Just In
- 16 min ago
கோதுமை ரவை பாயாசம்
- 48 min ago
இந்த ஆரோக்கியமான பழக்கங்கள் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தும் தெரியுமா?
- 1 hr ago
இந்த மாதிரியான ரேகை கையில் இருப்பவர்கள் பிறக்கும்போதே அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் தெரியுமா?
- 2 hrs ago
2021 கிங் பிஷ்ஷர் காலெண்டருக்கு சூட்டைக் கிளப்பும் போஸ்களைக் கொடுத்த மாடல்கள்!
Don't Miss
- News
அட நீங்களே பாருங்களேன்...கைதேர்ந்த குதிரை வண்டிக்காரர்போல்...குதிரை வண்டி ஒட்டி அசத்திய அமைச்சர்!
- Sports
இதுக்கு முடிவே இல்லையா? அவசரமாக உள்ளே வந்த கார்.. பாதியில் வெளியேறிய சைனி.. இந்திய அணி ஷாக்!
- Movies
வேட்டி சட்டையில்.. கையில் கரும்புடன் சிவகார்த்திகேயன் கொண்டாடிய சூப்பர் பொங்கல்!
- Finance
சியோமி மீது தடை.. டிரம்ப் அரசின் திடீர் உத்தரவால் அதிர்ச்சி..!
- Automobiles
ஐதராபாத் நபர் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை இதுதான்... எவ்வளவுனு கேட்டதும் தூக்கி வாரி போட்றுச்சு...
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா? அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...
இன்று உடல் எடையால் அவஸ்தைப்படுவோர் ஏராளம். ஒருவரது உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்ள வேண்டியது அவசியம். உடல் எடையை வேகமாக குறைக்க தேன் பெரிதும் உதவி புரியும். உடல் பருமனால் பானை போன்று வீங்கியுள்ள தொப்பையைக் குறைக்க நினைத்தால், தேனை பயன்படுத்துங்கள்.
அடிவயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க அடிவயிற்றிற்கான உடற்பயிற்சிகள் உதவி புரிந்தாலும், வெறும் உடற்பயிற்சியால் மட்டுமே தொப்பையைக் குறைக்க முடியாது. மேலும் தற்போது பலர் தங்களின் உடல் எடையைக் குறைக்க இயற்கை வழிகள், எடை குறைக்கும் உணவுகள், எடை குறைப்பு மருந்துகள் போன்றவற்றை தேடுகின்றனர்.
MOST READ: 12 வாரம் நைட் தூங்கும் முன் இத 1 டேபிள் ஸ்பூன் குடிச்சா.. தொப்பை காணாம போகும் தெரியுமா?
இயற்கை வழியில் தொப்பையைக் குறைக்க நினைத்தால், அதற்கு தேனைத் தேர்ந்தெடுக்கலாம். தேனை ஒருவர் ஒருசில வழிகளில் பயன்படுத்துவதன் மூலம், உடல் எடையை இயற்கையாக குறைக்க முடியும். இங்கு தேனை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் உடல் எடையைக் குறைக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேன் மற்றும் பால்
உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்கும் போது உடல் எடையைக் குறைக்க நினைத்தால், பாலுடன் தேனைப் பயன்படுத்துவது சிறந்த வழியாகும். அதற்கு தினமும் இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டீஸ்பூன் தேனை கலந்து குடிக்க வேண்டும். இதனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு, உடலின் மெட்டபாலிச அளவு அதிகமாகி, அதிகப்படியான கொழுப்புக்களும் கரையும்.

பூண்டு மற்றும் தேன்
பூண்டு உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், 2-3 பற்கள் பூண்டை நன்கு மென்மையாக நசுக்கி, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இப்படி சில வாரங்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

புதினா மற்றும் தேன்
உடல் எடையைக் குறைக்க தேன் மற்றும் புதினா கலவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். புதினாவை உட்கொள்வதால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு மேம்படும் மற்றும் உடலின் மெட்டபாலிச அளவும் அதிகரிக்கும். அத்தகைய புதினாவை சாறு எடுத்து, ஒரு டீஸ்பூன் புதினா சாற்றுடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், உடல் எடை வேகமாக குறையும்.

துளசி மற்றும் தேன்
புனிதமான செடியாக கருதப்படும் துளசி, பல்வேறு நோய்களை எதிர்த்துப் போராடக்கூடிய மருத்துவ பண்புகளைக் கொண்டதாகவும் கருதப்படுகிறது. துளசியை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அது செரிமான மண்டலத்திற்கு நல்லது. துளசி ஜூஸ் உடன் தேனைக் கலந்து குடித்தால், தொப்பை மாயமாய் மறையும். 2 டீஸ்பூன் துளசி சாறுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து உட்கொள்ள வேண்டும். இந்த இயற்கை வழியால் தொப்பை குறைவதுடன், நோய்களை எதிர்த்துப் போராடும் அளவில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலுமிச்சை மற்றும் தேன்
எலுமிச்சை உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. நீங்கள் உடல் தொப்பை வேகமாக குறைக்க விரும்பினால், ஒரு எலுமிச்சையை சாறு எடுத்து, ஒரு டம்ளர் நீரில் அதை சேர்த்து, 2 டீஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இந்த பானம் நிச்சயம் வேகமாக உங்கள் தொப்பையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

சீரகம் மற்றும் தேன்
ஒரு டம்ளர் நீரில் 1 டீஸ்பூன் சீரகத்தைப் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி சில வாரங்கள் தொடர்ந்து பின்பற்றினால், உடல் எடை மற்றும் தொப்பை கணிசமாக குறைவதை நன்கு காணலாம்.

குறிப்பு
என்ன தான் உடல் எடையைக் குறைக்கும் பானங்களைப் பருகினாலும், உடற்பயிற்சியும் அவசியம் என்பதை மறவாதீர்கள். அதோடு ஜங்க் உணவுகளுக்கு குட்-பை சொல்லிவிட்டு, ஆரோக்கியமான உணவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். மேலும் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் நீங்கள் இறங்கினால், முதலில் நம்பிக்கையை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். முக்கியமாக குறுகிய காலத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில் எளிதில் கிடைக்கும் எதுவும் நிரந்தரமாக நிலைத்திருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.