நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வேணுமா? அப்ப இந்த பொருளை நெத்தில தேய்ங்க போதும்...

பொதுவான அன்றாட பிரச்சனைகளில் ஒன்று தான் தூக்கமின்மை. ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் தூக்க தைலம் தூக்கமின்மைக்கு ஒரு வழக்கத்திற்கு மாறான தீர்வாகும்.

பொதுவான அன்றாட பிரச்சனைகளில் ஒன்று தான் தூக்கமின்மை. நாள் முழுவதும் கடினமாக உழைத்த போதிலும், இரவு நேரத்தில் நிம்மதியாக தூங்க முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர். இப்படி ஒருவர் இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற முடியாமல் இருந்தால், அத்தகைய தூக்கமின்மையை உடனே கவனித்து தீர்வு காண வேண்டியது அவசியம். ஏனெனில் மோசமான தூக்கமானது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை உண்டாக்கும். இளம் வயதினருக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 6-8 மணிநேர தூக்கம் அவசியம். இதனால் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.

Sleep Balm For Sleeplessness And Insomia

சொல்லப்போனால், எப்படி மொபைலை இயக்குவதற்கு சார்ஜ் மிகவும் அவசியமோ, அதேப் போல் உடல் நன்றாக செயல்படுவதற்கு தூக்கம் அவசியம். நல்ல ஆழ்ந்த மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதற்கு ஏராளமான குறிப்புகள் மற்றும் தந்திரங்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். ஆனால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற தைலம் ஒன்றும் உதவி புரியும் என்பது தெரியுமா? கீழே அதுக்குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல தூக்கத்திற்கான தைலம்

நல்ல தூக்கத்திற்கான தைலம்

ஆழ்ந்த தூக்கத்தைப் பெறுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால் தூக்க தைலம் தூக்கமின்மைக்கு ஒரு வழக்கத்திற்கு மாறான தீர்வாகும். தூக்கத்தை வரவழைக்கும் தைலங்களைத் தயாரிக்க பல பிராண்டுகள் தொடங்கியுள்ளன. ஆனால் அப்படி கடைகளில் விற்கப்படும் தூக்க தைலங்கள் நிச்சயம் விலை உயர்ந்தவையாகவே இருக்கும். உங்களுக்கு பணம் அதிகம் செலவழிக்காமல் இயற்கை முறையில் வீட்டிலேயே எளிமையாக ஒரு தூக்க தைலம் தயாரிக்க வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

தூக்க தைலம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

தூக்க தைலம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

* தேங்காய் எண்ணெய் - 1/2 கப்

* தேன் மெழுகு - 1 டேபிள் பூன்

* வைட்டமின் ஈ எண்ணெய் - 1 டீபூன்

* ஆரஞ்சு அத்தியாவசிய நறுமண எண்ணெய் - 8 துளிகள்

* லாவெண்டர் அத்தியாவசிய நறுமண எண்ணெய் - 8 துளிகள்

* சீமைச்சாமந்தி எண்ணெய் அல்லது 1 சீமைச்சாமந்தி தேநீர் பை

* சிறிய கண்ணாடி ஜார்

செய்முறை:

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சூடேற்றி இறக்கவும்.

* பின் அந்த எண்ணெயை ஒரு பௌலில் ஊற்றி, அதில் சீமைச்சாமந்தி தேநீர் பையை போட்டு ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.

* பின்பு அந்த பையை பிழிந்து எடுத்துவிட வேண்டும்.

* ஒரு பௌலில் தேன் மெழுகை உருக்கி எடுத்து, அதை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் அத்தியாவசிய நறுமண எண்ணெய்கள் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை ஒரு காற்றுப்புகாத கண்ணாடி ஜாரில் ஊற்றி, செட் ஆகும் வரை ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால், தைலம் தயார்.

தூக்க தைலத்தை பயன்படுத்தும் முறை:

தூக்க தைலத்தை பயன்படுத்தும் முறை:

* இரவு தூங்குவதற்கு படுக்கைக்கு வந்த பின், தயாரித்து வைத்துள்ள தூக்க தைலத்தை நெற்றி மற்றும் உள்ளங்காலில் தடவ வேண்டும்.

* அப்படி தடவும் போது சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.

* பின் மொபைல், லேப் டாப் மற்றும் பிற எலக்ட்ரானிக் பொருட்களை அணைத்து விட்டு, கண்களை மூடினால், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.

குறிப்பு:

குறிப்பு:

ஒருவேளை நீங்கள் தயாரித்த தூக்க தைலம் எதிர்பார்த்த பலனைத் தராவிட்டால், கவலைப்படாதீர்கள். ஒருசிலருக்கு இந்த தைலம் வேலை செய்ய ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம். ஆனால் நிச்சயம் இந்த தைலம் ஒரு நல்ல பலனைத் தரக்கூடியது.

ஏன் இந்த தூக்க தைலம் நிச்சயம் வேலை செய்யும்?

ஏன் இந்த தூக்க தைலம் நிச்சயம் வேலை செய்யும்?

இந்த தூக்க தைலத்தில் சக்தி வாய்ந்த மூலப்பொருளான சீமைச்சாமந்தி உள்ளது. இது ஒரு சிறப்பான மன அழுத்த நிவாரணியாகும். இது தசைகளை தளர்த்தி, மனதை அமைதிப்படுத்தும். மேலும் இதில் உள்ள லாவெண்டர் அத்தியாவசிய நறுமண எண்ணெய் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும். இவையெல்லாம் சேர்ந்து படுக்கையில் படுத்ததும் விரைவான மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறத் தூண்டும்.

இன்னும் சிறப்பான பலன் கிடைக்க என்ன செய்யலாம்?

இன்னும் சிறப்பான பலன் கிடைக்க என்ன செய்யலாம்?

நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையைக் கொள்பவராயின், தூக்க தைலத்தை தடவுவதுடன், இரவு தூங்குவதற்கு முன் ஒரு கப் சீமைச்சாமந்தி டீ குடியுங்கள். இது நூறு சதவீதம் இயற்கையானது, பாதுகாப்பானது மற்றும் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாதது. இருப்பினும், அத்தியாவசிய நறுமண எண்ணெய்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். ஏனெனில் சில எண்ணெய்கள் சிலருக்கு சரும அழற்சியை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion