வால்நட்ஸ் எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள்!

By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

வால்நட்ஸ் ஆயில் வால்நட்டிலிருந்து பெறப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ஜக்லன்ஸ் ரெஜியா. இந்த வால்நட் பார்ப்பதற்கு மூளையின் வெளிப்புற வடிவத்தை போன்று இருக்கும். இதில் அடங்கியுள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நமக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது.

இந்த எண்ணெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை நிறைய நன்மைகளை நமக்கு அளிக்கிறது. வால்நட் ஆயில் ஏராளமான உடல் நல நன்மைகளோடு நமது சருமத்திற்கும் கூந்தலுக்குமே பயன்படுகிறது.

இந்த எண்ணெய் நமது உடல் உபாதைகளை குணப்படுத்துகிறது.

மேலும் இந்த ஆயிலை சமையலில், வெளிப்புற பயன்பாட்டிற்கு மற்றும் சாலட் போன்றவற்றிலும் பயன்படுத்தலாம்.

சரி வாங்க அப்படிப்பட்ட வால்நட் ஆயிலின் சில ஆரோக்கிய நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோய் வராமல் தடுப்பதோடு குணப்படுத்துதல்

நோய் வராமல் தடுப்பதோடு குணப்படுத்துதல்

நமது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. வால்நட் ஆயில் சாப்பிட்டு கொண்டு வந்தால் இதய நோய்கள் வராமல் தடுக்கலாம். மேலும் நமது இரத்த குழாய்களின் வேலையை சீராக்கி நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. மேலும் ஆஸ்துமா, எக்ஸிமா மற்றும் ஆர்த்ரிட்டீஸ் மற்றும் சீரண பிரச்சினைகள் போன்றவற்றை சரி செய்கிறது.

மலம் கழித்தலை சீராக்குகிறது. வால்நட் ஆயிலில் ஆன்டி பாக்டீரியல், பூஞ்சை எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள் போன்றவைகள் உள்ளன. மேலும் பூஞ்சை தொற்றுகளான படர்தாமரை, கேன்டிடா, பிறப்புறுப்பில் ஏற்படும் நமைச்சல் மற்றும் அத்தளட்ஸ் ஃபுட் போன்ற பிரச்சினைகளை அதன் பூஞ்சை எதிர்ப்பு பொருட்களால் சரி செய்கிறது.

இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. தசைகளின் வலி மற்றும் ஆர்த்ரிட்டீஸ் வலிகளை இந்த எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்வதன் மூலம் குறைக்கலாம்.

நினைவாற்றலை அதிகரித்தல்

நினைவாற்றலை அதிகரித்தல்

வால்நட் ஆயில் மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மூளை வயதாகுவதற்கான காரணிகளை தடுத்து மூளையின் நினைவாற்றல் மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது. அல்சீமர் நோய் மற்றும் நினைவாற்றல் பிரச்சினைகளை எல்லாம் சரி செய்கிறது.

எடை குறைதல்

எடை குறைதல்

உங்கள் தொப்பையை குறைக்க படாதபாடு பட்டுக் கொண்டு இருந்தால் அவர்களுக்கு வால்நட் ஆயில் நல்ல பலனை கொடுக்கும். உங்கள் தொப்பையை குறைப்பதோடு உங்கள் வயிற்றிற்கும் நல்ல வடிவத்தை கொடுக்கும். எனவே உங்கள் உடற்பயிற்சி பட்டியலில் இதையும் சேர்த்து கொண்டு பலன் பெறுங்கள்.

பொலிவான ஜொலிக்கும் சருமம் பெற

பொலிவான ஜொலிக்கும் சருமம் பெற

வால்நட் ஆயில் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இவை சருமத்தை புதுப்பிக்கவும் நிறம் கொடுக்கவும் உதவுகிறது. மேலும் கண்களை சுற்றி இருக்கும் வீக்கம், கருவளையம் மற்றும் களைப்பு போன்றவற்றை போக்குகிறது. மேலும் சரும சுருக்கங்கள் வருவதை தடுக்கிறது. சரும வறட்சியை தடுத்து பொலிவான அழகான சருமத்தை பரிசளிக்கிறது. சருமத்தில் உள்ள தழும்புகள் மற்றும் அடையாளங்களை போக்கி சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது. சருமம் வயதாகுவதை தடுத்து தள்ளிப் போடுகிறது. சோரியாஸிஸ் மற்றும் எக்ஸிமா போன்ற தீவிர சரும பிரச்சினைகளையும் குணப்படுத்துகிறது.

பளபளக்கும் கூந்தலுக்கு

பளபளக்கும் கூந்தலுக்கு

வால்நட் ஆயிலில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் செல்களின் பாதிப்பை சரி செய்து முடி உதிர்தலை குறைக்கிறது. மேலும் நமது தலைக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து பொடுகை போக்கிறது. எனவே நீங்கள் தொடர்ந்து இந்த வால்நட் ஆயிலை பயன்படுத்தி வந்தால் கூந்தலின் வளர்ச்சி மேம்பட்டு அழகான பட்டு போன்ற பளபளக்கும் கூந்தலை பெறலாம்.

நல்ல தூக்கத்தை வரவழைக்க உதவுகிறது :

நல்ல தூக்கத்தை வரவழைக்க உதவுகிறது :

அனிஸ்சிட்டி மற்றும் மன அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு உதவுகிறது. மேலும் இன்ஸோமினியா நோயாளிகளுக்கு மற்றும் ஒழுங்கற்ற தூக்க முறைகளை சரி செய்கிறது. தூக்கத்தை வரவழைக்கும் மெலடோனின் என்ற பொருள் இதில் இருப்பதால் நமக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

வயதாகுவதை தடுக்கிறது

வயதாகுவதை தடுக்கிறது

வால்நட் ஆயில் வயதாகுவதை தடுக்கும் ஒரு பொருள். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதாகுவதை தடுத்து சரும முதிர்ச்சியை தள்ளிப் போடுகிறது. சருமத்தில் உள்ள செல்கள் பாதிப்படைவதை எதிர்த்து போரிடுகிறது.

என்னங்க இனி கண்டிப்பாக உங்கள் பட்டியலிலும் வால்நட் ஆயில் இடம் பெற்று விட்டதா. இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இனி பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits of Walnut Oil

Health Benefits of Walnut Oil
Story first published: Saturday, February 10, 2018, 9:30 [IST]
Subscribe Newsletter