Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
குண்டா இருக்கீங்களா? வெயிட் ஏறிக்கிட்டே போகுதா? அப்ப இந்த 5 பானங்களை குடிங்க... சர்ருன்னு எடை குறைஞ்சிடுமாம்!
Weight loss Tips In Tamil: அனைவருக்கும் அதிக வளர்சிதை மாற்ற விகிதம் இருப்பதில்லை. சிலருக்கு மிக குறைவான வளர்சிதை மாற்றம் இருக்கலாம். உடல் எடையை குறைப்பது உங்கள் இலக்கு என்றால், உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டியது மிக அவசியம்.
உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதற்கும் உடல் எடையைக் குறைப்பதற்கும் உங்கள் அன்றாட பழக்கவழக்கங்களுடன் நிறைய விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். உங்கள் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதும் குறைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. உங்கள் வளர்சிதை மாற்றம் மெதுவாக இருந்தால், நீங்கள் இயற்கையாகவே எடையை குறைப்பது மிகவும் கடினம்.

சரியான உணவை உட்கொள்வது, பொருத்தமான பானங்களை உட்கொள்வது மற்றும் சிறந்த உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது ஆகியவை அதை சரிசெய்ய உதவும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான பானங்களைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
அதிக எடை அல்லது உடல்பருமன் பல்வேறு சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இனப்பெருக்க மற்றும் சுவாச செயல்பாடு முதல் நினைவகம் மற்றும் மனநிலை வரை ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களை பாதிக்கலாம்.
நிபுணர்களின் கூற்றுப்படி, உடல் பருமன் நீரிழிவு மற்றும் இதய நோய் உள்ளிட்ட நோய்கள் போன்ற சுகாதார நிலைமைகளின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. எனவே, வேகமாக எடை இழக்க மெதுவான வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேண்டியது முக்கியம். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் பானங்கள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மெதுவான வளர்சிதை மாற்றத்தை ஏன் கொண்டுள்ளனர்?
பல்வேறு முயற்சிகள் செய்தும், உங்களின் எடை குறையாமல் இருப்பது உங்களுக்கு வெறுப்பாக இருக்கலாம். இதற்கு மெதுவான வளர்சிதை மாற்றம் கூட ஓர் காரணமாக இருக்கலாம். இது மரபியல், வயது மற்றும் தசை நிறை உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்தது. சிலர் இயற்கையாகவே மெதுவான வளர்சிதை மாற்ற விகிதத்தைப் பெறுவதால், மரபியல் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சில மரபணுக்கள் கலோரி எரியும் திறன் அல்லது வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கும் தைராய்டு ஹார்மோன்களின் செயல்பாடு போன்ற காரணிகளைப் பாதிக்கலாம். வயதுக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் குறைவதால், கலோரிகள் எரியும் வேகம் குறைகிறது. குறைந்த தசை நிறை கொண்டவர்கள் ஓய்வு நேரத்தில் குறைவான கலோரிகளை எரிக்க நேரிடும்.
ஹைப்போ தைராய்டிசம் போன்ற ஹார்மோன் பிரச்சனைகளும் உங்கள் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்கலாம். உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் தீவிர கலோரி கட்டுப்பாடு போன்ற வாழ்க்கை முறை காரணிகள் வளர்சிதை மாற்ற விகிதத்தை மேலும் குறைக்க வாய்ப்புள்ளது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்த பானங்கள்
சிலருக்கு இயற்கையாகவே மெதுவான வளர்சிதை மாற்றம் இருக்கலாம் என்றாலும், உணவு, உடற்பயிற்சி மற்றும் தூக்கம் போன்ற ஒட்டுமொத்த வாழ்க்கை முறை காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை மேற்கொள்வது வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க அல்லது மேம்படுத்த உதவும்.
கிரீன் டீ
எடை குறைப்பு பானத்தில் மிகவும் பிரபலமாக அறியப்படும் ஓர் பானம் கிரீன் டீ. கிரீன் டீயும் எடைக் குறைப்பும் கைகோர்த்துச் செல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதில் கேடசின்கள் உள்ளன. அவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க அறியப்படும் ஆக்ஸிஜனேற்றிகள். ஒவ்வொரு நாளும் ஒரு கப் அல்லது இரண்டு கப் கிரீன் டீ குடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் கிரீன் டீயின் நன்மைகளை பெறலாம்.
ஆப்பிள் சாறு வினிகர்
ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து சாப்பிடுவதற்கு முன் குடிக்க வேண்டும். இதைச் செய்வது கொழுப்பை எரிப்பதை அதிகரிக்கவும் பசியைக் குறைக்கவும் உதவும். எனவே நீங்கள் ஆரோக்கியமற்ற தின்பண்டங்களை நோக்கி செல்ல மாட்டீர்கள்.
எலுமிச்சை தண்ணீர்
எலுமிச்சையில் நம் உடலுக்கு நன்மை செய்யும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. பல்வேறு ஊட்டச்சத்துகளுக்கு இடையில், வைட்டமின் சி சத்தை நீங்கள் பெறலாம். எனவே, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உடலில் உள்ள நச்சுத்தன்மை செயல்முறைகளை ஆதரிக்கவும் எலுமிச்சை பானத்தை நீங்கள் அருந்தலாம்.
இஞ்சி தேநீர்
இஞ்சி உங்கள் உணவுகளுக்கு சுவையை சேர்ப்பத்தோடு மட்டுமல்லாமல், உங்களுக்கு சளி பிடிக்கும் போது அதிசயங்களைச் செய்யும். இது தெர்மோஜெனிக் பண்புகளைக் கொண்டுள்ளது. அதாவது இது உடல் வெப்பநிலையை சற்று அதிகரிக்கும் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதன் பலன்களை அறுவடை செய்ய இஞ்சி தேநீரை தினமும் அருந்துங்கள்.
கொம்புச்சா பானம்
தேநீர், சர்க்கரை மற்றும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் ஆகியவற்றின் சிம்பியோடிக் கலாச்சாரத்தில் இருந்து தயாரிக்கப்படும் இந்த புளிக்கவைக்கப்பட்ட பானத்தில் புரோபயாடிக்குகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இது நச்சுத்தன்மைக்கு உதவுகிறது மற்றும் மேம்பட்ட செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது இறுதியில், அதிகரித்த வளர்சிதை மாற்றத்திற்கு பங்களித்து, உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க குறிப்புகள்
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க இந்த பானங்கள் தவிர, நீங்கள் கட்டுப்படுத்த அல்லது தவிர்க்க விரும்பும் சில உணவுகள் மற்றும் பானங்கள் உள்ளன. பொதுவாக சர்க்கரை பானங்கள் எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே அதற்கு பதிலாக தண்ணீர், சர்க்கரை இல்லாத தேநீர் அல்லது பிளாக் காபி சாப்பிடுங்கள்.
வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, பாஸ்தா மற்றும் பேஸ்ட்ரிகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்யலாம் மற்றும் எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற சிக்கல்களுக்கு பங்களிக்கலாம். அதேபோல வறுத்த உணவுகள் மற்றும் வேகவைத்த பொருட்கள் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகள் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
மிகவும் பதப்படுத்தப்பட்ட உணவுகளான சிப்ஸ், குக்கீஸ், ஃபாஸ்ட் ஃபுட் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட தின்பண்டங்கள் பொதுவாக அதிக கலோரிகள், ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சேர்க்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் சோடியம் ஆகியவற்றை கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் வளர்சிதை மாற்றத்தை எதிர்மறையாக பாதிக்கும்.
அதிகப்படியான மது அருந்துதல் சாதாரண வளர்சிதை மாற்ற செயல்முறைகளில் தலையிடலாம் மற்றும் எடை அதிகரிப்பிற்கு பங்களிக்கும். எனவே, ஒரு சீரான உணவு, முழு உணவுகள் மற்றும் போதுமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை நீங்கள் பராமரிக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
