Latest Updates
-
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும்
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Guava Benefits In Tamil: பழங்கள் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகின்றன. பல வகையான பழங்கள் நம்மைச் சுற்றியுள்ளன. அதில் நிறைய பேர் ஆப்பிளை பழங்களிலேயே மிகவும் ஆரோக்கியமானதாக நினைக்கிறார்கள்.
ஆனால் ஆப்பிளுக்கு இணையான சத்தை கொய்யாப்பழம் கொண்டுள்ளது. ஆப்பிளை விட கொய்யாப்பழம் விலைக் குறைவில் கிடைக்கக்கூடியது. எனவே உங்களால் ஆப்பிளை வாங்கி சாப்பிட முடியாவிட்டால் கொய்யாப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.

சொல்லப்போனால் ஆப்பிளுடன் ஒப்பிடுகையில் கொய்யாப்பழத்தில் புரோட்டீன்கள், நல்ல கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம். அதோடு வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் அதிகளவு கொய்யாப்பழத்தில் உள்ளன.
எனவே கொய்யாப்பழத்தை மார்கெட்டில் பார்த்தால் அதை தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள். அதுவும் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும் மற்றும் பல நோய்களின் அபாயங்களில் இருந்தும் விடுபடலாம். இப்போது கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
1. இதய ஆரோக்கியம்
கொய்யாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். இவை பல்வேறு இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. கூடுதலாக, இது உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தை சமநிலையில் பராமரிக்க உதவி புரிந்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
ஆய்வுகளின் படி, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், அது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய வழிவகை செய்யும். எனவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.
2. ஆரோக்கியமான செரிமான மண்டலம்
கொய்யாப்பழத்தில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளதால், அது வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிககல் போன்றவற்றை சரிசெய்கிறது. கொய்யாப்பழத்தை மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள விதைகள் மலமிளக்கியாக செயல்பட்டு, குடலியக்கத்தை ஒழுங்காக நடைபெறச் செய்கிறது. எனவே செரிமானம் சீராக நடைபெற மற்றும் மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க, தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.
3. கண் பார்வை மேம்படும்
கொய்யாப்பழம் கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இப்பழத்தில் வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளன. உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால் தான், அது கண்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடாதெனில், தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.
4. ஆரோக்கியமான சருமம்
கொய்யாப்பழத்தில் கரோட்டின், லைகோபைன் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகமாக உள்ளன. இச்சத்துக்கள் அனைத்துமே சருமத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவைகளாகும். உங்களுக்கு முகப்பரு அதிகமாக வருமானால், கொய்யாப்பழத்தை உட்கொண்டு வாருங்கள். இதனால் முகப்பரு வருவது குறைவதோடு, சருமத்தின் அழகும், ஆரோக்கியமும் மேம்படும்.
5. மன அழுத்தம் குறையும்
நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா? அப்படியானால் கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நரம்புகள் மற்றும் தசைகளை ரிலாக்ஸ் அடைய உதவி புரிந்து, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.
6. சர்க்கரை நோய்க்கு நல்லது
உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளதா? அப்படியானால் தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனெனில் கொய்யாப்பழம் இரத்த சர்க்கரை அளவைக் சீராக்குவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் இருப்பதால், சர்க்கரை நோய் வரும் அபாயத்தைத் தடுக்கும். அதிலும் கொய்யாப்பழத்தின் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்நீரைக் குடித்து வந்தால், இரத்த சர்க்கரை அளவு குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இருப்பினும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கொய்யாப்பழம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. இதற்கு காரணம் கொய்யாப்பழத்தின் தோலில் உள்ள அதிகப்படியான ஃபுருக்டோஸ் தான் என அந்த ஆய்வின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழத்தை சாப்பிடுவதாக இருந்தால், அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது.
7. நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலுபெறும். ஏனெனில் கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. வைட்டமின் சி நேயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான சத்தாகும். எனவே பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும்.
8. மூளைக்கு நல்லது
கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி3 போன்றவை அதிகம் உள்ளன. இந்த இரண்டு வைட்டமின்களும், மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்திற்கு உதவுவிதோடு, நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்து, நினைவாற்றலை மேம்படுத்துகின்றன. எனவே மூளை சிறப்பாகவும், ஆரோக்கியமாகவும் செயல்பட வேண்டுமானால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications