For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொப்பை குறையணுமா? அப்ப தினமும் இந்த இடத்துல மசாஜ் செய்யுங்க...

அக்குபிரஷர் என்பது ஒரு பாரம்பரி சீன மருத்துவக் கோட்பாட்டின் படி, ஆற்றல் ஓட்டத்திற்கு உதவ உடலில் மசாஜ் செய்யும் ஒரு பழங்கால வடிவமாகும்.இந்த நடைமுறையானது கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானது.

|

அக்குபிரஷர் என்பது ஒரு பாரம்பரி சீன மருத்துவக் கோட்பாட்டின் படி, ஆற்றல் ஓட்டத்திற்கு உதவ உடலில் மசாஜ் செய்யும் ஒரு பழங்கால வடிவமாகும். உடலில் உள்ள சில மெரிடியன் புள்ளிகளை அழுத்துவதன் மூலம், உடலில் ஆற்றல் ஓட்டத்தை உருவாக்கி, மீண்டும் உடல் சிறப்பாக செயல்பட உதவும். இந்த நடைமுறையானது கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் பழமையானது. மேலும் பலரது அனுபவம் இந்த முறையானது சிறப்பான உடல் எடை இழப்புக்கு உதவக்கூடும் என்பதை நிரூபிக்கிறது.

13 Pressure Points to Boost Your Metabolism

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை, எடை இழப்பால் பாதிக்கப்படும் உறுப்புக்களுக்கு ஆற்றல் ஓட்டத்தை மீட்டெடுக்க உதவும் 13 அழுத்த புள்ளிகளை கொடுத்துள்ளது. இந்த இடங்களில் தினமும் மசாஜ் செய்து வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அக்குபிரஷர் செய்யும் போது பின்பற்ற வேண்டிய முக்கியமான விதி என்னவென்றால், அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும். மேலும் இந்த செயலை தொங்கும் முன், உடலில் ஆக்ஸிஜன் ஓட்டம் சீராக பாயும் வகையில் சில சுவாசப் பயிற்சிகளை செய்ய வேண்டும்.

MOST READ: வரவர உடலுறவில் நாட்டம் குறைகிறதா? அப்ப அதுக்கு இதுல ஒன்னு தான் காரணமா இருக்கணும்...

சரி வாருங்கள், இப்போது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும் அக்குபிரஷர் புள்ளிகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழுத்தும் தோள்பட்டையும் சந்திக்கும் பகுதி

கழுத்தும் தோள்பட்டையும் சந்திக்கும் பகுதி

இந்த புள்ளியானது உடலின் முதுகுப் பகுதியில் அமைந்துள்ளது. அதுவும் கழுத்தும் தோள்பட்டையும் சந்திக்கும் பகுதியானது, நேரடியாக முலைக்காம்புடன் பொருந்துகிறது. இந்த இடத்தில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுங்கள். பின் உடலின் எதிர்பக்கத்தில் மீண்டும் அழுத்தம் கொடுங்கள். இப்படி தினமும் செய்யுங்கள்.

மூக்கு

மூக்கு

கண்ணாடியைப் பார்த்து, இரண்டு கண்களுக்கும் இடையே உள்ள மூக்கு பால பகுதியைக் கண்டறியுங்கள். இந்த இடத்தில் கைவிரலால் கண்களில் இருந்து மூக்குப் பால பகுதியை நோக்கியவாறு அழுத்தம் கொடுங்கள்.

புருவங்களுக்கிடையே...

புருவங்களுக்கிடையே...

நம்மில் பெரும்பாலானோர் மிகவும் களைப்பாக இருக்கும் போது, கண்களுக்கு இடையே அழுத்தம் கொடுப்போம். ஆனால் இச்செயல் ஒரு அக்குபிரஷர் வேலையைச் செய்கிறது என்பதை நிரூபிக்கிறது. உங்கள் மூக்கு பாலத்திற்கு சற்று மேலே, அதாவது புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

மார்பெலும்பு

மார்பெலும்பு

மார்பக எலும்பில் அமைந்துள்ள உங்கள் செலியாக் பிளெக்ஸஸுக்கு மேலே உள்ள பகுதி, ஆற்றலை மீட்டெடுக்கவும், எடை குறைக்கவும் உதவும் மற்றொரு அக்குபிரஷர் புள்ளியாகும். படத்தில் காட்டப்பட்டவாறு இந்த இடத்தில் தினமும் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

காது

காது

படத்தில் காட்டப்பட்டவாறு காதை ஒட்டியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படி இவ்விடத்தில் தினமும் தவறாமல் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தை உடலில் காணலாம்.

அடிவயிறு

அடிவயிறு

அடிவயிற்று பகுதியில் உடலில் ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து, உடல் எடையை எளிதில் குறையச் செய்யும் பல அழுத்தப் புள்ளிகள் உள்ளன. ஆனால் அதில் அடிவயிற்றில் தொப்புளுக்கு ஒரு இன்ச் கீழே உள்ள இடத்தில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மார்பு பகுதிக்கு கீழே

மார்பு பகுதிக்கு கீழே

மார்பு பகுதிக்கு கீழே வயிற்றுப் பகுதியில் இரண்டு புள்ளிகள் உள்ளன. படத்தில் காட்டப்பட்ட இவ்விடத்தில் தினமும் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுங்கள். இதனால் எடையில் சில மாற்றங்களைக் காணலாம்.

முழங்கை

முழங்கை

முழங்கையின் உட்பகுதியில் ஒரு அக்குபிரஷர் புள்ளி உள்ளது. இந்த இடத்தில் ஒரு நிமிடம் தினமும் அழுத்தம் கொடுங்கள்.

முழங்கால்

முழங்கால்

அக்குபிரஷர் மசாஜ் செய்வதற்கான மற்றொரு சிறப்பான பகுதி தான் முழங்கால். படத்தில் காட்டப்பட்டவாறு, இந்த இடத்தில் தினமும் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுக்க நல்ல பலன் கிடைக்கும்.

கணுக்கால்

கணுக்கால்

கணுக்காலின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியில் அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. இவ்விடத்தில் தினமும் குறைந்தது 1 நிமிடம் அழுத்தம் கொடுத்து வந்தால், ஒட்டுமொத்த அக்குபிரஷர் வழக்கத்திற்கான சிறந்த முடிவைப் பெறுவீர்கள்.

மேல் உதடு

மேல் உதடு

படத்தில் காட்டப்பட்டவாறு, முகத்தில் உள்ள உதட்டின் மேல் பகுதியில் அக்குபிரஷர் அழுத்தம் கொடுங்கள். தினமும் இந்த இடத்தில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுத்து வர நல்ல பலன் கிடைக்கும்.

கை

கை

தலை, உடல் மற்றும் கால்களில் அக்குபிரஷர் மசாஜ் செய்த பின், கைகளுக்கு நகருங்கள். கையின் பெருவிரலுக்கும், ஆட்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஒரு நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

பாதம்

பாதம்

பாதங்கள் நடப்பதற்கு மட்டுமல்ல, உடலின் மெட்டபாலிசம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நோக்கி செயல்படுவதற்கும் தான். சிறந்த முடிவைப் பெறுவதற்கு படத்தில் காட்டப்பட்ட ஒவ்வொரு அக்குபிரஷர் புள்ளியையும் மசாஜ் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

13 Pressure Points to Boost Your Metabolism

Acupressure is an ancient form of massaging spots on your body to help with the flow of energy, according to a traditional Chinese medical theory. By pressing some of the energy meridian points on your body, you can make the flow of the energy even again and help your body work better. This practice is almost 2,000 years old, and the experience of many people proves it may help with weight loss as well.
Desktop Bottom Promotion