Latest Updates
-
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க
ஜெட் வேகத்தில் உடல் எடை குறையணுமா? அப்ப இதுல ஒரு வழியை தினமும் ஃபாலோ பண்ணுங்க...
Weight Loss Tips In Tamil: நீங்கள் உடல் எடையைக் குறைக்க ட்ரை பண்றீங்களா? எந்த ஒரு கடுமையான டயட்டையும் ஃபாலோ பண்ண பிடிக்கலையா? ஈஸியான வழியில் உடல் எடையைக் குறைக்கணுமா? ஆனால் இன்னும் அதுக்கான வழி கிடைக்கலையா? அப்ப இக்கட்டுரை உங்களுக்கானது தான்.
உடல் எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. அதிகரித்த உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் பொறுமையும், விடாமுயற்சியும் மிகவும் அவசியம். இவ்விரண்டும் ஒருவரிடம் இருந்தால், உடல் எடையை நிச்சயம் குறைத்துவிடலாம். தற்போது உடல் எடையைக் குறைக்க பல்வேறு டயட்டுகள் உள்ளன.

ஆனால் அந்த டயட்டுகளை பின்பற்றுவதை நிறுத்தினால், மீண்டும் உடல் எடை அதிகரித்துவிடும். மேலும் அனைவராலும் வாழ்நாள் முழுவதும் டயட்டுகளை பின்பற்ற முடியாது. அதுவே இயற்கை வழிகளைப் பின்பற்றினால், உடல் எடையில் நிரந்தர தீர்வைப் பெறலாம்.
மேலும் இயற்கை வழிகளை பின்பற்றும் போது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது உடல் எடையை ஜெட் வேகத்தில் குறைக்க உதவும் சில வழிகளைக் காண்போம்.
வழி #1
எலுமிச்சை நீர் உடல் எடையைக் குறைக்க உதவும் மிகவும் பிரபலமான பானமாகும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கக்கூடியது. மேலும் எலுமிச்சை நீரானது உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்கிறது. முக்கியமாக இந்த நீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, எடை இழப்பிற்கு உதவுகிறது.
இப்படிப்பட்ட எலுமிச்சை நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், செரிமானம் சிறப்பாக இருப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புக்களும் திறம்பட கரையும். இந்த நீரை தயாரிக்க, வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
வழி #2
தினசரி சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டை எடை இழப்பிற்கும் உதவிபுரிகிறது. அதுவும் பட்டையுடன், தேன் சேர்த்து கலந்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், ஆன்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை உடலினுள் மாயங்களைப் புரிகின்றன. குறிப்பாக தேனில் பட்டை தூளை சேர்த்து உட்கொள்வதோடு, உடற்பயிற்சியையும் செய்து வந்தால், உடல் சிக்கென்று இருக்கும்.
2012 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆய்வு ஒன்றில், தேன் கலநத பட்டை டீயில் உள்ள சின்னமல்டிஹைடு என்னும் கலவை உடலில் தெர்மோஜெனிசிஸை செயல்படத் தூண்டிவிட்டு, உடலில் வெப்பத்தை அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை எரித்து, எடையைக் குறைப்பது கண்டறியப்பட்டுள்ளன. எனவே எளிய வழியில் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், தேன் கலந்த பட்டை டீயை தயாரித்து குடியுங்கள்.
வழி #3
பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த ஒரு சமையலறை பொருள். இது பல்வேறு சமையலில் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, புரோட்டீன், மாங்கனீசு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை வளமான அளவில் உள்ளன. இவை அனைத்தும் உடலில் தேங்கியள்ள விடாப்பிடியான கொழுப்புக்களை கரைப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.
அதற்கு காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு, ஒரு டம்ளர் சுடுநீரைக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் உட்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.
வழி #4
தயிர் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் ஒரு உணவுப் பொருள் மட்டுமின்றி, உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புதமான உணவுப் பொருளும் கூட. பல்வேறு ஆய்வுகள் மற்றும் உடல்நல நிபுணர்களின் கூற்றுப்படி, தயிரை தினசரி உணவில் சேர்த்து வரும் போது, அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, தொப்பையைக் குறைக்க உதவுகிறது.
மேலும் தயிரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் புரோபயோடிக்குகள் போன்றவை வளமான அளவில் உள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியமான குடல் இயக்கத்தைப் பராமரிக்க உதவுகின்றன. ஒருவரது குடல் செயல்பாடு சிறப்பாக இருந்தால், உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
வழி #5
மிகச்சிறிய சியா விதைகளில் வைட்டமின்கள் கனிமச்சத்துக்கள், நார்ச்சத்துக்கள், பொட்டாசியம் மற்றும் பிற உடலின் சரியான செயல்பாட்டிற்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன.
சியா விதைகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமாக உள்ளன. இது வயிற்றில் உள்ள நீரை உறிஞ்சி, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். இதன் விளைவாக அதிகமாக உணவு உடகொள்வது தடுக்கப்படுவதோடு, கண்ட உணவுகளின் மீதான ஆர்வமும் குறையும்.
அதற்கு எடையை குறைக்க முயற்சிக்கும் போது, இந்த சியா விதைகளை நீரில் போட்டு 1/2 மணிநேரம் ஊற வைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து, சுவைக்கு தேனை சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் காலையில் குடித்து, உடற்பயிற்சியை செய்து வந்தால், எடையை விரைவில் குறைக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications