவ்வளவு தான் உணவுகளை பார்த்து பார்த்து உண்டாலும், உடலில் பிரச்சனைகள் வரத் தான் செய்கின்றன. அப்படி உடலில் பிரச்சனை வருகையில், கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ, கடன் வாங்கிக் கொண்டாவது அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று விடுவோம். ஆனால் அனைவருக்கும் நினைவு இருக்கிறதோ இல்லையோ, அக்காலத்தில் எல்லாம் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய எந்த ஒரு மருந்துகளும் இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு சரிசெய்து, நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.

அதுமட்டுமின்றி, தற்போது மருந்து மாத்திரைகளின் விலை அதிகம் இருப்பதோடு, சில நேரங்களில் போலி மருந்து மாத்திரைகளையும் வாங்கி சாப்பிட வேண்டிய நிலை இருப்பதால், எப்போதும் மருந்து மாத்திரைகளை நம்பாமல், இயற்கை வைத்தியங்களை மேற்கொண்டால், எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஒவ்வொருவரும் தினமும் நிச்சயம் உடலில் ஒரு பிரச்சனைகளையாவது சந்திப்போம். அப்படி சந்திக்கையில், அதனை குணமாக்குவதற்கு நமது முன்னோர்கள் கடைப்பிடித்த வைத்தியங்களை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதோடு, நீங்களும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழலாம்.

சிலருக்கு பாட்டி வைத்தியங்களைப் பற்றி தெரியாமல் இருக்கும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில உடல்நல பிரச்சனைகளையும், அதற்கான பாட்டி வைத்தியங்களையும் பட்டியலிட்டுள்ளது. அதனைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பல் வலி

பல் வலி

அடிக்கடி பல் வலி ஏற்பட்டால், வேப்பங்குச்சியைக் கொண்டு பற்களை துலக்கினால், வேப்பங்குச்சியில் உள்ள கசப்புத்தன்மையினால், பற்களில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு, பல் வலி நீங்கும். அதுமட்டுமின்றி, இதனால் பற்கள் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டாலும், பற்கள் வலுவுடன் இருக்கும்.

மூக்கடைப்பு

மூக்கடைப்பு

மூக்கடைப்பு இருந்தால், ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி 1/2 லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, அதனை பால் மற்றும் சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

வறட்சி இருமல்

வறட்சி இருமல்

வரட்டு இருமல் வரும் போது, எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து, அதில் தண்ணீர் மற்றும் தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

பல் சொத்தை

பல் சொத்தை

பற்கள் சொத்தையாக இருந்தால், சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து வாயில் போட்டு, பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

கக்குவான் இருமல்

கக்குவான் இருமல்

குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமலைப் போக்க, வெற்றிலைச் சாற்றுடன், தேன் கலந்து கொடுக்க குணமாகும்.

உடல் பருமன் குறைய வெங்காயம்

உடல் பருமன் குறைய வெங்காயம்

உடல் பருமன் குறைய வேண்டுமானால், வெங்காயத்தை சாப்பிட வேண்டும். ஏனெனில் வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புபவர்கள் உணவில் வெங்காயத்தை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.

வெள்ளையான பற்கள்

வெள்ளையான பற்கள்

பற்கள் வெள்ளையாக வேண்டுமானால், ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். அதுமட்டுமின்றி, தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். குறிப்பாக பற்களை தேய்த்துக் கழுவும் போது, ஈறுகளைத் தேய்த்துக் கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

உடல் சூடு

உடல் சூடு

ரோஜா இதழ்கள், கற்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

உடல் எடை குறைய உதவும் தேன்

உடல் எடை குறைய உதவும் தேன்

தேன் உடல் பருமனைக் குறைக்கும். ஆகவே தேனை சூடான தண்ணீரில் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால், உடல் பருமன் குறையும்.

கண் பார்வை

கண் பார்வை

தினமும் கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். அதுமட்டுமின்றி கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். மேலும் கண்கள் சிவப்பாக இருப்பதை மாற்றும்.

உடல் எடை அதிகரிக்க

உடல் எடை அதிகரிக்க

தினமும் வெண்ணெயில் கற்கண்டை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

இரத்த சோகை

இரத்த சோகை

இரத்த சோகைக்கு தேன் ஒரு சிறப்பான மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை அடையும். மேலும் உடலுக்குத் தேவையான இரத்தத்தையும் ஊறச் செய்யும்.

தேமல்

தேமல்

உடலில் தேமல் மறைய வேண்டுமானால், தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு,

* வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

* எலுமிச்சம் பழத்தின் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

* முள்ளங்கியை மோர் சேர்த்து அரைத்து, தேமல் உள்ள இடத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

மலேரியா

மலேரியா

மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும். பொதுவாக மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். ஆனால் துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. வேண்டுமெனில், கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

தீக்காயங்கள்

தீக்காயங்கள்

* தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.

* தினமும் தீப்புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் விரைவில் குணமாகிவிடும். மேலும் இது தீக்கொப்புளங்கள் ஏற்படாமலும் தடுக்கும்.

* தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்.

அடிக்கடி நரம்பு சுண்டி இழுத்தால்...

அடிக்கடி நரம்பு சுண்டி இழுத்தால்...

முளைக்கட்டிய பயிர்களை சாப்பிட்டால், இந்த நோய் வராது. அதிலும் இதனை வாரத்தில் 3 முறையானது உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இதில் தேன் சேர்த்து சாலட் போன்று சாப்பிட்டால், இன்னும் சிறந்தது. ஏனெனில் நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies For Common Health Problems

Many traditional home remedies exist for treating everyday health problems. Here some of the health problems and remedies are given. Take a look and try these remedies to treat that health problems.
Desktop Bottom Promotion