Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
உடலில் இரத்தம் குறைவா இருக்கா? ஈஸியா அதிகரிக்கலாம்!!!
மக்கள் நிறைய பேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதனால், அனீமியா என்னும் மறதி நோயால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அத்தகைய இரத்தத்தை அதிகப்படுத்த கடைகளில் நிறைய மருந்துகள் விற்கப்படுகின்றன. ஆனால் அவற்றை சாப்பிடுவதால் மட்டும் உடலில் இரத்தம் அதிகரிக்காது. ஒரு சில இயற்கையான வழிகளையும் தினமும் செய்ய வேண்டும்.
இதனால் உடலில் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, இரத்தம் சுத்தமாகவும், உடலும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இப்போது அந்த இயற்கை வழிகள் என்னவென்று பார்ப்போமா!!!

உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாக மட்டுமில்லாமல், உடலில் உள்ள இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். மேலும் சுத்தமான ஆக்ஸிஜன் உடற்பயிற்சி செய்யும் போது இரத்ததில் கலக்கிறது. ஆகவே இரத்தமும் சுத்தமாக, சீராக உடலில் இயங்குகிறது. அந்த உடற்பயிற்சியில் வாக்கிங், ஜாக்கிங், ரன்னிங், குதித்தல் போன்றவற்றை செய்யலாம்.

உணவுகள்
உடலில் இரத்தம் அதிகரிக்க வேண்டுமென்றால், நல்ல ஆரோக்கியமான, இரத்த அணுக்களை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதாவது கொய்யாப்பழம், டார்க் சாக்லேட், கீரைகள், உருளைக்கிழங்கு, பூசணிக்காய் விதை, பயிர் வகைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

நன்னாரி வேர்
மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது.

கற்றாழை
கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மாசடைந்த காற்று
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், வீட்டில் பயன்படுத்தும் கொசுவர்த்தி மற்றும ஏர் ப்ரஸ்னர்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதில் இருந்து வரும் கெமிக்கல் கலந்த வாசனையை நுகர்வதால், அந்த கெமிக்கல் இரத்தத்தில் கலந்து, புற்றுநோய், சுவாசக்கோளாறு, ஹார்மோனில் சில தொந்தரவு போன்றவற்றை ஏற்படுத்திவிடும்.

க்ரீம்கள்
உடலுக்கு தடவும் பாடி க்ரீம்கள் அல்லது லோசன்கள் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஏனெனில் சில சமயங்களில் அந்த கெமிக்கல்கள் உடலில் ஊடுருவி, இரத்தத்தில் கலந்து, ஏதேனும் தொற்றுநோய்களை ஏற்படுத்தும். ஆகவே எப்போதும் கெமிக்கலால் ஆன பொருட்களை பயன்படுத்துவதை விட, கற்றாழை, மஞ்சள் போன்றவற்றை பயன்படுத்துவது நல்லது.



Click it and Unblock the Notifications











