For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்காலத்தில் பெண்களின் அந்தரங்க பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்!

மழைக்காலங்களில் பெண்களுக்கு சிறுநீர் பாதைகளில் நிறைய தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த மாதிரி பருவ நிலைகளில், அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக சுகாதாரமாக வைத்து கொள்வது மிக அவசியம்.

|

கோடை காலம் முடிந்து தற்பொழுது மழைக்காலம் தொடங்க இருக்கிறது. மழைக்காலத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகம் காணப்படும் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இதனால் நம் உடல் சுகாதாரத்தை பேணிக் காக்க நாம் சற்று மெனக்கெட வேண்டியது இருக்கும். அதுவும் இப்பொழுது கொரோனா வைரஸ் வேறு தாண்டவமாடுவதால், நம் உடலை சுத்தமாக வைத்து கொள்வதும், அவ்வப்பொழுது கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தி கொள்வதும் மிக முக்கியமான ஒன்றாகும்.

Tips To Keep Humidity Check On Womens Intimate Hygiene During Monsoon

இந்த மாதிரியான மழைக்காலங்களில் பெண்களுக்கு சிறுநீர் பாதைகளில் நிறைய தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய நுண்ணுயிரிகளான பூஞ்சை, ஆல்கா மற்றும் ஈஸ்ட் போன்றவை ஈரப்பதமான இடங்களில் நன்கு செழித்து வளர்ந்து பெருக கூடியவை. இந்த நுண்ணுயிரிகள் பெண்களின் சிறுநீர் பாதையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த மாதிரி பருவ நிலைகளில், அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக சுகாதாரமாக வைத்து கொள்வது மிக அவசியம். வெப்பத்தை அதிகரிக்க கூடிய அல்லது வியர்வையை ஏற்படுத்தக்கூடிய செயல்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இதனால் நிறைய பாக்டீரியங்கள் வாழ ஏற்ற சூழ்நிலை உண்டாவதால், பெண்களின் பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுகிறது.

MOST READ: இதெல்லாம் உங்க நாக்கு உங்களிடம் சொல்ல முயற்சிக்கும் சில எச்சரிக்கை அறிகுறிகள் என்பது தெரியுமா?

பெண்கள் இந்த நேரத்தில் அதிக எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் நல்ல சுகாதார பழக்கவழக்கங்களை கையாள வேண்டும். இதன் மூலம் உங்கள் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்பு, ஒவ்வாமை மற்றும் ஏனைய நோய் கிருமி தொற்றுகள் ஏற்படாமல், உங்கள் தினசரி வேலைகளை எந்தவித அசௌகரியங்களும் இன்றி எளிதாக செய்ய முடியும்.

MOST READ: கொரோனாவை அடுத்து சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு புதிய வைரஸ்!

அதிகப்படியான வெப்பத்தால், பிறப்புறுப்பில் உள்ள ஈஸ்ட்டின் அளவு சாதாரணமாக இருப்பதை விட அதிகரித்து விடும். இதன் மூலமாக பிறப்புறுப்பு பூஞ்சை நோய் ஏற்படுகிறது. இந்த பூஞ்சை தொற்றால், அரிப்பு மற்றும் எரியும் உணர்வு அதிகரித்து, பிறப்புறுப்பு பகுதிகளில் ஒருவித துர்நாற்றமும் வீச ஆரம்பித்துவிடும். பின்வரும் முக்கியமான ஐந்து வழி முறைகளை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மழையில் நனைந்து விட்டால் என்ன செய்வது?

மழையில் நனைந்து விட்டால் என்ன செய்வது?

சில சமயங்களில் நீங்கள் மழையில் முழுவதும் நனைந்து போகும் சூழ்நிலை ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால், வீட்டிற்கு வந்ததும் முதல் வேலை, உங்கள் துணிகளை மாற்றிவிட்டு உலர்ந்த வேறு ஆடைகளை அணிந்து கொள்வது. மேலாடை மட்டுமில்லாமல், உள்ளாடைகளையும் மிக முக்கியமாக மாற்றி கொள்ள வேண்டும். ஏனென்றால் இந்த ஈரப்பதமான பருவ நிலையில் அதிகம் வியர்த்து இருக்கும், அதனுடன் மழையின் ஈரமும் சேரும் பொழுது பூஞ்சைகளுக்கு கொண்டாட்டமாய் போய் விடுகிறது. இப்பொழுதெல்லாம் பெரும்பாலான பெண்கள் சிந்தெடிக் ஆடைகளை உடுத்த விரும்புகின்றனர். ஆனால் இந்த வகை ஆடைகளால், நிறைய பிரச்சினைகள் ஏற்படும். அதாவது, இந்த ஆடைகள் ஈரப்பதத்தை வெளியேற்றாமல் உடலிலேயே தக்க வைத்து விடுவதால், பூஞ்சை தொற்றால் அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எப்பொழுதும், முடிந்த வரை காற்றுப்புக கூடிய, இயற்கையான பருத்தியினால் நெய்யப்பட்ட ஆடைகளை அணியுங்கள். இதன் மூலம் உங்கள் உடல் ஈரம் உடனடியாக வெளியேற்றப்படுகிறது. அதே போல், நீங்கள் மழையில் நனைத்து விட்டு வீடு திரும்பும் பொழுது, ஒரு தடவை நன்றாக குளித்து விடுங்கள். குளித்ததும் நல்ல உலர்ந்த ஆடைகளை அணிந்து கொள்ளுங்கள்.

இறுக்கலான ஆடைகளை தவிர்க்கலாமே

இறுக்கலான ஆடைகளை தவிர்க்கலாமே

இப்பொழுதெல்லாம் இறுக்கலான ஜீன்ஸ் ஆடைகளும், குட்டை பாவாடைகள் அணிவதும் சாதாரணமாகிவிட்டது. அனால், இவ்வாறு ஆடைகளை அணிவதால் நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இறுக்கலான ஆடைகளால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது, அதுமட்டுமில்லாமல், தசை நகர்வும் கட்டுப்படுத்தப்பட்டு இறுக்கமாக ஒரே இடத்தில வைக்கப்படுகிறது. இவ்வாறு காற்றோட்டத்தை குறைப்பதால், தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியங்கள் வளர ஏற்ற சூழ்நிலை உருவாகிறது. எனவே காற்றோட்டமான, சௌகரியமான ஆடைகளையே எப்பொழுதும் உடுத்த வேண்டும். அதே போல், தூங்கும் பொழுது சிறிய டவுசர்களை அணிந்து கொள்ளலாம். இதன் மூலம் காற்றோட்டம் அதிகரிப்பதால், பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது.

சுத்தம் சுகம் தரும்

சுத்தம் சுகம் தரும்

அவ்வப்பொழுது உங்களது அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் பாக்டீரியா தொற்றை வெகுவாக குறைத்து துர்நாற்றத்தை தவிர்க்கலாம். காலை எழுந்த பின்பும், இரவு தூங்குவதற்கு முன்பும், பெண்கள் தங்கள் அந்தரங்க உறுப்புகளை கழுவி சுத்தம் செய்து கொள்வது மிக முக்கியம். ஒரு வேளை, உங்களுக்கு அவ்வப்பொழுது வியர்த்தால், நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், அடிக்கடி சுத்தப்படுத்தி கொள்ளுங்கள். அதே போல், அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு, நீங்களாக ஏதேனும் ஒரு பொருளை உபயோகிக்காதீர்கள். அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பிரத்யேகமான பொருட்களை உபயோகிங்கள். அதே போல், அந்த பொருட்களில் சோடியம் லாரில் சல்பேட் போன்று தீங்கு தர கூடிய வேதி பொருட்கள் இல்லாமல் இருப்பதையும், இயற்கை பொருட்கள் மட்டுமே உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்

நிறைய தண்ணீர் குடியுங்கள்

மழைக்காலம் தானே என்று தண்ணீர் குடிக்காமல் இருந்துவிடாதீர்கள். எப்பொழுதும் நிறைய தண்ணீர் மற்றும் நீர்சத்து மிகுந்த பொருட்களை உட்கொள்ளுங்கள். இதன் மூலம் சிறுநீர் குழாய் சுத்தம் செய்ப்பட்டு நோய் கிருமிகள் அகற்றப்படுகின்றன. நம் உடலின் pH அளவை பராமரிப்பதிலும், உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், தண்ணீர் மிக முக்கிய பங்காற்றுகிறது. வரும் காலத்தில் ஏற்படப்போகும் அதிகப்படியான வியர்வையினால், உடலின் நீர்ச்சத்து வெளியேறிவிடும். எனவே சரியான அளவில் இழந்த நீரை பருக்காவிட்டால், உடலின் உப்பின் சமனிலை பாதிக்கப்படும். இதனால், நீங்கள் சிறுநீர் கழிக்கும் பொழுது உங்களுக்கு எரிச்சலோ அல்லது சிறிய அளவில் வலியோ ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சரியாய் கவனிக்காவிட்டால், நாளடைவில் இது சிறுநீர் குழாயில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்

நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்

இப்பொழுதெல்லாம் நாம் ஃபாஸ்ட் புட் உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிட ஆரம்பித்து விட்டோம். இவ்வாறு காரம் அதிகமான உணவுகளை உட்கொள்வதால், உடலின் அமிலத்தன்மை அதிகரித்து உடல் pH சமநிலை பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் அந்தரங்க உறுப்புகளில் பிரச்சினை ஏற்பட்டு, துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்து விடுகிறது. நல்ல சத்தான நன்மை தரக்கூடிய நுண்ணுயிர் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது சுத்தமான தயிர், வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை காய்கறிகள், கீரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம், உங்கள் உள்ளுறுப்புகளில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் செழித்து வளர்கின்றன. இதனால், உங்கள் அந்தரங்க உறுப்புகளில் உள்ள தீமை பயக்கும் பாக்டீரியங்கள் அழிக்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Keep Humidity Check On Women's Intimate Hygiene During Monsoon

Here are some tips to keep humidity check on women's intimate hygiene during monsoon. Read on...
Desktop Bottom Promotion