சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய ‘இனிப்பு’ எது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

சர்க்கரை தான் இன்றைக்கு பல நோய்களின் அடிப்படையாக இருக்கிறது, நம் உடலில் சர்க்கரை அதிகரித்தாலும் பிரச்சனை குறைந்தாலும் பிரச்சனை தான். நம்மை அதிகளவில் எச்சரிக்கும் நோய்களில் ஒன்றாக சார்க்கரை நோய் இருக்கிறது. வயது வித்யாசங்கள் இன்றி பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சர்க்கரை நோய் ஆபத்து ஒரு புறம் என்றால் நம் உடலில் ரத்தச் சர்க்கரையளவு அதிகரிப்பதால் இன்ன பிற உபாதைகளும் ஏற்படுகின்றன. அதனால் நம் உடலுக்கு மட்டுமல்ல உயிருக்கே கேடாய் முடிந்திடுகிறது, சர்க்கரை என்றால் வெள்ளைச் சர்க்கரையை மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதைத் தவிர வேறு என்னென்ன சர்க்கரைகள் எல்லாம் இருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு?

அப்படிப்பட்ட சர்க்கரைகளில் எது ஆரோக்கியமானது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
க்ரானுள் :

க்ரானுள் :

பெரும்பாலானோர் இதைத் தான் பயன்படுத்துகிறோம். அதிக முறை சுத்திகரிக்கப்பட்டிருக்கும். மிகவும் சிறியதுகளாக இருக்கும். இதனைத் தான் நாம் வொயிட் சுகர் என்று அழைக்கிறோம்.

கேஸ்டர் :

கேஸ்டர் :

கேஸ்டர் சுகர் என்பது பவுடர் வடிவில் இருக்கும். க்ரானுள் சுகரை பொடித்தால் இந்த வகை கிடைக்கும். இது மிகவும் எளிதில் கரைந்திடும். சிரப்,காக்டெயில் போன்றவை தயாரிக்க இதனை பயன்படுத்துவார்கள்.

கான்ஃபெக்‌ஷனர்ஸ் :

கான்ஃபெக்‌ஷனர்ஸ் :

இதுவும் ஒரு வகை வொயிட் சுகர் தான். இதில் குறிப்பிட்ட அளவு கார்ன் ஸ்ட்ராச் சேர்க்கப்பட்டிருக்கும். ஐஸ் செய்வதற்கும் ஒரு பொருளை உறைய வைக்கவும் இந்த வகை சர்க்கரை பயன்படுத்தப்படும்.

பியர்ல் :

பியர்ல் :

வொயிட் சுகரை விட சற்று பெரிதாக இருக்கும். சில நேரங்களில் இதற்கு நிறமும் ஏற்றியிருப்பார்கள்.மிக அதிகமான வெப்பத்தில் இது உருகாத வண்ணம் இருப்பதால் குக்கீஸ்களில் அழகுக்காக சேர்ப்பார்கள்.

சேண்டிங் :

சேண்டிங் :

இது பொதுவாக அலங்காரத்திற்கு மட்டுமே சேர்க்கப்படும்.இது ரெயின்போ வண்ணங்களில் கிடைக்கும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள்,குக்கீஸ் போன்றவற்றில் அழகுக்காக இதனை சேர்ப்பார்கள்.

Image Courtesy

வகைகள் :

வகைகள் :

இதைத் தவிர கரும்புச் சர்கக்ரை, கருப்பட்டி,தேன் ஆகியவை கிடைக்கும். இதனை எப்போதாவது நாம் பயன்படுத்துவோம். பெரும்பாலானோர் பயன்படுத்துவது மேலே சொன்ன வகைகளைத் தான். நம் எல்லாருடைய வீடுகளிலும் வெள்ளைச் சர்கக்ரையின் பயன்பாடு தான் அதிகம். சர்க்கரையை குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் வெள்ளைச் சர்க்கரையை எடுத்துக் கொள்ளும் அளவை மட்டும் குறைத்துக் கொள்வோம்.

ஆனால் நாம் சாப்பிடும் பிற பொருட்களில் மறைமுகமாக சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரை?

Image Courtesy

எல்லா இனிப்பும் ஆபத்து தான்! :

எல்லா இனிப்பும் ஆபத்து தான்! :

இன்னும் சிலரோ வெள்ளைச் சர்க்கரை மட்டும் தான் ஆபத்து கருப்பட்டி, தேன் போன்றவை எல்லாம் கெமிக்கல் சேர்க்காதது அதனால் அதனைச் சாப்பிடுவதால் எந்த தீங்கும் ஏற்படாது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவும் தவறானது. இயற்கையாக கிடைத்ததோ அல்லது கெமிக்கல் சேர்க்கப்பட்டதோ சர்க்கரைக்கான குணாதிசயங்கள் அதில் இருக்கிறது அது நம் ரத்தச் சர்க்கரையளவை அதிகப்படுத்திடும் என்பதை ஒரு போதும் மறந்து விட வேண்டும்.

சரி, இனிப்பு வகைகளில் நீங்கள் பயன்படுத்த தகுதியானது அன்று அதன் குணாதிசயங்களை வைத்து ஓர் அவசியமான பட்டியல்.

ஸ்டீவியா :

ஸ்டீவியா :

இதில் கலோரி குறைவு. ஸ்டீவியா என்ற செடியில் இருக்கும் இலைகளின் மூலமாக இந்த இனிப்பு தயாரிக்கப்படுகிறது.இது உங்கள் ரத்தச் சர்க்கரையளவை உடனடியாக எக்கச்சக்கமாக அதிகரிக்கச் செய்யாது.

இதில் சில ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி துகள்களும் சேர்க்கப்பட்டிருப்பதால் , உங்கள் உடலில் சேரும் அதிகப்படியான கலோரியை குறைக்க உதவிடும்.

இதனை அளவுக்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாம். ஒரு கட்டத்தில் இது அடிக்‌ஷனை ஏற்படுத்திடும்.

Image Courtesy

தேன் :

தேன் :

தேனில் ஆண்ட்டி மைக்ரோபியல் மற்றும் ஆண்ட்டி பாக்டீரியல் துகள்கள் இருக்கின்றன. வெள்ளைச் சர்க்கரையை விட இது ஆபத்து குறைவு தான். இதிலும் கட்டுப்பாடு அவசியம். இதற்கு அடுத்த இடத்தில் கருப்பட்டி இருக்கிறது.

தேன் நல்லது தானே என்று சொல்லி அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

தேங்காய் சர்க்கரை :

தேங்காய் சர்க்கரை :

தேங்காயிலிருந்து தயாரிக்கப்படும் இந்தச் சர்க்கையில் சுர்கோஸ் மற்றும் இன்னபிற நியூட்ரியன்ஸ்கள் கலந்திருக்கும் . தேங்காய் துருவலில் இருந்து இது தயாரிக்கப்படும் அதிகமான சுத்திகரிப்பு முறை இதில் இருக்காது. நாம் பயன்படுத்தும் கரும்புச் சர்க்கரை வண்ணத்திலேயே இது இருக்கும்.

இதில் மக்னீசியம், பொட்டாசியம்,இனுலின் மற்றும் ப்ரீபயோடிக் ஃபைபர் கலந்திருக்கும்.

இது அதிக கலோரி கொண்ட இனிப்பு.இதனை அதிகமாக எடுத்துக் கொண்டால் உங்கள் சருமத்தில் இருக்கக்கூடிய கொலாஜனை குலைக்கூடியது.

கரும்புச் சர்க்கரை :

கரும்புச் சர்க்கரை :

கரும்புச் சாறிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. வெள்ளைச் சர்க்கரையும் இதிலிருந்தே தயாரிக்கப்பட்டாலும். வெள்ளை நிறத்திற்காகவும் நீண்ட காலம் வர வேண்டும் என்பதற்காகவும் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

பல கட்டங்களில் அவை சுத்திகரிக்கப்பட்டு அதிகளவிலான இனிப்பு சேர்க்கப்படுகிறது.

ஸ்வீட்னர் :

ஸ்வீட்னர் :

செயற்கையான இனிப்பூட்டிகள் இவை. நாம் வாங்கிடும் பாக்கெட் உணவுகளில் எல்லாம் இதனைச் சேர்த்திருப்பார்கள். ஸ்வீட்னர் என்றதும் வேறு எதோ என்று நினைத்து விடாதீர்கள். இதுவும் ஒரு வகை சர்க்கரை தான்.

இது நேரடியாகவே கெமிக்கல் சேர்த்திருக்கிறோம் என்பதை ஓப்பன் ஸ்டேட்மெண்ட்டாக கொடுப்பது போலாகும்.அதை தவிர்ப்பது நல்லது.

சரி, சர்க்கரையை பார்த்து பார்த்து சேர்த்துக் கொண்டாலும் நம் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து விட்டது என்பதை எதை வைத்து கண்டுபிடிப்பது என்று தெரியுமா? அதற்கான சில அறிகுறிகள்.

சோர்வு :

சோர்வு :

உடலுக்கு தேவையான சர்க்கரையை எனர்ஜியாக எடுத்துக் கொண்டது போக நிறைய குளுக்கோஸ் உடலில் இருந்தால் அது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். அதிக சோர்வாக இருந்தால் உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்துவிட்டது என்று புரிந்து கொள்ளுங்கள்.

 நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

உடலில் அதிகரித்துள்ள சர்க்கரையளவு நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்திடும்.இதனால் அடிக்கடி காச்சல், சளி போன்றவை ஏற்படும். அதிகமான இனிப்பு உணவுகளை தேடித்தேடி எடுத்துக் கொள்கிறீர்கள் என்றாலும் உங்கள் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டது என்று அர்த்தம்

சருமப் பிரச்சனை :

சருமப் பிரச்சனை :

சருமத்தில் அடிக்கடி அலர்ஜி, சருமம் வறண்டு போதல், சரும வறட்சி போன்றவை ஏற்ப்பட்டால் கூட அது உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து விட்டதற்கான காரணமாக இருக்கலாம்.

சருமப் பிரச்சனைக்கு வேரில் உள்ள சிக்கலை தீர்க்காமல் மேலோட்டமாக சிகிச்சை எடுத்துக் கொண்டால் அது மேலும் மேலும் பாதிப்புகளை அதிகப்படுத்தும்.

பற்கள் :

பற்கள் :

பல்வலி அல்லது வாய்துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் அடிக்கடி ஏற்ப்பட்டால் கூட உடலில் சர்க்கரையளவு எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் உடலில் உள்ள எனர்ஜி வேகமாக காலியாகும்.

தொப்பை :

தொப்பை :

உடலில் குளுகோஸ் அளவு அதிகரிக்கும்போது இன்சுலினும் அதிகரிக்கும் நிலை உண்டாகிறது. அதனால் கொழுப்பு வளர்சிதை மாற்றம் குறைந்து வயிற்றில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிடும். இதுவே தொப்பை உருவாகக் காரணமாகிவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

which type of sugar is best for diabetic patients

which type of sugar is best for diabetic patients
Story first published: Monday, December 4, 2017, 14:52 [IST]