Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க... -
இந்த 4 மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை அலட்சியமாக தண்ணீர் போல செலவழிப்பார்களாம் - உங்க பிறந்த மாதம் என்ன? -
சிம்ம ராசிக்கு செல்லும் சுக்கிரன்: ஜூலையில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது...
தீபாவளிக்கு பிறகு உடல் எடை அதிகரிக்காமல் இருக்க வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க...
இந்தியாவில் மட்டுமே பெருமளவில் பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இந்துமதப் பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் போன்ற பலவகை பண்டிகைகள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பண்டிகை நாட்களில், அந்தந்த பண்டிகையின் சிறப்பு வழிபாட்டை பின்பற்றி வருகின்றனர். இதன் மூலம் அந்தப் பண்டிகையின் பாரம்பரிய சிறப்பை வழிநடத்தி வருகின்றனர். உதாரணமாக, இப்பொழுது வர இருக்கும் தீபாவளி நன்னாளன்று விடியலில் துயில் எழுந்து, நீராடி, புத்தாடை அணிந்து, இனிப்புகளை உண்டு, பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.
தீபாவளி என்றாலே ஒளியும், இனிப்புகளும் நிறைந்தவை. தீபாவளி சமயத்தில் கலோரிகளை அறவே ஒதுக்குதல் என்பது முடியாது. இருப்பினும் நாம் கலோரிகளைக் குறைக்க சில வழிகளை பின்பற்றினால், இந்த தீபாவளியில் நாம் கலோரிக்களிடம் இருந்து விடுபடலாம். அதிலும் இந்த தீபாவளி சமயத்தில் கலோரிகளை குறைப்பதற்கு இதோ 10 எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பண்டிகைகள் என்றாலே உணவு வகைகள் இனிப்புகள் மற்றும் அதிக கலோரி நிறைந்த உணவுகள் தான். இதனால் உடல் பராமரிப்பில் கவனம் செலுத்துபவர்களுக்கு கலோரி உட்கொள்ளுவதை கட்டுபாட்டில் வைத்து கொள்வது கடினமாக இருக்கும். அதனால், பெரும்பாலானோர் உடல் எடை அதிகரிப்பது, இனிப்புகள் மற்றும் பண்டிகை நாட்களில் உட்கொள்ளும் உணவினால் என கருதி அதனை தவிர்த்து வருகின்றனர்.
சிறிதளவு கவனத்துடனும் விழிப்புணர்வுடனும் சாப்பிட்டால், கலோரிகளை குறைத்து உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும். இது வெறும் கலோரிகளின் அளவு சார்ந்த ஒன்றாகும். ஒரு பௌல் சாலட் அல்லது ஒரு துண்டு இனிப்பு சாப்பிடுவது ஒரு பெரிய விஷயம் அல்ல. ஆனால் நமக்கு தேவையான கலோரிகள் கிடைத்த பின்பு, அதனை நிறுத்தி விடலாம்.

தீபாவளிக்கு தயார் படுத்திக் கொள்ளவும்
இதற்கு அர்த்தம் தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும், தீபாவளி அன்று காலை முதலே கலோரிக்கள் உட்கொள்ளுவதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வழக்கமாக உட்கொள்ளும் காலை உணவைத் தவிர்த்து, கலோரிகள் குறைவாக உள்ள உணவை உட்கொள்ள வேண்டும். இதனால், மாலையில் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் பொழுது, அதிக கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்ளலாம்.

டீ அல்லது காபியைக் குறைக்கவும்
பணியில் இருக்கும் போது 4-5 கப் காபி அல்லது டீ உட்கொள்ளுவதை தவிர்க்க வேண்டும். இது 200-250 கலோரிக்களை குறைக்க உதவும்.

கோலா குடிப்பதை தவிர்க்க வேண்டும்
மதிய உணவோடு கோலா உட்கொள்வதால் 145 கலோரிகளை அதிகப்படுத்துகின்றோம். ஆகவே இதனை தவிர்த்து வந்தால், கலோரிகள் உட்கொள்ளுவது குறையும்.

உடற்பயிற்சி செய்தல்
தீபாவளிக்கு முன்னும் பின்னும் நாம் உடற்பயிற்சிக்கென்று சில மணிநேரங்கள் ஒதுக்குவதற்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இது உடல் எடை அதிகரிப்பதை குறைக்க உதவும். மேலும் இனிப்புகள் மற்றும் இதர கொழுப்பு நிறைந்த உணவுகளில் இருக்கும் கொழுப்புச்சத்து, உடலில் ஈர்க்கப்படாமல் இருக்க, நமது உடலை தயார்படுத்திக் கொள்ள உதவும்.

மதுபானங்கள்
தீபாவளிக்கு முதல் நாள் மற்றும் தீபாவளி அன்று மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இது கலோரிகளை குறைப்பது மட்டுமல்லாது, பண்டிகையை சந்தோஷமாக கொண்டாட உதவும்.

நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல்
நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளையே தேர்வு செய்யுங்கள். இதனால் நாம் சாப்பிடும் உணவை ரசித்து சாப்பிடலாம்.

குறைவாக சாப்பிட வேண்டும்
இது தீபாவளி அன்று இரவு நமது நண்பர்களை மற்றும் உறவினர்களை சந்திக்கும் பொழுது உதவியாக இருக்கும். குறைவாக சாப்பிட்டால், நாம் நமது நண்பர்களை சந்திக்கும் பொழுது, நிறைய இனிப்புகளை கவலையின்றி சாப்பிடலாம்.

கலோரிகள் குறைவாக உள்ள உணவு வகைகளை தேர்ந்தெடுத்தல்
இனிப்புகளிலும் இரண்டு வகை உண்டு. குறைந்த கலோரிகள் உள்ள உணவை தேர்ந்தெடுத்தால், நமது விருந்தினர்களை சந்தோஷப்படுத்தலாம்.

இரவு உணவு
இரவில் உட்கொள்ளும் உணவில் கவனம் தேவை. நாம் வீட்டிலேயே இருப்பதால், குறைந்த கலோரிகள் உள்ள உணவையோ, கார்போஹைட்ரேட் இல்லாத உணவு வகைகளையோ அல்லது வெறும் மோர் குடித்தோ இரவு உணவை தவிர்க்கலாம். அதுவும் மாலையில் சாப்பிட்ட உணவைப் பொறுத்து முடிவு செய்யலாம்.

நட்ஸ்
நண்பர்களை சந்திக்கும் பொழுது இனிப்புகளை தவிர்த்து, நட்ஸ் வகைகளை தேர்ந்தெடுக்கவும். நட்ஸ் வகைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை. மேலும் அது அதிக கலோரிகள் நிறைந்த உணவை உட்கொள்வதில் இருந்து தவிர்க்க உதவும்.



Click it and Unblock the Notifications