இதை எல்லாம் உடலுக்கு கேடுனு சொல்லறாங்களா? இது எல்லாம் வேறும் கட்டுக்கதை!

Written By:
Subscribe to Boldsky
உடலுக்கு நல்லது என்று நினைக்கும் சிலவை கெட்டவையே- வீடியோ

ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று நாம் படாதபாடு பட்டு இதை அதை வாங்கி சாப்பிடுகிறோம்.. நமக்கு பிடித்தமான உணவுகளையும் விட்டு விடுகிறோம்.. இவ்வாறு செய்வது எல்லாம் நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தானே..?

ஆனால் நாம் ஆரோக்கியம் என்று நினைத்து சாப்பிடும் ஒரு சில பொருட்கள் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தால்? நீங்கள் சில பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவீர்கள்.. இது எல்லாம் எதற்காக? உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று தானே? ஆனால் இவை உங்களது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைக்கும் என்று தெரிந்தால் பயன்படுத்துவீர்களா?

மேலும் நீங்கள் ஆரோக்கியம் இல்லை என்று நினைத்து கைவிட்டு விடும் சில பொருட்களும் கூட ஆரோக்கியமானவை தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டியது என்பது அவசியமாகும்.. இந்த பகுதியில் ஆரோக்கியத்திற்கு உதவும் பொருட்கள் என்னென்ன என்பதை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாப்பிடும் விதம்

சாப்பிடும் விதம்

மனித உடலை பொருத்த வகையில் ஒவ்வொருவருடைய உடலும் ஒவ்வொரு மாதிரி.. ஒரு சிலருக்கு ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும் கூட அது உடலுக்கு ஒத்துப்போகாது... அதே போல் தான், ஒவ்வொருவரும் அவரவர் உடலுக்கு தகுந்தது போல் உணவின் அளவை நிர்ணயித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்..

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.. உங்களது உணவு முறையானது உங்களது ஆரோக்கியம் சார்ந்த ஒன்றாக இருப்பது நல்லது. உங்களது உடலுக்கு ஒவ்வாமையை உண்டாக்கும் உணவுகளை சாப்பிடுவதை தடுப்பது என்பது நல்லதாகும்.

குளிரூட்டப்பட்ட காய்கறிகள்

குளிரூட்டப்பட்ட காய்கறிகள்

பதப்படுத்தப்பட்ட காய்கறிகளை சாப்பிடுவது ஆபத்தானது என்று கூறுகின்றனர்.. ஆனால் பிரஷ் ஆன ஒரு காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகபட்சமாக மூன்று நாட்கள் பிரிட்ஜில் வைப்பது என்பது அந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்காது. எனவே பிரஷ் ஆன காய்கறிகள் மற்றும் பழங்களை மூன்று நாளைக்கு மேல் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

சைவத்திற்கு மாறுதல்

சைவத்திற்கு மாறுதல்

அசைவத்திலிருந்து சைவத்திற்கு மாறுவது என்பது மிக நல்ல முடிவு தான்.. ஆனால் இதனை மிக சரியான முறையான முறையில் செய்தால் தான் ஆரோக்கியம் கிடைக்கும். அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறுபவர்கள் கண்டிப்பாக அசைவத்திற்கு நிகரான சத்துள்ள சைவ உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியமாகும். பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் பிற ஊட்டச்சத்து உணவுகள், கீரை வகைகள், தானியங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது என்பது சிறந்ததாகும்.

கார்போஹைட்ரைடுகள்

கார்போஹைட்ரைடுகள்

கார்போஹைட்ரைடுகள் உங்களது உணவு பட்டியலில் கண்டிப்பாக இருக்க வேண்டியது அவசியம். இன்று பலர் கார்போஹைட்ரைடுகள் என்றாலே வெறுத்து ஒதுக்குகிறார்கள்.. வெள்ளை பிரட், பிஸ்கட்டுகள் போன்றவற்றில் இருக்கும் கார்போஹைட்ரைடுகளை காட்டிலும், கோதுமை பிரட், காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் இருக்கும் கார்போஹைட்ரைடுகள் மிகச்சிறந்த உணவுகளாக இருக்கும்.

வெண்ணெய்

வெண்ணெய்

வெண்ணெய் உடலுக்கு தீங்கு விளைக்க கூடியது என்பது பலரது கருத்தாகும். ஆனால் மார்கரைன் (Margarine) என்று அழைக்கப்படும் இந்த தாவர வெண்ணெய் ஆனது வெண்ணெய் சாப்பிட முடியாதவர்கள் சாப்பிடலாம் எனப்படுகிறது.. அதாவது இது வெண்ணெய்க்கு மாற்று உணவாக உள்ளது..

வெண்ணெய் மற்றும் செயற்கை வெண்ணெய் இவற்றில் எது சிறந்தது என்று பார்த்தால், செயற்கை வெண்ணெய்யில் டிரான்ஸ் கொழுப்புகள் உள்ளன. எனவே இதனை சிலர் எடுத்துக் கொள்வது கூடாது. எனவே அதில் என்னென்ன உள்ளது, அது உங்களது உடலுக்கு தகுந்ததா என்பதை கண்டறிய வேண்டியது அவசியமாகும்.

சுவையூட்டிகள்

சுவையூட்டிகள்

வெள்ளை சர்க்கரை தான் ஆரோக்கியமற்றது என்று தான் பலர் சுவையூட்டிகளுக்கு மாறுகின்றனர்.. ஆனால் அந்த சுவையூட்டிகள் கூட ஆரோக்கியமற்ற உணவு தான்.. இதில் ஆபத்தை விளைவிக்கும் நச்சுக்கள் அடங்கியுள்ளது. எனவே நீங்கள் வெளியில் காபி, டீ சாப்பிடுவது என்றாலும் கூட அங்கு எந்த வகை சுவையூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை கேட்டறிவது நல்லது. ஏனெனில் நீங்கள் என்ன தான் ஆரோக்கியம் தரும் டீயை குடித்தாலும் கூட அதில் சேர்க்கப்பட்டுள்ள சுவையூட்டிகள் எத்தகையது என்பதை அறிய வேண்டியது அவசியமாகும்.

உடலை சுத்தம் செய்ய வேண்டும்!

உடலை சுத்தம் செய்ய வேண்டும்!

உங்களுக்கு ஒன்றை சுத்தம் செய்ய மிகவும் பிடிக்கும் என்றால் அதில் எந்த தவறும் இல்லை.. நல்ல விஷயம் தான்.. ஆனால் நீங்கள் அடிக்கடி குடலை சுத்தம் செய்வது, வயிற்றை சுத்தம் செய்வது என்பது போன்ற வார்த்தைகளில் மயங்கி அதற்கான தனி கவனம் எடுக்க வேண்டியது இல்லை.. ஏனென்றால் உங்களது சொந்த செரிமான அமைப்பே தன்னை சுத்தம் செய்து கொள்ளும் பணியையும் கவனித்துக் கொள்கிறது.

உங்களது கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் தினமும் உங்களது உடலை சுத்தம் செய்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே நீங்கள் உடலை சுத்தம் செய்ய போகிறேன் என்று தனியாக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை..

கொழுப்பு உணவு ஆகாது!

கொழுப்பு உணவு ஆகாது!

கொழுப்பு உணவுகளை சாப்பிடவே மாட்டேன் என்று சிலர் இருப்பார்கள். ஆனால் நமது உடலுக்கு ஓரளவுக்காவது கொழுப்பு சத்து தேவைப்படுகிறது. இந்த கொழுப்பானது நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஊறிஞ்ச தேவைப்படுகிறது. அவோகேடா, நட்ஸ், விதைகள், ஆலிவ் ஆயில்கள் போன்றவை ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளாகும்.

சாலட்டுகள்

சாலட்டுகள்

சாலட்டுகள் சாப்பிடுவது என்பது மிகவும் ஆரோக்கியமான ஒன்று நினைத்து, ஹோட்டல்களில் ஆரோக்கியமான உணவு சாப்பிடலாம் என்று சாலட்டுகளை ஆடர் செய்வீர்கள்.. ஆனால் இந்த சாலட்டுகள் என்பது பிரஷ் ஆனதாக இருக்க வேண்டியது அவசியமாகும். தயார் செய்யப்பட்டு மிக நீண்ட நேரமான சாலாட்டுகளை சாப்பிட வேண்டாம்..

சாக்லேட் சாப்பிட கூடாதா?

சாக்லேட் சாப்பிட கூடாதா?

சாக்லேட் சாப்பிட கூடாது என்று நாம் பிள்ளைகளை கண்டிக்கிறோம். ஆனால் நீங்கள் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி சாக்லேட்டில் எத்தனை நன்மைகள் இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த சாக்லேட்டுகள் உங்களது உடலில் உள்ள மன அழுத்தத்தை தரக் கூடிய ஹார்மோன்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Myths About Healthy Eating

Myths About Healthy Eating
Story first published: Tuesday, January 23, 2018, 15:35 [IST]
Subscribe Newsletter