For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளியில் உள்ள வியக்கத்தக்க 9 நன்மைகள்!!!

By Super
|

குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பும் ஒரு காய் வகை தான் தக்காளி. இதில் உள்ள சிறப்பம்சமே இதனை பச்சையாகவே உண்ணலாம். அப்படிப்பட்ட தக்காளி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது அதன் இனிப்பு மற்றும் சுவை தான். அது உடல்நலத்திற்கு நன்மையை விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும் தானே. சரி அது ஏன் ஆரோக்கியமான உணவாக விளங்குகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?... அதிலுள்ள வைட்டமின் சி சத்தின் காராணமாகவா? குறைந்த கலோரிகள் உள்ளதாலா? கொழுப்பு இல்லாததாலா? ஆம்! ஆம்!! ஆம்!!! ஆனால் அதையும் தாண்டி இன்னமும் கூட சில காரணங்கள் உள்ளது.

சரி, தக்காளி ஏன் ஆரோக்கியமான தேர்வாக உள்ளது என்பதை பற்றி பார்க்கலாமா?

சிவந்த, பழுத்த தக்காளியை ஒரு கப் (150 கிராம்) அளவிற்கு உண்ணும் போது, போதுமான அளவு வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் கிடைக்கும். இயற்கையாகவே தக்காளியில் சோடியம், சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைந்த அளவில் இருக்கிறது. உயிர்ச்சத்து பி1, நியாசின் உயிர்ச்சத்து, வைட்டமின் பி6, மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் தாமிரமும் தக்காளியில் உள்ளதால், அது ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணையாக நிற்கும்.

இது போக 150 கிராம் தக்காளியில், 2 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினமும் பரிந்துரைக்கப்படும் அளவில் 7 சதவீத நார்ச்சத்து இதில் இருந்தே கிடைத்துவிடுகிறது. தக்காளியில் நீர்ச்சத்தும் அதிகமாக உள்ளது. அதனால் அது வயிற்றையும் நிரப்பிவிடும். மேலும் இரத்தக் கொதிப்பு, அதிக கொழுப்பு, வாதம் மற்றும் இதய நோய்களில் இருந்தும் தக்காளி காக்கும்.

சத்தான ஊட்டச்சத்தின் கலவையாக தக்காளி விளங்கினாலும், அதையும் மீறி இன்னும் இதில் பல நன்மைகள் அடங்கியுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Surprising Health Benefits Of Tomatoes

Tomatoes! They’re sweet, juicy, and delicious. Everyone knows they are good for you, right? Uh, yeah, sure. Does everyone know specifically why tomatoes are a healthful food? Let’s look at what makes the tomato an excellent healthy choice.
Desktop Bottom Promotion