ஒரு வாரம் தொடர்ந்து மலம் கழிப்பது கடினமாக இருக்கிறதா? இதற்கான காரணங்கள் என்னென்ன?

Posted By:
Subscribe to Boldsky

கடன்களில் அதிக தொல்லை தருவது காலை கடன் தான். அதிகமாக வந்தாலும் தொல்லை தான், வராமல் போனாலும் தொல்லை தான். சில சமயங்களில் வரும் ஆனால் மிகுந்த வலி உண்டாக்கும். மலம் கழிக்க அக்கப்போர் நடத்துவது மிகவும் கொடுமையானது.

ஏன் சில சமயம் மலம் கழிப்பதில் கடினமான உணர்வு ஏற்படுகிறது? இதற்கான காரணங்கள் என்ன? என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்து!

நார்ச்சத்து!

நீங்கள் உட்கொள்ளும் உணவில் நார்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் திடீரென மலம் கழிப்பதில் கடினம் உண்டாகலாம்.

நீர்!

நீர்!

நீங்கள் சரிவர நீர் அருந்தாமல் இருப்பதன் காரணத்தால் கூட மலம் கழிப்பது கடினமாகும் என செரிமனாம் மற்றும் குடல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

டயட் மாற்றம்!

டயட் மாற்றம்!

ஏதனும் மருத்துவம் அல்லது உடல் எடை குறைப்பு (அல்லது) தவறான டயட்டின் தாக்கத்தால் கூட மலம் கழிப்பதில் கடினமாக மாறலாம்.

ஆசனவாய்!

ஆசனவாய்!

மலம் கழிப்பதில் கடினம் ஏற்படும் போது ஆசனவாய் பகுதி சருமத்திலும் தாக்கம் உண்டாகும். இதன் காரணத்தால் மலம் கழிக்கும் போது வலி, இரத்தம் வருதல் கூட உண்டாகலாம்.

இயல்பு!

இயல்பு!

இது போன்ற காரணத்தால் மலம் கழிப்பதில் பிரச்சனை உண்டாவதும், வலி ஏற்படுவதும் இயல்பு தான். இதை உணவு முறை மாற்றத்திலேயே சரி செய்துவிடலாம். இதை எண்ணி அச்சம் கொள்ள தேவையில்லை. அதிக இரத்தம் வருதல் அல்லது ஒரு வாரத்திற்கும் மேல் இது போன்ற உணர்வு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What does hard stool for 1 week indicate & how to manage it

What does hard stool for 1 week indicate & how to manage it?
Story first published: Monday, January 9, 2017, 16:21 [IST]
Subscribe Newsletter